சிங்கம் கிடைக்காததால் வில்லு டைட்டில்..........

சிங்கம் டைட்டில் கிடைக்காததால் வில்லு என்ற பெயரோடுபடப்பிடிப்பையும் துவங்கிவிட்டார் பிரபுதேவா. பொருத்தமாக இருக்கும் என்றுதான் சிங்கத்தை பிடிக்க முயற்சி செய்தார் விஜய். ஆனால், இந்த டைட்டிலை வைத்திருக்கும் இயக்குனர் ஹரி, பிடிவாதமாக இருந்துவிட்டதால், வேறு டைட்டிலுக்கு தாவினார்கள் பிரபுதேவாவும், விஜயும்.

வில்லு என்ற பெயரை அறிவித்தவுடன், வில் என்ற டைட்டில் வைத்திருந்த எஸ்.ஜே.சூர்யா, மகிழ்ச்சியோடு இந்த டைட்டிலை விட்டுக் கொடுத்ததாக செய்திகள் கசிந்தன. அதை நம்புகிற விதமாக அடிக்கடி விஜயை சந்தித்து கதை சொல்ல நேரமும் கேட்டுக் கொண்டிருந்தார் சூர்யா.

டைட்டில் கொடுத்தால், கால்ஷீட் கொடுப்பார் என்ற நம்பிக்கையில் விட்டுக் கொடுத்துவிட்டாரோ என்ற எண்ணத்தையும் விதைத்தது இந்த வில்லு மேட்டர். ஆனால் உண்மை அதுவல்லவாம்.

வில் என்ற டைட்டில் சூர்யாவிடம் இருப்பது தெரிந்தே வில்லு என்று வைத்து விட்டார்களாம். சூர்யாவிடம் கேட்டால், கொடுப்பாரோ, மாட்டாரோ என்ற ஐயம் இருந்ததால் இப்படி குறுக்கு வழியை கடை பிடித்ததாக கூறுகிறார்கள்.

சூர்யா தரப்பில் என்ன சொல்லப்படுகிறது? "எந்த டைட்டிலில் நடிக்கலாம் என்று நாள் கணக்கில் யோசிக்கலாம். தவறேயில்லை. ஆனால் எந்த டைட்டிலை அடிக்கலாம் என்று யோசிக்கிறாங்களே... என்ன செய்வது" என்றாராம். அட, சின்னப்புள்ள தனமா இருக்கே!

No comments: