பதிந்தது அவள் முகம்................

ஒரு நூறு
முகங்களின் அறிமுகத்தில்
பதிந்து போனது
உனது முகம் மட்டும்
அதிகமில்லை பழக்கம்
பரஸ்பர பகிர்வுக்கு
நான்கு பொழுதுகள்
பிடுங்க முடியாத
முள்ளாய்

சொருகிய நினைவுகள்
சலசலக்கும்
தென்னங்கீற்றுகள்
உன் சிரிப்பின் ஞாபகம்
கடந்துபோய்
மாதங்களானாலும்
கரைந்து போகாத குரல்
பிரிவு மட்டும்
நம்மை விட்டு
இன்னும் பிரியாமல்

No comments: