வியப்பூட்டும் நட்பு

ஜாக்கி என்ற நாயின் முதுகில், குளிரை தாக்குப்பிடிப்பதற்காக ஸ்வெட்டர் அணிந்து கொண்டு பயணிக்கிறது ராமு என்ற குரங்கு.

கடுமையாக மழை பெய்து வருவதால் வடமாநிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ளவர்கள் பாதுகாப்பான பகுதியை நோக்கி செல்கின்றனர். அப்படித்தான் அலகாபாத்தின் கங்கை கரைப் பகுதியிலிருந்து ராமுவும், ஜாக்கியும் பாதுகாப்பான இடத்தை நோக்கி விரைகின்றன. வழியில் எஜமானரின் வருகைக்காக சற்று நின்று திரும்பிப் பார்க்கின்றன.

யானை, குரங்கு, நாய் உள்ளிட்ட விலங்குகள் அறிவுப்பூர்வமாக செயல்படுவது போன்ற காட்சிகளை திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம். நிஜத்திலும் இப்படி நடக்கும் என்பதை நிரூபித்திருக்கின்றன இந்த ராமுவும் ஜாக்கியும்.

No comments: