இசைஞானியின் திரைப்படமல்லாத இசையாக்கங்கள்


இளையராஜா, "பஞ்சமுகி" என்ற கர்னாடக செவ்வியலிசை ராகத்தினை உருவாக்கியுள்ளார்.
"How to name it" என்ற இசைத்தொகுப்பினை முதலில் வெளியிட்டார் இளையராஜா. இசை ரசிகர்களுக்கு ஒரு புதிய பரிமாணத்தை அறிமுகம் செய்தது இந்த இசைத்தொகுப்பு. இத்தொகுப்பினை இசை மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ சுவாமிகள் மற்றும் மேற்கத்திய இசையமைப்பாளரான ஜே.எஸ்.பாஹ் ஆகிய இருவருக்கும் காணிக்கையாக்கினார்.

"Nothing But Wind" என்ற இரண்டாம் இசைத்தொகுப்பினை புல்லாங்குழல் கலைஞர் ஹரி பிரசாத் சௌராஸியாவுடன் இணைந்து வெளியிட்டார். "India 24 Hours" என்ற இந்திய பண்பாட்டின் பல்வேறு வர்ணங்களை விவரிக்கும் ஆவண-குறும்படத்திற்கு பின்னணி இசையினை அமைத்தார். இதில் வலி, மகிழ்ச்சி, ஏக்கம், நம்பிக்கை, உற்சாகம் போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருந்தது சிறப்பாகும்.

1996 ஆம் ஆண்டு உலக அழகிப் போட்டியின் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு இசையமைத்தார். "ராஜாவின் ரமண மாலை" என்ற இசைத் தொகுப்பினை எழுதி, இசையமைத்து வெளியிட்டார். இது ரமண மகரிஷிக்கு காணிக்கை செலுத்துவதாக அமைந்துள்ளது. "இளையராஜாவின் கீதாஞ்சலி" என்ற பக்தி இசைத்தொகுப்பினை வெளியிட்டுள்ளார். ஆதி சங்கரர் எழுதிய "மீனாக்ஷி ஸ்தோத்திரம்" என்ற பக்திப்பாடலுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

"மூகாம்பிகை" என்ற பெயரில் கன்னட பக்தி இசைத் தொகுப்பினை வெளியிட்டுள்ளார். மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகத்திற்கு, தெய்வீக அருளிசை வடிவில் இசையமைத்து வெளியிட்டுள்ளார்.

நடிகர் திலகமும் மனங்கவர் திரைப்படங்களும்


படையப்பா (1999) .... படையப்பாவின் தந்தை வேடம்
மன்னவரு சின்னவரு (1999)
பூப்பறிக்க வருகிறோம் (1999)
என் ஆசை ராசாவே (1998)
ஒரு யாத்ர மொழி (மலையாளம்) (1997)
கோபுர தீபம் (1997)
ஒன்ஸ் மோர் (1997)
பசும்பொன் (1995)
எங்கிருந்தோ வந்தான் (1995)
பாரம்பரியம் (1993)
சின்ன மருமகள் (1992)
நாங்கள் (1992)
முதல் குரல் (1992)
க்னோக் அவுட் (1992)
தேவர் மகன் (1992) .... பெரிய தேவராக
ஞானப் பறவை (1991)
காவலுக்குக் கெட்டிக்காரன் (1990)
புதிய வானம் (1988)
என் தமிழ் என் மக்கள் (1988)
அன்புள்ள அப்பா (1987)
வீரபாண்டியன் (1987)
தாம்பத்தியம் (1987)
கிருஷ்ணன் வந்தான் (1987)
குடும்பம் ஒரு கோயில் (1987)
முத்துக்கள் மூன்று (1987)
ராஜ மரியாதை (1987)
ஜல்லிக்கட்டு (1987)
விஷ்வனாத நாயக்குடு (தெலுங்கு) (1987)
தாய்க்கு ஒரு தாலாட்டு (1986)
சாதனை (1986)
மண்ணுக்குள் வைரம் (1986)
லக்ஸ்மி வந்தாச்சு (1986)
ஆனந்தக் கண்ணீர் (1986)
விடுதலை (1986)
மருமகள் (1986)
முதல் மரியாதை(1985) .... மலைச்சாமி வேடம்
படிக்காதவன் (1985)
ராஜ ரிஷி (1985)
பந்தம் (1985)
நீதியின் நிழல் (1985)
படிக்காத பண்ணையார் (1985)
நாம் இருவர் (1985)
நேர்மை (1985)
இரு மேதைகள் (1984)
வாழ்க்கை (1984)
வம்ச விளக்கு (1984)
சரித்திர நாயகன் (1984)
சிரஞ்சீவி (1984)
எழுதாத சட்டங்கள் (1984)
தராசு (1984)
திருப்பம் (1984)
சிம்ம சொப்பனம் (1984)
தாவனிக் கனவுகள் (1983)
உருவங்கள் மாறலாம் (1983)
சுமங்கலி (1983)
சந்திப்பு (1983)
உண்மைகள் (1983)
மிருதங்கச் சக்கரவர்த்தி (1983)
நீதிபதி (1983)
வெள்ளை ரோஜா (1983)
காஷ்மிர் காதலி (1983)
வசந்தத்தில் ஒரு நாள் (1982)
வா கண்ணா வா (1982)
தியாகி (1982)
துணை (1982)
தீர்ப்பு (1982)
சங்கிலி (1982)
பரீட்சைக்கு நேரமாச்சு (1982)
ஊரும் உறவும் (1982)
ஊருக்கு ஒரு பிள்ளை (1982)
நெஞ்சங்கள் (1982)
ஹிட்லர் உமாநாத் (1982)
கருடா சௌக்கியமா (1982)
லாரி டிரைவர் ராஜாக்கண்ணு (1981)
கீழ்வானம் சிவக்கும் (1981)
கல்தூன் (1981)
அமரகாவியம் (1981)
சத்ய சுந்தரம் (1981)
ரிஷி மூலம் (1980)
இரத்த பாசம் (1980)
விஷ்வரூபம் (1980)
எமனுக்கு எமன் (1980)
தர்ம ராஜா (1980)
மோகனப் புன்னகை (1980)
மாடி வீட்டு ஏழை (1980)
நான் வாழ வைப்பேன் (1979) .... ரவி வேடம்
வெற்றிக்கு ஒருவன் (1979)
திரிசூலம் (1979)
பட்டாகத்தி பைரவன் (1979)
நல்லதொரு குடும்பம் (1979)
நான் வாழவைப்பேன் (1979)
கவரி மான் (1979)
இமயம் (1979)
வாழ்க்கை அலைகள் (1978)
என்னைப் போல் ஒருவன் (1978)
ஜெனெரல் சக்கரவர்த்தி (1978)
ஜஸ்டிஸ் கோபினாத் (1978)
பைலட் பிரேம்நாத் (1978)
தியாகம் (1978)
புண்ணிய பூமி (1978)
அந்தமான் காதலி (1977)
சானக்ய சந்திரகுப்தா (தெலுங்கு) (1977)
அண்ணன் ஒரு கோயில் (1977)
தீபம் (1977)
இளைய தலைமுறை (1977)
நாம் பிறந்த மண் (1977)
அவன் ஒரு சரித்திரம் (1976)
உத்தமன் (1976)
உனக்காக நான் (1976)
சத்தியம் (1976)
ரோஜாவின் ராஜா (1976)
கிரகப் பிரவேசம் (1976)
டாக்டர் சிவா (1975) .... டாக்டர் சிவா வேடம்
அன்பே ஆருயிரே (1975)
அவன் தான் மனிதன் (1975)
தங்கப்பதக்கம் (1974)
அன்பைத்தேடி (1974)
என் மகன் (1974)
தீர்க்க சுமங்கலி (1974)
பக்த துகாரம் (தெலுங்கு) (1973) .... சிவாஜி
கௌரவம் (1973)
ராஜபாட் ரங்கதுரை
இராஜராஜசோழன் 1973)
