கூகுள் குரோமை விட 112% அதிக வேகம் கொண்ட மைக்ரோசாப்ட் ‘எட்ஜ்’ உலாவிதற்போது இணையதளங்களில் உலாவுவதற்கு வசதியாக இருக்கும் உலாவிகளில் கூகுள் குரோம் உலாவியே உலகெங்கிலும்  மிகவும் வேகமானதாகவும் சிறந்ததாகவும் இருந்து வருகிறது. வரும் 29-ந்தேதி புதிதாக வெளிவர உள்ள மைகரோசாப்டின் விண்டோஸ் 10 இயங்குதளத்தில் அதிவேக உலாவி ஒன்று புதிதாக இணைக்கப்படுகிறது. அதற்கு ‘எட்ஜ்’ என பெயரிடப்பட்டுள்ளது.
விரைவில் வெளிவர உள்ள இந்த அதிவேக உலாவி கூகுள் குரோமுக்கு போட்டியாக இருக்கும் என ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், விண்டோஸ் தனது வலைத்தளத்தில் எட்ஜ் பிரவுசரை பற்றி பல பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளது.
கூகுள் ஆக்டேன், ஆப்பிள் ஜெட்ஸ்டிரீம், வெப்கிட் சன்ஸ்பைண்டர், சபாரி உள்ளிட்ட உலாவிகளுடன் சோதனை செய்து பார்க்கப்பட்டது. இதில், மற்றவைகளை விட குறிப்பாக கூகுள் குரோமை விட மைக்ரோசாப்ட் எட்ஜ் உலாவி 112% அதிக வேகத்துடன் இயங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்பிள் வாட்சின் பயன்பாடுகள்1. உடல் நலம் குறித்து முக்கிய தகவல்களை அளிக்கும் விதமாக பல சென்சார்களும் செயலிகளும் இருக்கின்றது.

2. உங்களுக்கு தேவையானவற்ற அறிந்து கொள்ளும் ஆப்ஷனை ஆப்பிள் வாட்ச் மிகவும் எளிமையாக்கியுள்ளது, வாட்ச் ஸ்கிரீனில் கீழ் இருந்து மேல் புறமாக ஸ்வைப் செய்தால் போதுமானது.

3. புதிய ஆப்பிள் வாட்ச் கிட்டத்தட்ட அனைத்து செயலிகளையும் சப்போர்ட் செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

4. பல கருவிகளை போன்றே ஆப்பிள் வாட்ச்களையும் நீங்கள் உங்களது குரலை கொண்டு இயக்க முடியும்.

5. ஐபோனுக்கு வரும் நோட்டிபிகேஷன்களை அறிந்து கொள்ள ஆப்பிள் வாட்ச் எச்சரிக்கை செய்யும்.

6. ஐபோனுக்கு வரும் குறுந்தகவல்களை ஆப்பிள் வாட்ச் மூலம் பார்த்து அதற்கு பதில் அளிக்கவும் முடியும்.

7. ஆப்பிள் வாட்ச் மூலம் நீங்கள் அழைப்புகளை ஏற்க முடியும்.

8. ஆப்பிள் வாட்ச் பேட்டரியானது, அதிகபட்சம் 18 மணி நேரம் வரை இருக்கும் என டிம் குக் தெரிவித்துள்ளார்

- நன்றி  ஈகுருவி.கொம் -

அதிவேக ரயில், ஜப்பானில் புதிய சாதனை


      ஜப்பானிய ரயில் ஒன்று அதிவேகமாக ஓடுவதில் முன்னர் இருந்த சாதனையை முறியடித்து புதிய உலகச் சாதனை ஒன்றை ஏற்படுத்தியுள்ளது.  இந்த ரயில் வண்டி மிக அதிக காந்த சக்தி மூலம் இயங்குகிறது. ஓடும் ரயில் தண்டவாளங்களைத் தொடாமல் அதியுயர் காந்த சக்தி மூலமே செயல்படும் இந்த வண்டி, ஈர்ப்பு விசை மற்றும் இதர சக்திகளை சமன்படுத்தி பயணிக்கும். இந்த அதிவேக ரயில் வண்டி அந்த 283 கிலோமீட்டர் தூரத்தை நாற்பது நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் பயணிக்கும். தலைநகர் டோக்யோ மற்றும் நகோயா நகருக்கு இடையே 2027 ஆம் ஆண்டு இந்த ரயில் சேவையை அறிமுகப்படுத்த மத்திய ஜப்பான் ரயில்வே நிறுவனம் எண்ணியுள்ளது. 
      ஆனாலும் இந்தச் சாதனை வேகத்தை ரயில் பயணிகள் தமது பயணத்தில் அனுபவிக்க இயலாது என அந்த ரயில் வண்டி சேவையை நடத்தும் ஜப்பான் மத்திய ரயில்வே கூறியுள்ளது. ஏனெனில் மிக அதிகபட்சமாக மணிக்கு 505 கிலோ மீட்டர் வேகத்திலேயே தங்கள் அதை இயக்கவுள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர். டோக்யோவிலிருந்து நகோயா இடையேயான பயண தூரத்துக்கான கட்டுமான பணிகளுக்கு மட்டும் 100 பில்லியன் டாலர்கள் செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதிலும் 80 சதவீதம் பாதைகள் மிகவும் செலவு பிடிக்கும் சுரங்கப் பாதைகளாக அமையும் என்று ஏ ஃஎப் பி செய்தி நிறுவனம் கூறுகிறது. எதிர்வரும் 2045 ஆம் ஆண்டு இந்த வகையிலான அதிவேக மின்காந்தப் புலன் மூலம் ஓடும் ரயில்கள் டோக்யோவிலிருந்து ஒசாகா வரை ஓடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது பயண நேரம் இப்போதுள்ள நேரத்தில் பாதியளவே இருக்கும்.
      உயர்சக்தி காந்தங்கள் மூலம் இயக்கப்படும் இந்த ரயில்கள் எந்த அளவுக்கு வேகமாக ஓடுகிறதோ, அந்த அளவுக்கு அது உறுதியாக இருக்கும் என்று அந்த ரயில்வேயின் தலைமை ஆய்வாளர் யசுகாசூ எண்டோ கூறுகிறார். இதன் மூலம் பயணத்தின் தரம் மேம்படும் எனவும் அவர் கூறுகிறார். ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ ஆபே வரும் ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவுக்கு பயணிக்கவுள்ள வேளையில், இந்தத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நியூயார்க் மற்றும் வாஷிங்டன் இடையேயான ரயில் பாதையை அமைக்க வழி செய்யும் ஜப்பானின் திட்டத்தை முன்வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- நன்றி - பி.பி.சி. இணையம் - 

பரமாத்மாவின் கீதையின் சில துளிகள் !
நானே இந்த அகிலம்
அகிலத்தின் அனைத்து அணுவும் நானாவேன். சூரியனும் நானாவேன் குளிர் சந்திரனும் நானாவேன். நட்சத்திரங்களும் அனைத்து கிரகங்களும் நானே. ஒளிபொருந்திய சூரியனைவிட புராதனன். விருட்சத்தில் துளிர்க்கின்ற  தளிரைவிட புதுமையானவன். அனைத்து மானிடரும் நானாவேன். மேலும் சொர்க்கம் மற்றும் நரகத்தை ஆட்டுவிக்கும் சக்தியாவேன். கொடிய என்ணம் கொண்ட துரியனும் நான். வில்லேந்திய விஜயனும் நானே.
நான் அநேக ஜனனம் எடுத்தவன் பார்த்தா. பற்பல அவதாரங்களை நான் எனதாக்கியவன். எண்ணற்ற சரீரங்களை ஆடையாக்கி இந்த மண்ணில் புதைத்தவன் நான். இனியும் நான் மேலும் மேலும் ஜனனம் எடுப்பேன்.
தர்மம் அகிலத்தில் வீழும் போதெலாம், தர்மம் தன் பலத்தை இழக்கும் போதெல்லாம் சர்புருஷர்களை அகிலத்தில் தோற்றுவிப்பதற்காக அதர்மிகளை வேரறுப்பதற்காக தர்மத்தை ஸ்தாபிதம் செய்வதற்காக நான் புவியில் ஜனனம் எடுப்பேன். இந்நிகழ்வு ஒவ்வொரு யுகத்திலும் நடந்துள்ளது. இனிவரும் காலத்திலும் இந்த நிகழ்வு தொடரும். நானே அனைத்துமான பரமாத்மா.
மச்சாவதாரமும் நானே
வாமன அவதாரமும் நானே
பரசுராமரும் நானாவேன்
தசரத நந்தன் ராமரும் நானாவேன்
நானே பிரம்மா விஷ்ணு சர்வேஸ்வரன், அத்துடன் சரஸ்வதி காளி, மகாலக்ஷ்மியுமாவேன். நான் ஆண்மகனும் அல்ல, நான் ஸ்திரியும் அல்ல. இரண்டும் அல்லாதவனும் அல்ல. சரீரம் உற்றவன் நான், சரீரம் அற்றவன் நான். ஞானம் நான், சிருஷ்டியும் நான், ஆன்ம ஒளியும் நான். பரப்பிரம்மமும் நான். காணும் அனைத்தும் நான். எதுவுமற்ற சூட்ஷமமும் நான். பிறப்பற்றவன் நான். இறப்பற்றவன் நான். ஜகத்தில் வாழும் ஜீவன்கள் அனைத்தும் தலைவணங்கும் சிறப்புற்றவன் நான்.

Windows 10 க்கு பின்பு புதிய Operating System வெளியிடப்போவதில்லை என அறிவித்தது Microsoft நிறுவனம்

தற்போதுள்ள WINDOWS 8 இயக்குதளத்தின் அடுத்த பதிப்பாக WINDOWS 10 எனும் புதிய பதிப்பை வரும் ஜூலை மாதம் வெளியிட இருக்கிறது மைக்ரோசாப்ட். என்ன இடைல ஒரு நம்பரக் காணோம் என யோசிக்காதீர்கள். மைக்ரோசாப்ட் தங்களின் மென்பொருள்களுக்கு பெயர் வைப்பதில் அப்படித் தான். தங்களின் XBOX 360 எனும் விளையாட்டு உபகரணத்தின் அடுத்த பதிப்பிற்கு XBOX ONE என பெயரிட்டார்கள். இணைய வெளியில் WINDOWS மீது ஒரு பொதுப்புத்திவெறுப்புஉள்ளது. இதைக் களைய பல வேலைகளைச்  செய்து வரும் இந்நிறுவனம்.
தனது முக்கிய தயாரிப்பான WINDOWS மென்பொருளின் எதிர்காலத்தை சீரான வருமானம் தரும் வகையில் மாற்ற எடுக்கும் முக்கிய நடவடிக்கை தான் WINDOWS 10.  இனி புதிய WINDOWS பதிப்புகளை வெளியிடப் போவதில்லை என அறிவித்திருப்பது, இனி மக்கள் WINDOWS மென்பொருளை எப்படி பயன்படுத்தி விலை கொடுத்து வாங்க வேண்டும் எனும் முறையை மாற்றுகிறது மைக்ரோசாப்ட்.
ஆம்., WINDOWS 7, 8, 10 என பெயர்களில் இனி 10க்கு பின் எந்த மாற்றமும் இனி வரும் காலங்களில் இருக்காது. ஆனால் OS இன் புதிய வசதிகள் வெறும் அப்டேட்களாக மட்டுமே நிறுவப்படும்.  ஒரு வருடம் WINDOWS பயன்படுத்த இவ்வளவு கட்டணம் என வசூலிக்கப்படும். அந்த வருடத்தில் வரும் அனைத்து புதிய வசதிகளும் இலவசமாக பதிவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளலாம்.
அனைவரையும் வருடா வருடம் சந்தா பணம் கட்டி WINDOWSஐ பயன்படுத்த வைக்க திட்டமிட்டுள்ள மைரோசாப்ட்., அனைவருக்கும் WINDOWS 10 இலவசமாக முதல் வருடம் கிடைக்கும் என அறிவித்துள்ளது. உங்களின் கணினியில் உள்ள WINDOWS 7, XP , 8 திருட்டு பதிப்பாக இருந்தாலும் உங்களுக்கான WINDOWS 10 Original பதிப்பு இலவசமாக இணையம் வழியாகக் கிடைக்கும். முதல் வருடம் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். அடுத்த வருடம் முதல் வருடாந்திரக் கட்டணம் இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.ஹவாய் நிறுவனம் அதன் மெட்டர்-கிளாட் ஹானர் 7 ஸ்மார்ட்போனை மூன்று வகைகளில் அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, 16ஜிபி வகை CNY 1999 (சுமார் ரூ.20,500) விலையிலும், 16ஜிபி டூயல் சிம் வகை CNY 2199 (சுமார் ரூ.22,600) விலையிலும், 64ஜிபி வகை CNY 2499 (சுமார் ரூ.25,600) விலையிலும் அறிமுகப்படுத்தியுள்ளது. இன்னும், சீனாவிற்கு வெளி பகுதியில் இந்த ஸ்மார்ட்போன் கிடைப்பது பற்றிய விவரங்கள் அறிவிக்கப்படவில்லை.

அலுமினிய அலாய் வடிவமைப்பு கொண்டுள்ள ஹவாய் ஹானர் 7 ஸ்மார்ட்போனில் EMUI 3.1 ஸ்கின் உடன் ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப் மூலம் இயக்கப்படுகிறது. ஹவாய் ஹானர் 7 ஸ்மார்ட்போனில் 423ppi பிக்சல் அடர்த்தி மற்றும் 1080x1920 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5.2 இன்ச் முழு ஹச்டி டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் ARM's மாலி-T628 ஜிபியூ மற்றும் 3ஜிபி ரேம் உடன் இணைந்து 64பிட் அக்டா கோர் கிரின் 935 ப்ராசசர் (2.2GHz நான்கு கார்டெக்ஸ்-A53 கோர்கள் + 1.5GHz நான்கு கார்டெக்ஸ்-A53) மூலம் இயக்கப்படுகிறது.

இதில் மைக்ரோSD அட்டை வழியாக 128ஜிபி வரை விரிவாக்கக்கூடிய சேமிப்பு உடன் வருகிறது. ஹவாய் ஹானர் 7 ஸ்மார்ட்போனில் பேஸ் டிடெக்‌ஷன் ஆட்டோஃபோகஸ் கொண்ட 20 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் வைட் ஆங்கிள் ஃபிக்சட்ஃபோகஸ் கேமரா கொண்டுள்ளது. பின்புற கேமராவில் சோனி IMX230 சென்சார், f/2.0 aperture, 6 லென்ஸ் மொடுல் மற்றும் சபையர் கிளாஸ் பாதுகாப்புடன் வருகிறது மற்றும் முன் கேமராவில் f/2.4 aperture உடன் வருகிறது.

ஹவாய் ஹானர் 7 ஸ்மார்ட்போனில் பின்புற கேமராவின் வலதுபுறத்தின் கீழே கைரேகை சென்சார் உள்ளதால் யூசர்கள் ஒரு டேப்பிங் செய்வதன் மூலம் ஸ்மார்ட்போனை திறந்து கொள்ளலாம். ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்களாக, NFC, டூயல் பேண்ட் Wi-Fi 802.11a/b/g/n/ac, ப்ளூடூத் 4.1, ஜி.பி.எஸ்/எ-ஜிபிஎஸ், ஜிஎஸ்எம் மற்றும் 4ஜி எல்டிஇ ஆகியவை வழங்குகிறது. இந்த கைப்பேசியில் 3100mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் சில்வர், கோல்டு மற்றும் கிரே வண்ண வகைகளில் வருகிறது. இதில் 143.2x71.9x8.5mm நடவடிக்கைகள் மற்றும் 157 கிராம் எடையுடையது. மேலும், இதில்காம்பஸ்/மக்னேடோமீட்டர், ப்ரொக்ஷிமிட்டி சென்சார், அச்செலேரோமீட்டர், அம்பிஎண்ட் லைட் சென்சார் மற்றும் கைரோஸ்கோப் போன்ற சென்சார்களை கொண்டுள்ளது.

- நன்றி தினகரன் -