நல்ல தூக்கம் எடையை குறைக்கும்

அதிக நேரம் தூங்கினால், எடை குறையும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. வாஷிங்டனில் உள்ள வால்டர் ரீட் ராணுவ மருத்துவ மையத்தில் சர்வதேச டாக்டர்கள் மற்றும் நிபுணர்கள் குழுவினர் நடத்திய ஆய்வில் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வால்டர் ரீட் மருத்துவமனையை சேர்ந்த நர்ஸ்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டதில், நன்றாக தூங்குவோரை விட, குறைந்த நேரம் தூங்குவோருக்கு எடை அதிகரிப்பது தெரியவந்துள்ளது.

குறைந்த நேரம் தூங்குவோருக்கு, பசி அதிகரித்து, அதிகளவில் உட்கொள்கின்றனர். வளர்சிதை மாற்றத்தின் போது, அவர்களின் எடை அதிகரிக்கிறது என்பது நிரூபணமானது.

பன்றிக்காய்ச்சலை துளசி குணப்படுத்தும்; ஆயுர்வேத நிபுணர்கள் தகவல்

உலகை மிரட்டிக் கொண்டிருக்கும் அதி பயங்கர நோய்களுள் பன்றிக்காய்ச்சலும் ஒன்று. இந்தக் காய்ச்சல் மிக வேகமாக பரவும் தன்மை உடையதால் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் மக்கள் முக கவசம் அணிந்து வெளியில் செல்கிறார்கள்.

இப்படிப்பட்ட பன்றிக்காய்ச்சலை துளசி இலைகள் ஒன்றிரண்டு நாட்களில் விரட்டி அடித்து விடும் என்கிறார்கள் இந்தியாவின் புகழ் பெற்ற ஆயுர்வேத நிபுணர்கள்.

பிரபல ஆயுர்வேத நிபுணர் டாக்டர் யு.கே.திவாரி கூறும் போது, வைரஸ் மூலம் பரவும் தொற்று நோய்களை "துளசி" மூலம் எளிதில் குணப்படுத்த முடியும். இதே போல் பன்றிக்காய்ச்சலை குணப்படுத்துவதும் எளிது.

துளசி இலைகள் சாப்பிட்டால் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். உடலில் உள்ள தொற்று நோய் கிருமிகளும் அடியோடு ஒழியும் என்றார்.

குஜராத் மாநிலம் ஜாம் நகரில் உள்ள குஜராத் ஆயுர்வேத பல்கலைக் கழகத்தை சேர்ந்த டாக்டர் புபேஸ் பட்டேல் கூறும்போது:-

"துளசி" இலைகள் மூலம் பன்றிக் காய்ச்சலை மிக எளிதாக குணப்படுத்தி விடலாம். இக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் 20 அல்லது 25 துளசி இலைகளை தினமும் 2 தடவை சாப்பிட வேண்டும்.

இந்த இலைகளை வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லது. இப்படி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி பல மடங்கு அதிகரிக்கும். நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால் எந்தவித தொற்றுக்கிருமியாலும் நம்மை எதுவும் செய்ய முடியாது என்றார்.

குளோனிங் நாய்

தென் கொரியாவில் இருக்கும் சியோல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு விஞ்ஞானிகள் குழு மரபணு மாற்றம் செய்யப்பட்ட உலகின் முதல் `குளோனிங்' நாய்க் குட்டியை உருவாக்கி சாதனை படைத்துள்ளது. இதற்கு `ரப்பி' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேலும் 4 நாய்க் குட்டிகளும் இதனுடன் பிறந்துள்ளன.

ரப்பியும் மற்ற நாய்க்குட்டிகளும் புற ஊதா வெளிச்சத்தில் சிவப்பு நிறத்தில் ஒளிர்கின்றன. இதற்கு அவற்றின் தோலிலும், உரோமங்களிலும் இருக்கும் ஒரு விதமான புரோட்டீன் தான் காரணம்.

மனிதனுக்கு உண்டாகும் பல நோய்களுக்கான மருந்து, அவற்றின் தன்மை போன்றவற்றை நாய்களின் மூலம் சோதனை செய்யும் வழக்கம் ஏற்கனவே இருந்து வருகிறது. புற்றுநோய் ஆராய்ச்சியில் இந்தப் புதிய `குளோனிங்' வரவுகள் முக்கியப் பங்கு வகிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாய்களின் கருமுட்டையை எடுத்து அதில் ஒரு வைரஸ்ஸை ஊடுருவச் செய்தார்கள். அந்த வைரஸ், ஒளிரக் கூடிய ஒரு மரபணுவை கருமுட்டையின் உட்கருவில் இணைத்தது. இந்த உட்கருவை மட்டும் தனியே பிரித்து எடுத்தார்கள். மற்றொரு நாயின் கருமுட்டையில் இருக்கும் உட்கருவை நீக்கிய பின் அதனுள் தனியே பிரித்து எடுக்கப்பட்ட உட்கருவை உட் செலுத்தினார்கள். பின் இந்தக் கரு முட்டையையும் வெளியே எடுத்து ஒரு வாரகாலத்திற்கு சோதனைச் சாலையில் வைத்திருந்தார்கள். அதற்குப் பின்னால் இந்தக் கருமுட்டையை வேறொரு நாயின் கருப்பையில் விதைத்தார்கள்.

இந்த முறையில் சுமார் 344 கருமுட்டைகள் 20 நாய்களின் கருப்பைகளில் விதைக்கப்பட்டன. பெரும்பாலான கருக்கள் வளராமல் போனாலும் 7 கருக்கள் மட்டும் உருவாகின. அவற்றில் ஒரு கரு முழுவதும் வளர்வதற்கு உள்ளாகவே அழிந்துவிட்டது. மற்றொரு கரு வளர்ந்து நாய்க்குட்டியாகப் பிறந்து சில வாரங்களில் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்து போனது. கடைசியில் 5 நாய்கள் மட்டுமே உயிர் பிழைத்துள்ளன. 5 நாய்களும் தற்போது ஆரோக்கியமாக துள்ளிக் குதித்து விளையாடி காண்பவர் உள்ளங்களைக் கொள்ளை கொண்டு வருகின்றன.

எலி போன்ற மற்ற விலங்குகளுடன் ஒப்பிடும்போது மனிதர்களுக்கு இருப்பது போலவே நாய்களின் சராசரி வாழ்நாள் அதிகமாக உள்ளன. எனவே அவற்றை ஆராய்ச்சியில் ஈடுபடுத்துவதன் மூலம் மனிதனுக்கு ஏற்படும் பல்வேறு உடல் சார்ந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்று நம்பப்படுகிறது.

தென்கொரியாவைச் சேர்ந்த இதே ஆராய்ச்சியாளர்கள் தான் `குளோனிங்' மூலம் உருவாக்கப்பட்ட `ஸ்னப்பி' என்ற பெயருள்ள உலகின் முதல் நாயை கடந்த 2005-ம் வருடம் உருவாக்கி சாதனை படைத்தார்கள். அதற்கும் மேலாக, தற்போது மரபணு மாற்றம் செய்யப்பட்ட நாய்க்குட்டிகளையும் `குளோனிங்' முறையில் உருவாக்கி வியக்க வைத்திருக்கிறார்கள்.

`ககோவ்' என்ற பறவை பெர்முடா பெட்ரல்

`ககோவ்' என்ற பறவை பெர்முடா பெட்ரல் என்றும் அழைக்கப்படுகிறது. காரணம் இது பெர்முடா தீவுகளில் மட்டும் காணப்படுகிறது. இந்தப் பறவை இயற்கை ஆய்வாளர்களுடன் கடந்த 300 ஆண்டுகளாக `கண்ணாமூச்சி' விளையாடி வந்திருக்கிறது. இந்தப் பறவை இனம் முற்றிலுமாக அழிந்துவிட்டது என்று நினைக்கப்படும் போதெல்லாம் சில பறவைகள் கண்ணில் தென்படும்.

