சர்வம் படப்பிடிப்பு தளத்தில் இருவர் பலி

அஜீத்தின் பில்லாவை அடுத்து விஷ்ணுவர்த்தன் இயக்கும் படம் சர்வம். ஆர்யா ஹீரோவாக நடிக்கும் இப்படத்திற்காக செட் போடும் வேலைகள் சென்னை மவுண்ட் ரோடு அருகில் அமைந்துள்ள ஒரு கட்டிடத்தில் நடைபெற்று வந்தது.

பல வருடங்களாக நீதிமன்ற வழக்கில் இருக்கும் இக்கட்டிடம் அவ்வப்போது சினிமா படப்பிடிப்புக்கு மட்டும் வாடகைக்கு விடப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை அங்கு செட் வேலைகள் செய்து கொண்டிருந்த இருவர் லிப்ட் அறுந்து விழுந்து பலியாகிவிட்டார்கள்.

மனோஜ் என்பவர்தான் இப்படத்தின் ஆர்ட் டைரக்டராம். திரையுலகை உலுக்கியுள்ள இந்த சம்பவத்தையடுத்து, அங்கு விரைந்த திரைப்படத்தின் பல்வேறு அமைப்பை சேர்ந்த முக்கியஸ்தர்கள் விபத்து எவ்வாறு நடந்தது என்பதை கவலையோடு விசாரித்து வருகிறார்கள். காவல் துறையும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.

No comments: