நேர்கோட்டுப் பாதையில் இல்லாத பொருட்களைப் படம் பிடிக்கும் கமரா....!

நேர்கோட்டுப் பாதையில் இல்லாத பொருட்களைப் படம் பிடிக்கக்கூடிய கமராவை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளார்கள்.

இந்தக் கமராவில் இருந்து வெளியாகும் லேசர் ஒளிக்கற்றைகள் சுவர் போன்ற வஸ்துக்களில் தெறித்து, படம்பிடிக்கப்பட வேண்டிய பொருளை ஒளிரச் செய்யும். அந்த ஒளிர்வின் மூலம் சுவர் போன்ற வஸ்துக்களில் தெறிக்கும் பிம்பங்களைப் பதிவு செய்வது கமராவின் தொழில்நுட்பமாகும். இதன் மூலம், அறையின் வெளியே இருக்கும் கமராவின்; மூலம்; அறையின் உள்ளே இருக்கும் பொருளை படம் பிடிக்கலாம்.

இது எக்ஸ் கதிர்கள் இல்லாமல் எக்ஸ்-ரே படம் பிடிக்கும் தொழில்நுட்பம் போன்றதாகுமென மசசூசெட்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் ரமேஷ் ரஸ்கர் தெரிவித்தார்

iPhone மற்றும் iPad இல் இசைக்கருவி போல இசைக்கலாம்....!

இசைக்கருவிகள் ஏதுமின்றி விட்ஜெட்கள் எனப்படும் அமைப்புகளால் ஐ.ஃபோன் மற்றும் ஐ. பேட் களில் இசையை மீட்டி அதிசயக்க வைத்திருக்கிறார்கள் அமெரிக்காவின், ஜியார்ஜியாவை சார்ந்த North Point Community Church குழுவினர்.

இதற்கென்றே இவர்கள் i band என்ற இசைக்குழுவினையும் வைத்திருக்கிறார்கள். மொபைல் ஃபோன் கண்டுபிடித்ததையே எப்படி கண்டுபிடித்தார்கள் என நினைக்கையில் தலைசுற்றும் போது i phone, i pad களில் widget வைப்பதற்கு எப்படியெல்லாம் யோசித்திருப்பார்கள் என்பதை நினைத்தால் தலை மேலும் சுற்றுகிறது. அதிசயிக்க வைக்கிறார்கள்.

மூன்று கிறிஸ்துமஸ் பாடல்களை இசைக்கருவிகளே இல்லாமல் மீட்டி வாயை பிளக்க வைத்து விட்டார்கள். நீங்களும் பாத்து வியக்க வேண்டிய நேரமிது.


Windows XP and Vista - உங்களுக்கு சில தகவல்கள்

விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் விஸ்டா இயக்கத் தொகுப்புகளைப் பயன்படுத்துவோருக்கு சில ரகசிய ட்யூனிங் டிப்ஸ் இங்கு தரப்படுகின்றன.

இவை நம் இயக்க வேகத்தினை அதிகப்படுத்துவதுடன், நம் செயல்பாட்டிலும் சுவராஸ்யத்தை தரும். நேரம் மிச்சம், திறன் அதிகரிப்பு, விண்டோஸ் தோற்ற மேம்பாடு ஆகியவை இந்த டிப்ஸ்களின் நோக்கம். இவற்றால் உங்கள் கம்ப்யூட்டருக்கு எந்த கேடுதலும் ஏற்படாது என்றாலும், உங்கள் முக்கியமான பைல்களுக்கு பேக் அப் எடுத்து வைத்துக் கொண்டு இந்த டிப்ஸ்களை இயக்கிப் பார்க்கவும்.

இந்த டிப்ஸ்களில் கண்ட்ரோல் பேனல் குறிக்கும் குறிப்புகள், உங்கள் கம்ப்யூட்டரில் கண்ட்ரோல் பேனல் கிளாசிக் வியூவில் இருப்பதாக எடுத்துக் கொண்டு தரப்படுகின்றன. ஸ்டார்ட் மெனு கிளிக் செய்து, கண்ட்ரோல் பேனல் சென்று, இடது மேலாக உள்ள ஒரு லிங்க்கில் கிளிக் செய்தால், கிளாசிக் வியூவிற்கு மாறிக் கொள்ளலாம்.

1. டாஸ்க் பார் ஐட்டம் அனைத்தையும் மொத்தமாக மூட (எக்ஸ்பி):

டாஸ்க்பாரில் ஒன்றுக்கு மேற்பட்ட ஐட்டங்களையும், போல்டர்களையும் வைத்திருக் கிறீர்களா? இவை அனைத்தையும் மொத்தமாக ஒரே கிளிக்கில் மூடலாம். கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு, ஒவ்வொரு ஐட்டமாக, டபுள் கிளிக் செய்திடவும். பின்னர், ஏதேனும் ஒன்றில் ரைட் கிளிக் செய்து, எழுந்து வரும் மெனுவில், குளோஸ் குரூப் (Close Group) என்பதில் கிளிக் செய்திடவும்.

2. சிஸ்டம் ரெஸ்டோர் இடத்தைப் பெற (எக்ஸ்பி):

உங்கள் ஹார்ட் டிஸ்க்கில் இடம் குறைவாக உள்ளது என்ற எச்சரிக்கைச் செய்தி வருகிறதா? எந்த ட்ரைவ் சென்று, எப்படிப்பட்ட பைல்களை நீக்கி இடம் மீட்பது என்று குழப்பமா? சிஸ்டம் ரெஸ்டோர் வசதிக்கென உள்ள இடத்தைக் குறைத்து, உங்கள் ஹார்ட் டிஸ்க் இடப் பிரச்னையைத் தற்காலிகமாக சமாளிக்கலாம். ஸ்டார்ட், கண்ட்ரோல் பேனல் சென்று, சிஸ்டம் ஐகானில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் விண்டோவில் ரெஸ்டோர் டேப்பில் கிளிக் செய்திடவும். அதில் உள்ள ஸ்லைடரைப் பயன்படுத்தி, எவ்வளவு ஹார்ட் டிஸ்க் இடத்தை மீட்கலாம் என்று பார்க்கவும். அடிக்கடி ஹார்ட் டிஸ்க்கில் உள்ள பைல்களுக்குப் பேக் அப் எடுக்கும் பழக்கம் உள்ளவராக இருந்தால், சிஸ்டம் ரெஸ்டோர் உங்களுக்குத் தேவை இல்லையே! எனவே இந்த வசதியை மொத்தமாக மூடிவிடலாம். இதற்கென ஒதுக்கப்பட்ட மொத்த இடமும் மிச்சமாகும்.

3. டாஸ்க் பாரில் வெப் ஷார்ட்கட் (விஸ்டா):

இணைய தளங்களை வேகமாகத் திறக்க, டாஸ்க்பாரில் உள்ள காலி இடத்தில், ரைட் கிளிக் செய்திடவும். எழுந்து வரும் மெனுவில் Toolbars என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அதில் உள்ள அட்ரஸ் ஆப்ஷனில் கிளிக் செய்திடவும். இங்கு உங்கள் இணைய தள முகவரியினை டைப் செய்திடவும். விண்டோஸ் இப்போது அந்த இணைய தளத்தினை, உங்கள் பிரவுசரைத் திறந்து இயக்கிக் காட்டும்.

4. ரீசைக்கிள் பின்னைத் தாண்ட:

அழிக்கப்படும் பைல்கள் ரீசைக்கிள் பின்னில் சென்று, அங்கு தொடர்ந்து இடத்தைக் கொண்டிருக்கும். இதனால் ஹார்ட் டிஸ்க் இடம் குறையலாம். எனவே ஒரு பைல் அறவே நீக்கப்பட வேண்டும். அது ரீசைக்கிள் பின்னுக்குச் செல்லக் கூடாது என எண்ணினால், ஷிப்ட் அழுத்தி டெலீட் கீயை அழுத்தி, அந்த பைலை முற்றிலுமாக நீக்கவும்.

5. கம்ப்யூட்டரை யார் ஷட் டவுண் செய்வது? (எக்ஸ்பி):

உங்கள் வீட்டில் அல்லது அலுவலகத்தில் உள்ள உங்களின் பெர்சனல் கம்ப்யூட்டரை, உங்களைத் தவிர மற்றவர்கள் ஷட் டவுண் செய்வதனைத் தடுக்க, ஸ்டார்ட், கண்ட்ரோல் பேனல் சென்று, Administrative Tools செல்லவும். இங்கு Local Policies என்பதில் டபுள் கிளிக் செய்திடவும். பின்னர் Security Options என்பதைத் தேர்ந்தெடுக்கவும். வலது புறம், ‘Shutdown: allow system to be shut down without having to log on’ என்று இருக்கும் இடம் சென்று அதில் டபுள் கிளிக் செய்திடவும். அதன் பின்னர் Disabled என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

6. டிஸ்க் ட்ரைவ் மூலம் நேரத்தை மிச்சப்படுத்த (எக்ஸ்பி):

உங்களுடைய சிடி அல்லது டிவிடி ட்ரைவிற்கான ஐகானை குயிக் லாஞ்ச் பாரில் வைக்கவும். இதற்கு மை கம்ப்யூட்டர் சென்று, சிடி/டிவிடி ஐகான இழுத்து வந்து, டாஸ்க்பாரில் குயிக் லாஞ்ச் ஏரியாவில் விடவும். இதன் மூலம், சிடியில் எழுதப்படக் காத்திருக்கும் பைல்களை, இந்த குயிக்லாஞ்ச் பாரில் உள்ள ட்ரைவ் ஐகானைக் கிளிக் செய்து பார்க்கலாம். ட்ரைவ் ட்ரேயினைத் திறக்கவும் செய்திடலாம். இதே போல எந்த ஒரு பைலுக்கும், போல்டருக்கும் ஷார்ட் கட் ஐகான்களை, குயிக் லாஞ்ச் பாரில் வைத்து இயக்கலாம்.

7. எர்ரர் ரிப்போர்ட் நிறுத்த (எக்ஸ்பி):

ஏதாவது புரோகிராம் கிராஷ் ஆகி, அதனை வலுக்கட்டாயமாக மூடிடுகையில், விண்டோஸ் இதற்கான ரிப்போர்ட்டைத் தயார் செய்து அனுப்பவா என்ற பிழைச் செய்தியினைக் காட்டும். இந்த பிழைச் செய்தியினைக் காட்டாமல் இருக்கும்படி விண்டோஸ் எக்ஸ்பி இயக்கத்தினை அமைக்கலாம். ஸ்டார்ட், கண்ட்ரோல் பேனல், சிஸ்டம் எனச் செல்லவும். அங்கு கீழாக உள்ள எர்ரர் ரிப்போர்டிங் பட்டனில் (Error Reporting) கிளிக் செய்திடவும். இங்கு இந்த பிழைச் செய்தி தோன்றுவதனை நிறுத்தவும், மீண்டும் இயக்கவும் செய்திடலாம்.

8.கீ போர்ட் ஷார்ட்கட் கீகள் (விஸ்டா):

பொதுவான சில இயக்கங்களை வேகப்படுத்தும் வகையில் விஸ்டா இயக்கம் பல ஷார்ட்கட்கீ தொகுப்புகளைக் கொண்டுள்ளது.

எடுத்துக்காட்டாக, விண்டோஸ் கீயினை அழுத்தியவாறே, ஸ்பேஸ் பார் தட்டினால், பின்னணியில் இருக்கும் ஸைட்பார், முன்னதாகக் கொண்டு வரப்படும். விண்டோஸ் கீயுடன் ‘T’ கீயை அழுத்தினால், டாஸ்க் பார் ஐட்டங்கள் ஒவ்வொன்றாகச் செல்லலாம். குயிக் லாஞ்ச் பாரில் உள்ள புரோகிராம்களை இயக்க, விண்டோஸ் கீயுடன், குயிக் லாஞ்ச் பாரில், திறக்கப்பட வேண்டிய புரோகிராம் எந்த இடத்தில் உள்ளதோ (1,2,3,4.. என) அந்த எண்ணை அழுத்தினால் போதும்.

9. கூடுதல் கடிகாரம் (விஸ்டா):

பன்னாடுகளின் அப்போதைய நேரத்தினை எப்போதும் அறிந்து கொள்ள விருப்பமா? நோட்டிபிகேஷன் ஏரியாவில் உள்ள கடிகாரத்தின் மீது ரைட் கிளிக் செய்திடவும். பின்னர் Adjust Date/Time’ என்பதனைத் தேர்ந்தெடுக் கவும். அடுத்து Additional Clocks என்பதில் கிளிக் செய்திடவும். இனி, ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கடிகாரங்களைக் காட்டுவதற்கான ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். ஒவ்வொரு கடிகாரத்திற்குமான நேர மண்டலத்தை அமைத்துப் பின்னர் ஓகே கிளிக் செய்திடவும். இனி திரையில், உங்களுக்குப் பிரியமானவர்கள் வசிக்கும் நாட்டின் கடிகாரம், அந்த நாட்டின் நேரத்தைக் காட்டியபடி இயங்கிக் கொண்டிருக்கும்.

10. ஹெல்த் ரிப்போர்ட் பெற (விஸ்டா):

கம்ப்யூட்டரின் ஹார்ட்வேர் மற்றும் பிற சாதனங்கள் குறித்த ஹெல்த் ரிப்போர்ட்டினைப் பெறும் வசதியினை விஸ்டா கொண்டுள்ளது. இதன் மூலம் நம் ஹார்ட்வேர் சாதனங்களின் தன்மையை அறிந்து கொள்ளலாம். ரிப்போர்ட் ஜெனரேட்டர் என்ற வசதியின் மூலம் இதனைப் பெறலாம். ஸ்டார்ட் கிளிக் செய்து, performance and information என டைப் செய்து, என்டர் தட்டவும். இங்கு இடது புறமாக உள்ள ‘Advanced tools’ என்பதில் கிளிக் செய்து, ‘Generate a system health report’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும். சிறிது நேரம் கழித்து, உங்கள் கம்ப்யூட்டரின் ஹார்ட் வேர் குறித்த ஹெல்த் ரிப்போர்ட் உங்களுக்கு பைலாகக் கிடைக்கும்.

112 வயதிலும் ஓய்வைப் பொருட்படுத்தாமல் உழைக்கும் "இளைஞர்"....!


சிதம்பரம் : யார் தயவுமின்றி, ஓய்வறியாமல் 112 வயது "இளைஞர்' ஒருவர் உழைத்து வருவது சிதம்பரத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கடலூர் மாவட்டம், சிதம்பரம் மணலூர் கெங்கையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாணிக்கம் (112). இவருக்கு மூன்று மகள்கள். அனைவருக்கும் திருமணம் செய்து கொடுத்து விட்டு, மனைவியுடன் வசித்து வந்தார்.

எட்டு ஆண்டுகளுக்கு முன் மனைவி இறந்து விட்டார். ஆனால், தனது மகள்கள் வீட்டில் தங்காமல் தள்ளாத வயதிலும், யார் தயவும் இன்றி தனியாக வசித்து வருகிறார். அதுமட்டுமின்றி அடுத்த வேளை சாப்பாட்டிற்கு அடுத்தவர்களை எதிர்பார்க்காமல் ஆடுகள் மேய்த்தும், தனக்கு தெரிந்த கயிறு திரிக்கும் தொழிலைக் கொண்டு அதில் கிடைக்கும் வருமானத்தில் காலத்தை ஓட்டி வருகிறார். ஆடு மேய்த்த நேரம் போக, கிழிந்த நைலான் சாக்குகளைக் கொண்டு கயிறு செய்து விற்பனை செய்து அப்பகுதி மக்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்துள்ளார்.

என்னால் முடியாதது ஒன்றும் இல்லை என வெறு மனே வாயால் கயிறு திரித்து உழைக்க விரும்பாமல், அடுத்தவர்களை நம்பியே காலத்தை ஓட்டும் இந்தக்கால இளைஞர்கள் மத்தியில், தள்ளாத வயதிலும், யாருடைய தயவையும் எதிர்பாராமல் உழைத்து சாப்பிடும் முதியவரை, இல்லை, இல்லை இந்த 112 வயது"இளைஞரை' நினைத்தால் பெருமைப்படாமல் இருக்க முடியாது.

பத்துதலை நாகம்.... உண்மை தகவலா....? இல்லை கணணி விளையாட்டா....?


முன்னைய காலப் புராணங்களான மகாபாரதம் மற்றும் வேறு சில வரலாற்றுக் கதைகளில் நாங்கள் பத்துத் தலை நாகங்களைப் பற்றி பல தகவல்களை அறிந்திருகிறோம். ஆனால் அண்மைக்காலமாக யாழ் தொல்புரம் பொக்கணைப் பகுதியில் பத்துத் தலை நாகம் ஒன்று உலாவிவருவதாக அங்கிருந்து வெளியாகும் சில இணையத் தளங்கள் மற்றும் பத்திரிகைகளில் செய்திகள் வெளியிடப்பட்டது. இந்த பத்துத் தலை நாகம் பற்றிய தகவல் எந்த அளவிற்கு உண்மைத் தன்மையைக் கொண்டிருக்கின்றது என்பதை அறியமுடியாதுள்ளது.

