பஞ்ச் வசனம் இல்லை, அரசியல் சிலேடைகள் இல்லை. அட, விஜயகாந்த் திருந்திவிட்டாரா என்று பார்த்தால், அதே பழைய கோட், துப்பாக்கியுடன் தனியாளாக வில்லன்களை பந்தாடுகிறார்.
அயல்நாட்டு வில்லன்கள் உள்நாட்டு வில்லனின் துணையுடன் இந்திய திருநாட்டை நாசம் செய்ய முயல்கிறார்கள். வழக்கம்போல விஜயகாந்த் சம்மர் சால்ட் அடித்து நாட்டை காப்பாற்றுகிறார்.
பழகிய கதையில் மாதேஷின் திடுக் திருப்ப திரைக்கதை சுவாரஸிய மேற்படுத்துகிறது. பட்டை போட்ட கல்லூரி மாணவனும், கல்லூரி மாணவியும் கொலை செய்யும் போது கொஞ்சம் பதறித்தான் போகிறோம். விஞ்ஞானிகளையும், சாப்ட்வேர் தொழிலதிபர்களையும் யார் கொலை செய்கிறார்கள் என கண்டறிய வரும் அதிகாரி பிஜுமேமன் காணாமல் போகிறார்.
போலீஸ் அதிகாரி பிஜுமேமன் தான் சதிகார கூட்டத்தின் தலைவன் என தெரியவரும்போது ஷாக். போலீஸ் அதிகாரி பிஜுமேமன் வேறு, சதிகாரன் வேறு என தெரிய வரும்போது டபுள் ஷாக். ஆக் ஷன் கதையில் காதல் காட்சிகள் சொதப்பலாக இருக்கும். அரசாங்கம் ஆறுதல். காது கேளாத நவ்தீப் கவுரும் அவரது உயிர் தியாகமும் ரசிக்க வைக்கிற தனி எபிசோட்.
கனடாவுக்கு படம் நகரும்போது பெரிதாக எதிர்பார்க்கிறோம். எதிர்ப்பை மாதேஷ் நிறைவேற்றவில்லை. கனடா விமான நிலையத்திலிருந்து விஜயகாந்த் தப்பிப்பதும், அந்த பாதாள பன்றிகளும் திக்... திக்...
விஜயகாந்தின் ரிட்டையர்ட்மெண்ட் வயதை அவரது தொங்கும் சதைகள் காட்டிக் கொடுக்கின்றன. ஆக் ஷன் காட்சிகளால் அமுங்கிப் போகிறது, ஸ்ரீகாந்த் தேவாவின் இசை. ஒளிப்பதிவாளர் ஏ.வெங்கடேஷூக்கு பாஸ் மார்க் தரலாம்.
ஷெரில் பிரிண்டோவும், ஸ்ரீமனுடனான சண்டைக்காட்சியும் வலுக்கட்டாயமான திணிப்பு.
No comments:
Post a Comment