இஸ்ரேல் விமான நிலையத்தில் பதற்றம்

பிரான்ஸ் ஜனாதிபதி நிக்கலஸ் சார்கோஸி மற்றும் அவரது பாரியால் கார்லா புரூனி ஆகியோர் இன்று செவ்வாய் கிழமை ரெல் அவிவ்ஸ் பென் குரியொன் விமான நிலையத்தில் நின்ற சமயம் இஸ்ரேலிய எல்லை பொலிஸ் அதிகாரியொருவர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இஸ்ரேல் விஜயம் செய்துள்ள பிரான்ஸ் ஜனாதிபது மற்றும் அவரது மனைவி கார்லா புரூனி ஆகியோர் இன்று தமது விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்புவதற்காக விமான நிலையத்திற்கு வந்துள்ளனர். இவர்களை வழியனுப்புவதற்காக இஸ்ரேலிய ஜனாதிபதி எஹுட் ஒல்மேர்டும் விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தார். இச் சமயமே இவ் இஸ்ரேலிய எல்லை காவல் பொலிஸ் அதிகாரி தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதனையடுத்து உடனடியாக சார்கோஸியும் அவரது மனைவியும் விமானத்தில் ஏறியுள்ளனர் .அத்துடன் விமான நிலையம் வந்திருந்த இஸ்ரேலிய ஜனாதிபதி எஹுட் ஒல்மேர்டும் பாதுகாப்பாக சென்றுள்ளதாக சர்வதேச செய்திச் சேவைகள் தெரிவித்துள்ளன

No comments: