நூறு கோடி சூரிய பிரகாசத் துடன் வெடித்துச் சிதறியது அந்த நட்சத்திரம். வான வெளியில் நிகழ்ந்த இந்த அற்புத காட்சியைக் கண்டு `ஆ... வென' மெய் சிலிர்த்து போயினர் விஞ்ஞானிகள். கோடிக்கணக்கான ஆண்டு ஆயுள் கொண்ட நட்சத்திரங்கள் வெடித்துச் சிதறி அழிவது அரிய பெரிய நிகழ்ச்சியாகும்.
சூரியனைப் போன்று பல மடங்கு பெரியதும் சிறியது மான நட்சத்திரங்கள் ஆயிரக்கணக்கில் வான வெளியில் உள்ளன.நட்சத்திரங்களில் உள்ள எரிவாயு எரிந்து கொண்டிருப்பதால் அவை பிரகாசிக்கின்றன. எரிவாயு எரிந்து காலியாகும் நிலையில் நட்சத்திரம் தனது ஈர்ப்பு சக்தியை இழக்கிறது. இதனால் எடை தாங்காமல் வெடித்து சிதறி விடுகிறது.
இவ்வாறு எரிவாயு காலியாகி கடந்த சில நாட்களுக்கு முன் வெடித்து சிதறியது தான் அந்த நட்சத்திரம். இது சூரியனை போன்று 10 மடங்கு அளவில் பெரியது.
வெடித்து சிதறுவதற்கு முன் அந்த நட்சத்திரத்தில் இருந்து புற ஊதாக்கதிர்கள் அலை அலையாக வெளியேறின. அப்போது எரிதுகள்கள் வினாடிக்கு 10 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் தீப் பிழம்பாக வெளியேறியது. அது சூரியனைப் போல் 100 கோடி மடங்கு பிரகாசமாக ஜொலித்தது.
இதனைக் கண்ட விஞ்ஞானிகள் பரவசமடைந் தனர். இதற்கு முன் இது போன்று நட்சத்திரம் வெடித்து சிதறியதை விஞ்ஞானிகள் பார்த்ததில்லை. ஏற்கனவே வெடித்துச் சிதறிய நட்சத்திரங்களைத் தான் இதுவரை கண்டறிந்து உள்ளனர்.
ஒரு நட்சத்திரம் வெடித்துச் சிதறுவதை பார்க்க வேண்டும் என்பது வானியல் விஞ்ஞானிகளின் நீண்டநாள் கனவு. அது இப்போதுதான் நிறைவேறி உள்ளது என்று கூறி உள்ளார் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானி கெவின் ஸ்சாவின்ஸ்கி.
No comments:
Post a Comment