சமய நம்பிக்கை என்ற வகையில் பார்க்கப் போனால் ஒவ்வொருவரினதும் நம்பிக்கையைப் பொறுத்த வரையில் இது உண்மைத் தன்மையைக் கொண்டதாக இருக்கலாம். எனினும் அந்த செய்தி வெளியானதைத் தொடர்ந்து பலவிதமான விறுவிறுப்பான செய்திகளும் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன.

ஆனால் அது ஒருபுறம் இருக்க இந்த பத்துத் தலை நாகம் வெறும் கட்டுக் கதை என்றும், கணினி தொழில் நுட்ப வல்லுணர்களால் வடிவமைக்கப்பட்டதென்றும் பல்வேறு விதமான செய்திகளும் வெளியாகிய வண்ணமே இருக்கின்றது. ஆனால் தற்போது அதிலும் சில தவறுகளை எமது திறமைசாலிகள் கவனிப்பதில்லை. மேலே உள்ள படத்தை சற்று பார்ப்போமாயின் இரு நாகங்களின் நிழலிலும் எந்த வித வேறுபாடும் காணப்படவில்லை. அதாவது ஒரு தலை நாகத்தின் நிழல் சரியாக உள்ளது, ஆனால் பத்து தலை நாகத்தின் நிழல் ஒரு தலை பாம்பின் நிழல் போலவே உள்ளது. இந்நிலை எவ்வாறு சாத்தியமாகலாம்...? இது உண்மைக்கதையா...? இல்லை கணினியில் துல்லியமாக தொகுக்கக்கூடிய மென்பொருளான Photoshop இன் விளையாட்டா...? பொறுத்திருந்து தான் பார்ப்போம்.

மைகிரோசொப்ட் இன் அடுத்த பயணம் - விண்டோஸ் 8மைகிரோசொப்ட் நிறுவனம் தனது புதுவிதமான பயணங்களை தொடர்ந்தவண்ணம் உள்ளது. அந்த வகையில் தற்போது விண்டோஸ் 7 இலிருந்து தற்போது விண்டோஸ் 8 இக்கு தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது. விண்டோஸ் XP இல் இருந்து விண்டோஸ் விஸ்டா எனப்புதிதாக தனது ஆக்கத்தை அறிமுகப்படுத்தி அதில் ஒரு கரைகண்டு பின்னர் விண்டோஸ் 7 இற்கு அதை புதுப்பித்து அதில் தனது பயணத்தை தொடர்ந்தது. தொடர்கிறது. ஆம் இன்னும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் விண்டோஸ் 8 யும் அறிமுகப்படுத்தியுள்ளது. என்னும் புதிய புதிய ஆக்கங்களை மைகிரோசொப்ட் உலகத்தில் ஆக்கியவண்ணம் உள்ளது. இனி வரப்போகும் ஆக்கங்கள் எப்படி அமையப்போகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்...!

குற்றவாளியாக்கும் "கோவம்"

கோபம் ஏன் வருகிறது என்பதை புரிந்து கொண்டாலே அதிலிருந்து மீண்டு விடலாம். கோபத்திற்கு காரணம் மனஅழுத்தம்.

இன்றைய நெருக்கடியான வாழ்க்கைச் சூழலில் யார்தான் மனஅழுத்தம் இல்லாமல் இருக்கிறார்கள்? காலமும், சூழலும் கோபத்திற்கு அடிப்படை காரணமாக அமைகிறது.

இயந்திர கதியில் இயங்கும் நமக்கு ஒரே நேரத்தில் பல விஷயங்களைச் செய்ய வேண்டி இருக்கிறது. அவற்றை குறித்தநேரத்தில் செய்ய முடியாமல் போகும்போது நமக்குள் மன அழுத்தம் தவிர்க்க முடியாததாகி விடுகிறது. இதனால், மனதில் வெறுப்பு தோன்றுகிறது. அந்த வெறுப்பே கோபமாக வெளிப்படுகிறது. சந்தோஷத்தைக் கெடுக்கிறது. எனவே கோபத்தை அடக்கி கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டியது சந்தோஷ வாழ்க்கைக்கான முக்கியத் தேவையாகிறது!

நம்மை நாமே வெறுக்க நமக்குள் எழும் கோபமே போதுமானது. நீங்கள் எந்த ஒரு காரியத்தையும் `சீரியசாக' எடுத்துக் கொள்ளாமல் சாதாரணமாக எடுத்துக் கொண்டு பரபரப்பின்றி அமைதியாக அணுகிப் பாருங்கள். மனஅழுத்தம் நெருங்காது. மொத்த வேலைகளையும் ஒரே நேரத்தில் போட்டு குழப்பிக் கொண்டிராமல் முக்கியமானதை முதலிலும், முக்கியமல்லாதவற்றை சாவகாசமாகவும் செய்யுங்கள். இதனால் மன உளைச்சலை தவிர்த்துவிட முடியும்.

