ஒபாமாவும் கியூபாவும்

வெளியுலகுடனான விவகாரங்களைக் கையாளுவதில் அமெரிக்கா இதுகாலவரை கடைப்பிடித்து வரும் கொள்கைகளிலும் அணுகு முறைகளிலும் கணிசமான மாறுதல்களைப் புதிய ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நிருவாகத்தின் கீழ் காணக்கூடியதாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உலக மக்கள் மத்தியில் பரவலாக இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. உலகினால் பெரிதும் வெறுக்கப்பட்ட ஒரு அமெரிக்க ஜனாதிபதி என்ற அபகீர்த்திக்குள்ளான ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் கடைப்பிடித்த ஒரு தலைப்பட்சமான ஆக்கிரமிப்புத்தனமான கொள்கைகளின் விளைவாக உலக அரங்கில் அமெரிக்கா இழந்து போன தார்மீகச் செல்வாக்கை மீட்டெடுக்க வேண்டிய அவசியம் ஒபாமாவுக்கு ஏற்பட்டிருக்கிறது.

ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் நடைபெறுகின்ற போர்களைப் பொறுத்தவரை, சடுதியாக எந்தவொரு பாரிய மாறுதலையும் கொண்டு வருவதற்கு ஒபாமா நிருவாகத்தினால் முடியவில்லை என்ற போதிலும் வெளியுறவு விவகாரங்களில் ஏனைய பிராந்தியங்களில் அமெரிக்கா கடைப்பிடிக்க ஆரம்பித்திருக்கும் அணுகுமுறையில் ஓரளவுக்கு சாதகமான அம்சங்களை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. கியூபாவுடன் "புதிய ஆரம்பமொன்றையும்' அமெரிக்கக் கண்டத்தில் உள்ள சகல நாடுகளுடனும் "சமத்துவமான கூட்டுப் பங்காண்மையையும்' அமெரிக்கா நாடுகிறது என்று டிரினிடாட்டில் நடைபெறும் அமெரிக்க அரசுகளின் உச்சி மகாநாட்டில் லத்தீன் அமெரிக்க மற்றும் கரிபியன் தலைவர்கள் மத்தியில் ஒபாமா தெரிவித்திருக்கும் கருத்து முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியதொன்றாகும். இந்த உச்சி மகாநாட்டுக்கு போவதற்கு முன்னர் கடந்த வாரம் ஒபாமா கியூப வம்சாவளியை சேர்ந்த அமெரிக்கப் பிரஜைகள் கியூபாவுக்கு பயணம் செய்வதற்கு இதுகாலவரை விதிக்கப்பட்டிருந்த தடைகளை நீக்கியதுடன் கியூபாவில் வாழும் தங்கள் உறவினர்களுக்கு இந்த அமெரிக்கப் பிரஜைகள் முன்னரைவிட மிகவும் எளிதாகப் பணத்தை அனுப்புவதற்கும் அனுமதித்திருந்தார்.

அமெரிக்க ஜனாதிபதி மேற்கொண்ட இந்த நடவடிக்கைகள் சிறிய வையானாலும் சாதகமானவை என்று கியூபாவின் முன்னாள் ஜனாதிபதி பிடல் காஸ்ட்ரோ வர்ணித்திருக்கிறார். ஆயுதப் போராட்டத்தின் மூலம் 1959 ஆம் ஆண்டு ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிய காஸ்ட்ரோ அமெரிக்கக் கண்டத்திலேயே ஒரேயொரு கம்யூனிஸ்ட் அரசாக கியூபாவை மாற்றிய பிறகு அமெரிக்கா தடைகளை விதித்தது. காஸ்ட்ரோ தலைமையிலான கியூபாவுடன் 1960 ஆம் ஆண்டில் இருந்து அமெரிக்கா உயர்மட்ட இராஜதந்திர உறவுகளைப் பேணவில்லை. அதேவருடம் கியூபா மீது விதிக்கப்பட்ட வர்த்தகத்தடையை அடுத்தடுத்துவந்த அமெரிக்க நிருவாகங்கள் மேலும் தீவிரப்படுத்தியிருந்தன. கம்யூனிஸ்ட் அரசாங்கத்தின் வீழ்ச்சியைத் துரிதப்படுத்துவதையே இலக்காகக்கொண்டு அமெரிக்கா செயற்பட்டு வந்தது. இதில் காஸ்ட்ரோவைக் கொலைசெய்வதற்கான பல்வேறு முயற்சிகளும் அடங்கும்.

முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ.புஷ்ஷின் நிருவாகம் கியூபாவின் எதிரணியினரை ஆதரித்து கம்யூனிஸ்ட் ஆட்சியின் வீழ்ச்சியைத் துரிதப்படுத்தும் நோக்குடனான கொள்கைகளை தீவிரமாகக் கடைப்பிடித்தது. ஆனால், அமெரிக்க நிருவாகங்களினால் இது விடயத்தில் வெற்றிபெற முடியவில்லை. டிரினிடாட் உச்சி மாகாநாட்டுக்கு செல்வதற்கு முன்னதாக டொமினிக்கன் குடியரசுக்கு விஜயம் செய்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் கியூபா தொடர்பான அமெரிக்கக் கொள்கை தோல்வியடைந்து விட்டது என்று பகிரங்கமாகவே ஒத்துக் கொண்டதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

கியூபா தொடர்பான கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் அறிவிப்புக்களை ஒபாமா வெளியிட்டதன் நோக்கம் கியூபாவில் ஜனநாயகத்தையும் மனிதஉரிமைகளையும் மேம்படுத்துவதே என்று வெள்ளைமாளிகை தெரிவித்திருக்கிறது. 82 வயதான பிடல் காஸ்ட்ரோ கூறியிருப்பதைப் போன்று ஒபாமா மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகள் மிகவும் சிறியவையே. கியூப வம்சாவளியினரான அமெரிக்கப் பிரஜைகள் கியூபாவுக்கு பயணம் செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டிருக்கின்ற அதேவேளை, ஏனைய அமெரிக்கர்கள் கியூபாவுக்கு செல்ல முடியாதவாறு தடை தொடருகிறது. அத்துடன் சுமார் அரை நூற்றாண்டுகளாக கியூபா மீது அமெரிக்கா விதித்திருக்கும் மனிதாபிமான மற்ற பொருளாதாரத் தடைகளில் எந்த மாற்றமுமே இல்லை.

கடந்த வாரம் தன்னால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு கியூபா அரசாங்கத்தினால் செய்யப்படக் கூடிய கைமாறைப் பொறுத்தே மேலும் நடவடிக்கைகள் எடுப்பதைப் பற்றிப் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு தனது நிருவாகம் தயாராயிருக்கும் என்று ஒபாமா கூறுகிறார். கியூபா மக்கள் அமெரிக்காவுக்கு பயணம் செய்வதையோ அமெரிக்காவுடனான வர்த்தகத்தையோ கம்யூனிஸ்ட் அரசாங்கம் தடைசெய்திருக்கவில்லை. அதனால் கியூபாவிடமிருந்து ஒபாமா நிருவாகம் எதிர்பார்க்கும் கைமாறு என்னவென்பது தெளிவாகத் தெரியவில்லை.

பிடல் காஸ்ட்ரோ தலைமையிலான கியூபா புரட்சி வெற்றி பெற்ற நாள் முதலாக கியூபா மக்கள் எத்தகைய அரசாங்கத்தை, எத்தகைய சமூக அமைப்பைக் கொண்டிருக்க வேண்டும் என்பது தொடர்பில் அவர்களுக்கு வலுக்கட்டாயமாக கட்டளையிடுவதில் தங்களுக்கு இருக்கும் விருப்பத்தை அமெரிக்க நிருவாகங்கள் ஒரு போதுமே ஒளித்ததில்லை. கியூபா மீதான வாஷிங்டனின் நெருக்குதல்கள் ஆக்கிரமிப்பு வடிவில் கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு எதிராக தூண்டிவிடப்பட்ட கிளர்ச்சிகளின் வடிவில் எல்லாம் வந்துபோயிருக்கின்றன. ஆனால், எதிலுமே அமெரிக்காவினால் வெற்றி பெறமுடியவில்லை.

இந்த அனுபவத்தில் இருந்து ஒபாமா நிருவகம் உகந்த பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. கியூபா அரசாங்கம் அதன் சமூகத்தை திறந்துவிட வேண்டும் என்பதே வாஷிங்டனின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. மனித உரிமைகள், அரசியல் கைதிகள் மற்றும் பத்திரிகைச் சுதந்திரம் உட்பட சகல விடயங்கள் குறித்தும் அமெரிக்காவுடன் பேசத் தயாராயிருப்பதாக கியூபா ஜனாதிபதி ரவுல் காஸ்ட்ரோவும் அறிவித்திருக்கிறார்.

கியூபா தொடர்பான அமெரிக்கக் கொள்கை தோல்வியடைந்துவிட்டது என்று ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் நிலையில் கியூபாவுடன் புதியதொரு ஆரம்பத்தை நாடுவதாக அறிவித்திருக்கும் ஒபாமா, கம்யூனிஸ்ட் நாட்டுடனான உறவுகளில் ஆக்கபூர்வமான யுகமொன்றை ஆரம்பிப்பதில் மானசீகமான அக்கறையுடையவராக இருந்தால் பொருளாதாரத் தடைகள் உட்பட சகல கட்டுப்பாடுகளையும் உடனடியாக நீக்கவேண்டும். அத்துடன் தங்களை எத்தகைய அரசாங்கம் ஆளவேண்டும் என்பதையும் தங்கள் சமூக அமைப்பு எத்தகையதாக இருக்க வேண்டுமென்பதையும் தீர்மானிக்கும் பொறுப்பை கியூபாவின் மக்களிடமே விட்டுவிட வேண்டும்.

- நன்றி தினக்குரல் -

இளம் வயதிலேயே மூளை செயல்பாடு குறைவு?

பொதுவாக வயதான காலத்தில்தான் மூளை செயல்பாடு குறையக் கூடும். ஆனால் இளம் வயதிலேயே அதாவது 25-30 வயதுக்கு இடைப்பட்ட காலத்தில் மூளை செயல்பாடு குறைவது சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவில் 18 வயது முதல் 60 வயதுக்குட்பட்ட ஆரோக்கியமான 20 ஆயிரம் பேரிடம் அவர்களின் மூளை செயல்பாடு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

நினைவாற்றல், மூளைத் திறன், சரியான முறையில் பணிகளை மேற்கொள்வது உள்ளிட்டவை குறித்து சுமார் 7 ஆண்டுகள் வரை இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

புதிர்களை கண்டறிதல், மூளை செயல்பாடு, கதைகளில் உள்ள வார்த்தகள் மற்றும் தகவல்களை நினைவு கூர்தல், அடையாளச் சின்னங்களை சேகரித்தல் போன்றவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

சில திறன்கள் 20 வயது முதல் 30 வயதுக்குள்ளாகவே குறையத் தொடங்கியிருப்பது கண்டறியப்பட்டது.

சுமார் 27 வயதுக்குள்ளாகவே புதிர்களுக்குத் தீர்வு காணும் திறன் குறைவது கண்டறியப்பட்டுள்ளது. 37 வயதில் நினைவாற்றல் ஏறக்குறைய அனைவருக்குமே குறையத் தொடங்கி விடுவதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

என்றாலும் எல்லா இளைஞர்களுமே மூளை செயல்பாடு இளம் வயதிலேயே குறையும் என்று கவலை கொள்ளத் தேவையில்லை. பெரும்பாலானவர்களுக்கு வயதான காலத்திலும் மூளை அதிதீவிரமாக செயல்படுவது குறிப்பிடத்தக்கது.

மொழி தொடர்பான வார்த்தைகள் மற்றும் பொது அறிவானது வயது அதிகரிக்கும் போது, கூடவே அதிகரிக்கிறது என்றும் அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஒருசில மனோரீதியான செயல்பாடுகள் 30 வயதிற்கு முன்பாக குறைந்த போதிலும், அறிவு வளர்ச்சி மேலும் அதிகரிப்பது தெரிய வந்துள்ளது.

2 ஆவது ஐ.பி.எல். போட்டிகள் தென்னாபிரிக்காவில் நாளை ஆரம்பம்

2 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தென்னாபிரிக்காவில் நாளை சனிக்கிழமை தொடங்குகிறது. இந்தப் போட்டி நாளை சனிக்கிழமை முதல் மே மாதம் 24 ஆம் திகதி வரை 37 நாட்கள் நடக்கிறது. இதில் சென்னை சுப்ப கிங்ஸ், ராஜஸ்தான், ரோயல்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன.

ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதிபெறும்.

18 ஆம் திகதி நடைபெறும் தொடக்க போட்டியில் சென்னை சுப்ப கிங்ஸ் மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ரோயல்ஸ், பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. மே 22 ஆம் திகதி முதல் அரை இறுதியும், 23 ஆம் திகதி 2 ஆவது அரை இறுதியும், இறுதிப்போட்டி மே 24 ஆம் திகதியும் நடைபெறும்.

கேப்டவுண், போர்ட் எலிசபெத், டேர்பன், பிரிடோரியா, சிம்பொலி, ஜொகனஸ் பேர்க், செஞ்சூரியன், கிழக்கு லண்டன் ஆகிய இடங்களில் போட்டிகள் நடைபெறும்.

கடந்த ஆண்டு ஷேன் வோர்ன் தலைமையிலான ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி கிண்ணத்தை வென்றது. தோனி தலைமையிலான சென்னை சுப்ப கிங்ஸ் 2 ஆவது இடத்தை பிடித்தது. ஷேவாக்கின் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும், யுவராஜ் சிங்கின் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பும் அரை இறுதியில் தோற்றன.

கடந்த முறை ஐ.பி.எல். போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தேர்தலையொட்டி பாதுகாப்பு கொடுக்க இயலாததால் இந்தப் போட்டி தென்னாபிரிக்காவுக்கு மாற்றப்பட்டுள்ளது. கடந்த முறையை போலவே இந்த முறையும் ஐ.பி.எல். போட்டி ரசிகர்களின் ஆதரவை பெற வாய்ப்பிருக்கிறது.

இலங்கை, இந்திய நேரப்படி மாலை 4 மணிக்கும் இரவு 8 மணிக்கும் போட்டிகள் தொடங்குகிறது.

இதேவேளை, இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை விறு விறுப்பாக நடந்து வருகிறது. இதுவரை 70 சதவீத டிக்கெட்டுகள் விற்றுள்ளதாக தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. 125 ரூபா மற்றும் 375 ரூபாவுக்கான டிக்கெட்டுகள் இன்னும் சில தினங்களில் விற்றுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜஸ்தான் ரோயல்ஸ் பெங்களூர் ரோயல் சலஞ்சர்ஸ், சென்னை சுப்ப கிங்ஸ் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் தொடக்க நாளில் மோதும். இப்போட்டிக்கான டிக்கெட்டுகள் முழுவதும் விற்றுவிட்டன.

37 நாட்கள் நடைபெறும் இந்தப் போட்டியில் டிக்கெட் விற்பனை மூலம் 40 கோடி ரூபா முதல் 45 கோடி ரூபா வரை வருமானம் கிடைக்குமென்று தெரிகிறது.

அழைக்கிறது ஆபத்து! இரசாயன விருந்து

நாம் உண்ணும் உணவு வகைகளில் இன்று 1700 க்கும் குறையாதவை செயற்கையான சுவைக்கூட்டுப் பொருள்களால் உருவானவை. பானங்களிலும் பிஸ்கட்டுகளிலும் 100 க்கும் குறையாத இரசாயனங்களையே பயன்படுத்துகின்றனர்.

கேக் மிக்ஸ், சாக்லெட், பிஸ்கட், மார்ஜரின், திடீர் உணவுவகைகள், குலோப் ஜாமூன் மிக்ஸ் என அனைத்திலும் நம்முடைய சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கக் கூடிய மோசமான இரசாயனங்கள் இருக்கின்றன

உண்ணத் தயாராக இருப்பதாலும் கவர்ச்சிகரமான வண்ணங்களில் இருப்பதாலும், நாம் இவற்றைக் கணக்கில் கொள்வது இல்லை. எனவே நமது உடலுக்கு பாதுகாப்பானவையா என்று எவரும் அக்கறை கொள்வதில்லை.

சுவைகூட்டுப் பொருள் என்பது தேவையில்லாத ஒன்றாகும். சுவை கூட்டுப் பொருளுக்கும் ஊட்டச் சத்துப் பொருளுக்கும் எந்த விதமான சம்பந்தமும் கிடையாது. ‘ஊட்டச் சத்துக்கள் சேர்க்கப்பட்டவை’ என்று கூறப்படுவது இயற்கையான சத்துக்கள் அகற்றப்பட்டு, அவை இரசாயனங்களால் நிரப்பப்ட்டிருக்கின்றன என்று பொருளாகும். ஆனால் பெரும்பாலும் அகற்றப்படும் சத்துக்கள் நிரப்பப்படுவது கிடையாது.

ஊட்டச்சத்து சேர்க்கப்பட்ட வெள்ளை ரொட்டியில் (பிரட்) 290 விதமான இயற்கையான வைட்டமின், புரதம், தாதுப்பொருள்கள் அழிக்கப்படுகின்றன. 4 அல்லது 5 செயற்கைப் பொருட்கள் சேர்க்கப்படுகின்றன.

பழபானங்களில் தண்ணீரில் வண்ணம் சேர்க்கப்படுகிறது. தயாரிப்பின் போது இயற்கையான சுவை அழிந்து போய் விடுகிறது. எனவே, சுவை கூட்டுப் பொருட்களும் சுவையூட்டுகளும் உணவுத் தயாரிப்பின் போது அழிந்து போகும் சுவையை மீண்டும் கொண்டுவந்து விடுகின்றன.

சாக்லெட் சேர்க்கப்பட்டுள்ள பிஸ்கட்டுகளில் அதிகமான சாக்லெட் சுவை இருப்பது அதில் சேர்க்கப்படும் சுவையூட்டுகளால் தானே தவிர கொக்கோ பழத்தால் அல்ல. இதே போலத்தான் ஜாம் வகைகளும்.

பேன்களைக் கொல்ல பயன்படுத்தப்படும் பைப்பர் ஹோல் என்ற இராசயனப் பொருள் வெனிலா கலக்கப்படும் உணவு வகைகளில் சேர்க்கப்படுகிறது. பதப்படுத்தப்பட்ட ஸ்ட்ராபெர்ரி, அன்னாசி, வாழைப்பழம் முதலியவற்றில் (டப்பாக்கள்) துணிகளையும் தோல்களையும் கழுவப் பயன்படுத்தப்படும் பென்சி அஸிடெட், எதில் அசிடெட், அமில் அசிடெட் முதலியன சேர்க்கப்படுகின்றன. இவற்றைச் சாப்பிடுவதால் கெடுதல்களே அதிகம்!!

நோய்களைக் குணப்படுத்தும் நகைகள்

நாம் நகைகளை வெறுமனே அழகுக்காகத்தான் அணிகிறோம் என்று நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறோம். நகை அணிவது வெறும் அழகுக்காக மட்டும் இல்லை... அதில் மருத்துவ ரீதியான பலன்களும் நமக்குக் கிடைக்கிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.

"குறிப்பாக, இது நம் உடம்பில் உள்ள வர்மப் புள்ளிகளைத் தூண்டி நம் உடம்பின் ஒவ்வொரு உறுப்பின் நலனையும் பராமரிக்க உதவுகிறது...!" என்கிறார் கோவை கே.ஜி. மருத்துவ மனையின் அக்குபஞ்சர் துறை டாக்டர் சி.வி. அருணா சுபாஷினி.

"நம் உடலின் இரத்த ஓட்டத்தை ஏந்திச் செல்ல குழாய்களும், அதற்கான பாதைகளும் இருப்பது போல, நம் உயிர் ஓடும் சக்திக்கு என்று தனிப்பாதைகள் உண்டு. "நாடி ஓட்டப் பாதை" என்று இதற்குப் பெயர். உயிர்ச்சக்தி ஓட்டப் பாதைகள் என்றும் சொல்வோம். நாடிகளும், நரம்புகளும் முக்கிய இடங்களில் ஒன்று சேர்வதை வர்மப் புள்ளிகள் என்கிறோம்.

இந்த மாதிரி புள்ளிகள் இந்தப் பாதைகளில் ஏராளமாக உள்ளன. குறிப்பிட்ட அளவு தூண்டுதலை இந்தப் புள்ளிகளில் ஏற்படுத்துவதன் மூலம் அரிய மருத்துவ சிகிச்சையே நம் உடம்பில் நடைபெறும். இதுதான் அக்குபஞ்சர் என்னும் சீனப் பாரம்பரிய மருத்துவம்! பெயர்தான் இது சீன மருத்துவமே தவிர, உண்மையில் இது தோன்றியது இந்தியாவில்தான். இராமதேவர் என்ற சித்தர்தான் இதை சீனா வரை கொண்டு சேர்த்தவர்.

அங்கு இன்று இந்த மருத்துவத்துக்கு என்று தனி யூனிவர்சிட்டியே உள்ளது. உலகின் பல இடங்களுக்கும் இதை பரவச் செய்து வருகிறார்கள். இந்த வர்ம புள்ளிகள், கை, கால், மற்றும் உள்ளங்கை, உள்ளங்காலில் தான் அதிகப்படியாக உள்ளதால் இவற்றைத் தூண்டும் விதமாகவே நாம் வெறும் காலால் நடந்து மலைக் கோயிலுக்கு செல்வது, கல்லும் முள்ளும் குத்துவதை காலுக்கு மெத்தை என விருப்பமாக பக்தியுடன் ஏற்றுக் கொள்வது, காது குத்தி தோடு அணிவிப்பதை ஒரு திருவிழாவாகவே கொண்டாடி மகிழ்வது என்று நமது முன்னோர்கள் இந்த அருமையான அக்குபஞ்சர் வைத்தியத்தை நமது வாழ்க்கையுடனே இணைத்து விட்டார்கள்.

இது போன்ற ஆபரணங்களில் நாம் பெரும்பாலும் தங்கத்தை உபயோகிப்பதற்கும் கூட காரணம் இருக்கிறது. தங்கம் உடம்பைத் தொட்டபடி இருந்தால் நம் உடலின் தேஜஸ் அதிகரித்து அழகு மிளிரும்! நாம் போடுவது தங்கமோ, வெள்ளியோ அல்லது சாதாரண மெட்டலோ எதுவாக இருந்தாலும், அந்த ஆபரணம் என்பது நம் உடலின் அக்குபஞ்சர் புள்ளிகளைத் தூண்டித்தான் விடுகிறது. அதற்காகவாவது, இனி நாம் நகைகளைப் போடுவோம். இதனால் பல வியாதிகள் கட்டுப்படட்டும்!

சீனி நம்முடைய உடலுக்கு தேவையில்லை..!

மனிதன் அதிகம் உண்ணும் சத்தில்லாத உணவுகளில் சீனியும் ஒன்று. உண்மையில் நம்முடைய உடலுக்கு சீனி அறவே தேவையில்லை. உடலுக்கு சக்தி தேவைப்படும்போது இதர உணவுகள் குளுகோஸ் ஆக மாற்றி அமைக்கப்படுகின்றன.

சீனி உடலுக்கு எந்த சத்தையும் கொடுக்காமல் இருப்பதோடு மட்டுமல்லாமல், உடம்பிலுள்ள சத்தையும் ஈர்த்துக் கொள்கிறது. அதனால்தான் இது சத்தில்லாத கலோரி, சத்தில்லாத உணவு என்றும் அழைக்கப்படுகிறது.

சிகரெட், மது முதலியவற்றைவிட சீனி அதிக ஆபத்தானது என்று சொல்லலாம். புற்றுநோய், எலும்பு முறிவு நோய், மூட்டு வியாதிகள், உடல் பருமன், இதய நோய்கள், இரத்த அழுத்தம், சருமநோய்கள், விரைவில் முதிர்ச்சி, முதுமை, பித்தக்கல், ஈரல்நோய், சிறுநீரகக்கோளாறு, சொத்தைப்பல், பெண்ணுறுப்பு தொற்றுநோய், அளவுக்கு மீறிய சுறுசுறுப்பு, வன்செயல் மற்றும் பரவலாக இருக்கும் நீரிழிவு நோய், இப்படி சீனி உடம்பிலுள்ள ஒவ்வொரு உறுப்பையும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது.

டின் பானங்கள், செயற்கை சத்துணவு முதலியவைகளில் சீனி அதிகம் சேர்க்கப்படுகிறது.

உங்கள் குழந்தைக்கு குளிர்பானம், ஐஸ்கிரீம், சாக்லேட் மற்றும் அளவுக்கு அதிகமான சீனி உள்ள உணவுகளைக் கொடுப்பதன் மூலம் உங்கள் குழந்தையை நீங்களே நோயாளியாக உருவாக்குகிறீர்கள் என்று அர்த்தம்.

சீனி அதிகமாகவும் வைட்டமின் மற்றும் தாதுப் பொருட்கள் குறைவாகவும் உள்ள உணவு வகைகளை உட்கொண்டு வருபவர்களுக்கு உடம்பில் ரசாயன மாறுதல்கள் ஏற்பட்டு, அளவுக்கு மிஞ்சிய துடுக்குத்தனத்தையும் வன்செயலையும் தூண்டிவிடும். ஜப்பானில் பெருகிவரும் வன்செயல்களுக்கு நொறுக்குத் தீனிகளுக்கும் அதிக தொடர்பு இருப்பதாக ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.

இனிப்பான பொருளை உண்ணும்போது வாயில் உள்ள பாக்டீரியாக்கள் அதனுடன் சேர்ந்து அமிலத்தை உருவாக்குகிறது. இந்த அமிலம் பிறகு பற்களில் உள்ள எனாமலை அரித்து ஓட்டையாக்கி பல் சொத்தையை உண்டாக்குகிறது.

சீனியும் கொழுப்பும் அதிகம் உள்ள உணவுப் பொருட்கள் இரத்தத்தில் கொலாஸ்டிரல் அளவை அதிகரித்துவிடுவதால், இருதய நாளங்கள் அடைபடுகின்றன. இதனால் இரத்தம், ஆக்ஸிஜன் மற்றும் சத்துக்கள் செல்வது தடைபட்டுவிடுகிறது. இது தொடருமானால் ஒருவருடைய தசைநார்கள் இறந்து போய் மாரடைப்பு ஏற்படுகிறது. இந்த மாரடைப்புக்கு குழந்தைப் பருவத்திலேயே நாம் வித்திட்டுவிடுகிறோம்.

தினமும் 24 தேக்கரண்டி சீனி நமது உணவில் சேர்ந்தால் இது 92 சதவிகித வெள்ளை இரத்த அணுக்கள் உருவாவதை தடுக்கிறது. இந்த வெள்ளை அணுக்கள் அபாயகரமான பாக்டீரியாக்களை எதிர்க்கும் தன்மை உடையவை.

உடலில் அதிகம் சீனி இருந்தால் அதைச் சுத்தப்படுத்த அதிகமான இன்சுலின் வெளியாக்கப்படுகிறது. அளவுக்கு அதிகமாக வெளியாகும் இன்சுலினுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியைத் தடுக்கும் ஹார்மோன்களான புரோஸ்டேகிளேன்டின் E2வுக்கும் அதிக தொடர்பு இருக்கிறது. இது புற்றுநோய் கழலையை உருவாக்குகிறது.

கேன்டிடா எல்பிகன்ஸ் என்ற பெண்ணுறுப்பு தொற்று நோயை அதிக அளவு சீனி இன்னும் துரிதப்படுத்துகிறது.

அளவுக்கு அதிகமாக சுக்ரோஸ் உள்ள உணவு எலும்பில் கால்சியத்தைக் குறைத்து எலும்பு முறிவு நோயை உண்டாக்குகிறது என்று பின்லாந்து ஆய்வு தெரிவிக்கிறது.

காபி, டீயில் ஒரு நாளைக்கு அதிகபட்சம் மூன்று அல்லது நான்கு தேக்கரண்டி சீனியை பயன்படுத்துங்கள் போதும்.

காபி, டீ சாப்பிடாதவர்கள் சீனியின் தொந்தரவிலிருந்து முழுவதும் விடுபட்டவர்கள். மெல்லக் கொல்லும் சீனியை முற்றிலும் தவிர்ப்பதே நல்லது.

டென்னிஸ் களத்தில் மீண்டும் கிளிஜ்ஸ்டர்ஸ்


முன்னாள் முதல் நிலை டென்னிஸ் வீராங்கனை கிம் கிளிஜ்ஸ்டர்ஸ் மீண்டும் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் விளையாட திட்டமிட்டுள்ளார்.

இது குறித்து அறிவிக்க அவர் இன்று வடக்கு பெல்ஜியம் நகரான பிரீவில் ஊடகவியலம்ளர் மாநாடொன்றை நடத்தவுள்ளார்.

25 வயதான கிளிஜ்ஸ்டர்ஸ் கடந்த 2007 ஆம் ஆண்டு டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றுக்கொண்டார். இதனை தொடர்ந்து அவர் கண்காட்சி டென்னிஸ் போட்டிகளில் விளையாடிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த கிம் கிளிஜ்ஸ்டர்ஸ் 2005 ஆம் ஆண்டு அமெரிக்க ஓபன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளதுடன் 3 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் இறுதிப்போட்டிவரை முன்னேறியுள்ளார். அவர் இதுவரை 34 ஒற்றையர் பட்டங்களை வென்றுள்ளமை விசேட அம்சமாகும்.

விண்வெளியில் இணையம்


மனிதன் ஒரு சமுக விலங்கு என்று கூறுவார்கள். அவனை சுற்றியுள்ள சமூகமின்றி தனித்தீவாக அவனால் காலம் கடத்த இயலாது. நாம், உறவுகளின் பின்னல்களால் உருவாக்கப்பட்டுள்ளதே இதற்கு எடுத்துக்காட்டு. உறவுகளை வளர்த்து கொள்ளவும், தொடர்புகளை தொடரவும் பல்வேறு வழிமுறைகளை நாம் கையாளுகின்றோம். குறிப்பாக, தொலைபேசி கண்டுபிடிப்பு தொலைதூரத் தொடர்பில் புரட்சியை ஏற்படுத்தியது எனலாம். உலகின் மூலைமுடுக்குகளில் எல்லாம் நடைபெறுகின்ற நிகழ்வுகளை ஊடகங்கள் நமக்கு தெரியப்படுத்தி, எங்கெங்கோ இருக்கும் மக்களோடு ஒருவித தொடர்பை ஏற்படுத்தினாலும், தனிப்பட்ட முறையில் நாம் வளர்க்கின்ற நெருக்கமான தொடர்புகளை தான் என்றும் விரும்புகின்றோம்.

தொலைபேசிக்கு வடம் மூலம் இணைப்பு இருக்கவேண்டும் என்ற நிலைமாறி, வட இணைப்புகளின்றி பேசிக் கொள்ளும் வகையில் செல்லிடபேசி உலாவர தொடங்கியது. அடுத்ததாக, நொடிப்பொழுதில் அனைவரையும் நமது வீட்டு முற்றத்தில் பார்த்து சந்திப்பது போன்ற உணர்வை இணைய வசதி தருகிறது. இவ்வாறு புவியிலான தொலைத்தொடர்பு வசதிகளின் வளர்முகத்தோடு, விண்வெளியை நோக்கி அறிவியலாளர்களின் ஆய்வு திரும்பியுள்ளது.

விண்வெளி ஆய்வுக்கு அனுப்பப்படுகின்ற விண்கலங்கள் மற்றும் செயற்கைக்கோள்கள் புவியிலுள்ள அவற்றின் கட்டுப்பாட்டு மையங்களால் தான் இயக்கப்படுகின்றன. இந்த மையங்கள் அனுப்புகின்ற சமிக்ஞைகளை பெற்று கொள்ளும் அதற்கான விண்கலன் அல்லது செயற்கைக்கோள்கள் பதில்கள் அனுப்புகின்றன. பூமியில் அதற்கு தேவையான எல்லா அதிநவீன வசதிகளும் கட்டியமைக்கப்படுகின்றன. இவ்வாறான பல்வேறு தொலைத்தொடர்பு வசதிகளை விண் கோள்களுக்கு இடையே உருவாக்கும் முயற்சிகளை அறிவியலாளர்கள் மேற்கொண்டனர்.

புவியில் என்றால் தகவல் அனுப்புகின்ற அல்லது பெறுகின்ற கருவிகளை, அதனை தாங்கி நிற்கின்ற கம்பங்களை திட்டமிட்டு எளிதாக அமைத்து விடலாம். ஆனால் விண்வெளியில் அவற்றை எங்கு கொண்டு வைப்பது? இத்தகைய கோள்களுக்கு இடையிலான தொலைதொடர்புகளை இணையவசதி மூலம் மேற்கொள்வதற்கான மென்பொருள் கண்டுபிடிக்கப்ட்டு அதற்கான முதல் ஆய்வை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா நடத்தியுள்ளது.