ஒரு காலத்தில் பெர்முடா தீவுகளில் மிக அதிகமாகக் காணப்பட்ட இப்பறவைகள், இங்கு குடியேறிய ஆங் கிலேயர்களுக்கு நல்ல உணவாகின. குறிப்பாக 17-ம் நூற்றாண்டில் இடையிடையே கடுமையான உணவுப் பற் றாக்குறை ஏற்பட்டபோது `ககோவ்' பறவையே முக்கிய உணவானது. அப்புறம் அப்பறவைகள் கண்ணில் படாமல் போக, அவை முற்றிலுமாக அழிந்துவிட்டதாகக் கரு தப்பட்ட நிலையில் 1916-ம் ஆண்டு மீண்டும் கண்டு பிடிக்கப்பட்டன. சில ஆண்டுகள் கழித்து மறுபடி காணாமல் போன அவை 1951-ம் ஆண்டு கண்டு பிடிக்கப்பட்டன. அப்போது ஒரு தீவுத்திட்டில் 18 ஜோடி கள் மட்டும் இருந்தன. `டி.டி.டி.' என்ற பூச்சிக்கொல்லி மற்றும் வீட்டு விலங்குகள் பெர்முடா தீவில் அறிமுகப் படுத்தப்பட்டதன் விளைவாக `ககோவ்' பறவைகள் அழிந்திருக்கலாம் என்று கருதப்பட்டது.

அடுத்து, பெர்முடாவின் வனக் கட்டுப்பாட்டு அலுவலர் டேவிட் விங்கேட் ஒரு திட்டத்தைச் செயல்படுத்தினார். பெர்முடா தீவுக்கு வரும் வெப்பமண்டலப் பறவைகள் `ககோவ்' பற வைகளை அழித்து அவற்றின் கூடுகளை ஆக்கிரமிப்பதை அவர் அறிந்தார். எனவே `ககோவ்' பறவைகளின் கூடுகளை பெரிய வெப்பமண்டலப் பறவைகள் நெருங்காமல் தடை களை ஏற்படுத்தினார்.

அதன்விளைவாக, மகிழ்ச்சி அளிக்கும் வகையில் `ககோவ்' பறவைகளின் எண்ணிக்கை 126 ஜோடிகளாக அதிகரித்துள்ளது.

சூரியனை ஆராயும் செயற்கைகோள்கள்

விண்வெளியில் உள்ள கோள்கள் அனைத்தும் சூரியனை மையமாக வைத்தே சுழல்கின்றன. ஒவ்வொரு கோள்களும் தங்களுக்கு என வகுத்துள்ள வட்ட மற்றும் நீள் வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன. சூரியனை அடுத்து மெர்க்குரி, வீனஸ், பூமி, மார்ஸ் (செவ்வாய்), ஜுபிடர், சனி, யுரேனஸ், நெப்டிïன் என்ற வரிசையில் கோள்கள் அமைந்துள்ளன. இது தவிர ஏராளமான துணைக்கோள்களும், நட்சத்திரங்களும், விண்கற்களும் விண் வெளியில் சுற்றி வருகின்றன. இத்தனை கோள்கள், நட்சத்திரங்கள் இருந்தாலும் பூமியில் மட்டுமே மனிதர்கள் மற்றும் உயிரினங்கள் வசிக்கும் அமைப்பு உள்ளது. பூமி போல வேறு கோள்களில் உயிரினங்கள் இருக்கின்றதா? அல்லது இதற்கு முன்பு இருந்திருக்கிறதா? என்ற ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

விண்வெளி ஆராய்ச்சியில் தீவிர ஆர்வம் கொண்ட மனிதன் பல நூறு ஆண்டுகளாகவே அது குறித்து ஆய்வுகள் நடத்தி பல்வேறு கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி இருக்கின்றான். பூமிக்கு அருகில் உள்ள கோளான நிலவுக்குச் சென்று கால்பதித்தான் மனிதன். தற்போது அங்கு ஆய்வு நிலையத்தை அமைக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றது. நிலவுக்குச்சென்றது போல சிவப்பு கிரகம் என்று அழைக்கப்படும் செவ்வாய்க்கும் விஞ்ஞானிகள் ஆய்வுக்கலங்களை அனுப்பி உள்ளனர். இந்த ஆய்வுக்கலங்கள் செவ்வாயக் கிரகத்தில் இறங்கி பல்வேறு ஆய்வுகளை நடத்தி வருகின்றது. இதுபோல மற்ற கிரகங்களை ஆராயவும் மனிதன் செயற்கை கோள்களை அனுப்பி இருக்கின்றான்.


பல்வேறு அற்புதங்கள் நிறைந்த விண்வெளியில் மிகப்பெரிய அதிசயமாக திகழ்கிறது சூரியன். ஹைட்ரஜன், ஹீலியம் வாயுக்கள் நிரம்பிய சூரியன் நெருப்புக்கோளமாகவே உள்ளது. இதில் காணப்படும் கதிர்வீச்சும், காந்தப்புலனும் ஆபத்து நிறைந்தவை. எனவே எந்த ஒரு பொருளும், உயிரினமும் இங்கு நெருங்க முடியாது. எனவே வெகு தூரத்தில் இருந்தே டெலஸ்கோப் மூலம் சூரியனை ஆராய்ந்து வந்தனர். இப்போது சூரியனுக்கு கொஞ்ச தூரத்தில் இருந்து ஆய்வு நடத்த 2 செயற்கை கோள்களை அனுப்ப உள்ளனர். ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிலையமும் (ணி.ஷி.கி.), நாசாவும் (ழிகிஷிகி) இணைந்து இந்த செயற்கை கோள்களை அனுப்புகிறது.

ஐரோப்பிய விண்வெளி ஆய்வுநிலையம் அனுப்பும் இந்த செயற்கைகோளுக்கு `சோலார் ஆர்பிட்டர்' என்று பெயர் சூட்டி இருக்கிறார்கள். வருகிற 2015 ம் ஆண்டு இந்த செயற்கை கோள் சூரியனை நோக்கி தனது பயணத்தை தொடங்கும். சிறிய கார் அளவு இருக்கும் இந்த செயற்கை கோள் சூரியனின் வெப்பத்தினால் பாதிக்காத அளவுக்கு பாதுகாப்பு கவசம் கொண்டதாக தயாரிக்கப்படுகிறது. இது தவிர சூரியனில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு மற்றும் காந்தப்புல வீச்சினால் பாதிக்கப்படாத அளவுக்கு பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்ததாக இந்த செயற்கை கோள் இருக்கும்.

சோலார் ஆர்பிட்டர் சூரியனை சுற்றி வந்து படம் பிடித்து அதை ஐரோப்பிய விண்வெளி ஆய்வுநிலையத்துக்கு அனுப்பி வைக்கும். மேலும் சூரியனின் துருவப்பகுதியையும் இந்த செயற்கை கோள் ஆய்வு செய்யும். சூரியனின் தரைப்பகுதியைவிட வெளிப்புற பகுதி ஏன் அதிக உஷ்ணமாக இருக்கிறது? சூரியனில் ஏன் நெருப்புக்கோள புயல், சூரியப்புள்ளி மற்றும் நெருப்பு பெருவெடிப்புகள் போன்றவை ஏற்படுகின்றன என்பது குறித்தும் ஆய்வுகள் நடைபெறும்.

அமெரிக்காவின் நாசா விண்வெளி நிலையம் அனுப்பும் செயற்கைகோளுக்கு `சோலார் புரோப் பிளஸ்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக்கலம் சூரியனின் மையப்பகுதி குறித்து ஆய்வுகளை நடத்தும். இந்த ஆய்வுகளின் முடிவில் சூரியன் குறித்த பல அதிசய தகவல்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.