சில வேலைகள் நீண்டகாலம் இழுத்துக் கொண்டு போகும். அந்த தாமதம் சில நேரங்களில் எரிச்சலைக் கிளப்பும். அப்போது உங்களால் கோபப்படாமல் இருக்க முடியாதுதான். எனினும் கோபம் என்பது மற்ற உணர்வுகளைப் போன்று சாதாரண உணர்வுதான் என்று புரிந்துகொண்டு அந்த கோபத்தினையும் பக்குவமாக வெளிப்ப்படுத்துவது புத்திசாலித்தனம்.

நீங்கள் எதையும் குறித்த நேரத்தில் செய்யாமல் சோம்பல் மிகுந்தவராக இருந்தால் வழக்கமாகச் செய்ய வேண்டிய காரியங்களை உங்களால் நிறைவேற்ற முடியாது. அது உங்களுக்கு மனஉளைச்சலையும் வெறுப்பையும் ஏற்படுத்தும். அதனால் முக்கியமான வேலைகளை முறையாகச் செய்யாமல் கடைசி நேரத்தில் அவசரம் அவசரமாக செய்து பிரச்சினைக்குள்ளாவீர்கள்.

"வேலைக்கு கிளம்பும்போது கடைசி பஸ், ரெயிலை தவறவிட்டுவிட்டால் மனஅழுத்தம் ஏற்படுகிறதா? அலுவலகத்தில் உயர் அதிகாரியோ, உடன் பணிபுரிபவரோ உங்களை குறை சொன்னால் உணர்ச்சிவசப்படுகிறீர்களா? உறவினர்கள், நண்பர்கள் உதாசீனப்படுத்துவதாக நினைத்து கலங்குகிறீர்களா? அவர்களுக்கு எப்படியெல்லாம் உதவினேன் என்று உள்ளக் குமுறல் கொள்கிறீர்களா? இப்படி நீங்கள் உணர்ச்சி வசப்பட்டால் உங்களுக்கு எளிதாக கோபம் வந்துவிடும்.

கோபம் ஏற்படுவதற்கான உள்ளார்ந்த அடிப்படைக் காரணங்களை நீங்கள் புரிந்து கொண்டால் அவற்றிலிருந்து உங்களை எளிதாக விடுவித்துக் கொள்ள முடியும். கோபம் ஏற்படும் சூழ்நிலைகளைத் தெரிந்து அவற்றிலிருந்து விலகியிருக்கச் சொல்லும் உங்கள் அறிவுதான் உங்களது கோபத்தினை அடக்குவதற்கான முதற்படியாகும்.

கோபப்படும்போது உங்கள் உடலில் ஏற்படும் அங்க அசைவுகளைக் கவனியுங்கள். நரம்புகள் முறுக்கேறுதல், அதிகப்படியான இதயத்துடிப்பு, வியர்வை வழிந்தோடல் ஆகியவற்றினை கோபப்படும்போது உணரலாம். இத்தகைய அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கும் போதே நீங்கள் கோபத்தினை அடக்க முயற்சி செய்வது நல்லது.

கோபம் ஏற்படும் இம் மாதிரியான சூழ்நிலைகளில் இருந்து விலகி நீங்கள் வேறு இடத்திற்கு சிறிதுநேரம் கால்நடையாக உலாவச் செல்லலாம். உங்கள் நண்பர்களுள் ஒருவரைச் சந்தித்து சிறிது நேரம் அரட்டையடிக்கலாம். அல்லது நாம் இனிமேல் கோபப்படவே கூடாது என்று உங்களுக்குள்ளாகவே உறுதிமொழி எடுத்துக் கொள்ளலாம். கோபம் தான் சிறைகளை நிரப்புகிறது. கோபம் தான் நல்ல மனிதர்களையும் குற்றவாளிகளாக்குகிறது என்பதை உணருங்கள்.

எனவே கோவத்தை விட்டொழித்து சாந்தமாக வாழ முயற்சி செய்யுங்கள், உலகம் உங்கள் காலடியில் சுழலும். வாழ்க்கை தித்திப்பாகும்.