பாரத விலாஸ் 1973)
பங்காரு பாபு (தெலுங்கு)(1972)
ஞான ஒளி (1972) .... அந்தொனி வேடம்
வசந்த மாளிகை (1972)
நீதி (1972)
சவாலே சமாளி (1971)
மூன்று தெய்வங்கள் (1971)
சுமதி என் சுந்தரி (1971)
பாபு (1971)
குலமா குணமா (1971)
தங்கைக்காக (1971)
இரு துருவம் (1971)
வியட்னாம் வீடு (1970) .... பத்மநாப ஜயர் வேடம்
விளையாட்டுப் பிள்ளை (1970)
எங்கள் தங்கம் (1970)
எங்க மாமா (1970)
பாதுகாப்பு (1970)
காவல் தெய்வம் (1969)
தெய்வ மகன் (1969)
சிவந்த மண் (1969)
தங்கச் சுரங்கம் (1969)
குருதட்சனை (1969)
தில்லானா மோகனாம்பாள் (1968) .... சிக்கில் சண்முகசுந்தரம் வேடம்
உயர்ந்த மனிதன் (1968)
கௌரி (1968)
எங்க ஊரு ராஜா (1968)
திருமால் பெருமை (1968)
கலாட்டா கல்யாணம் (1968)
என் தம்பி (1968)
இரு மலர்கள் (1967)
கந்தன் கருணை (1967) .... வீரபாகு வேடம்
தங்கை (1967) .... மதன் வேடம்
திருவருட்செல்வர்(1967)
மோட்டார் சுந்தரம் பிள்ளை (1966) .... சுந்தரம் பிள்ளை
மகாகவி காளிதாஸ் (1966)
செல்வம் (1966)
திருவிளையாடல் (1965) .... சிவனின் அவதாரங்களாக
சாந்தி (1965)
பழனி (1965)
அன்புக்கரங்கள் (1965)
புதிய பறவை (1964)
கை கொடுத்த தெய்வம் (1964)
நவராத்திரி (1964)
ராமதாசு (தெலுங்கு) (1964)
பச்சை விளக்கு (1964)
இருவர் உள்ளம் (1963) .... செல்வம் வேடம்
கர்ணன் (1963) .... கர்ணன் வேடம்
பார் மகளே பார் (1963)
ரத்த திலகம் (1963) .... குமார் வேடம்
அறிவாளி (1963)
குலமகள் ராதை (1963)
குங்குமம் (1963)
அன்னை இல்லம் (1963)
பலே பாண்டியா (1962)
பார்த்தால் பசி தீரும் (1962)
பவித்ர பிரேமா (தெலுங்கு) (1962)
ஆலயமணி (1962)
நிச்சய தாம்பூலம் (1962)
படித்தால் மட்டும் போதுமா (1962)
வடிவுக்கு வளைகாப்பு (1962)
கப்பலோட்டிய தமிழன் (1961) .... வ.உ சிதம்பரம்பிள்ளை வேடம்
பாலும் பழமும் (1961)
பாப்பா பரிகாரம் (1961)
பாசமலர் (1961) .... ராஜசேகரன் வேடம்
பாவமன்னிப்பு (1961) .... ரஹிம் வேடம்]
புனர் ஜென்மம் - (1961)
படிக்காத மேதை (1960)
பாவை விளக்கு (1960)
இரும்புத்திரை (1960)
தெய்வப் பிறவி (1960)
பில்லலு தெச்சின சாலனி ராஜ்ஜியம் (தெலுங்கு) (1960)
மரகதம் (1959) .... வரேந்திரன்
வீரபாண்டியக் கட்டப்பொம்மன் (1959) .... கட்டப்பொம்மன் வேடம்
பாகப்பிரிவினை (1959)
தாயைப்போல் பிள்ளை நூலைப்போல் சேலை (1959)
தங்கப்பதக்கம் (1959)
சபாஷ் மீனா (1958)
ஸ்கூல் மாஸ்டர் (1958)
சாரங்கதார (1958)
உத்தமபுத்திரன் (1958)
காத்தவராயன் (1958)
அம்பிகாபதி (1957) .... அம்பிகாபதி வேடம்
மக்களை பெற்ற மகராசி (1957) .... செங்கோடையன்
தங்கமலை இரகசியம் (1957)
வணங்காமுடி (1957)
தால வன்சானி வீருடு (தெலுங்கு) (1957)
புதையல் (1957)
பாக்யவதி (1957)
அமரதீபம் (1956) .... அசோல்
பெண்ணின் பெருமை(1956)
ரங்கூன் ராதா (1956) .... தர்மலிங்க முதலியார் வேடம்
தெனாலி இராமன் (1956) .... தெனாலி இராமக்கிருஷ்ணா
கள்வனின் காதலி (1955) .... முத்தையன்
மங்கையர் திலகம் (1955) .... வாசு வேடம்
முதல் தேதி (1955) .... சிவஞானம்
கூண்டுக்கிளி (1954)
அந்த நாள் (1954) (சிவாஜி கணேசன் வேடம்)
எதிர்பாராதது (1954) .... சுந்தர் வேடம்
மனோகரா (1954) .... மனோகரா வேடம்
அன்பு (1954)
பூங்கோதை (1954)
பர்தேசி (1953) .... ஆனந்த் வேடம்
பெம்புடு கொடுக்கு (தெலுங்கு) (1953) .... மோகன் வேடம்
பராசக்தி (1952) .... குணசேகரன் வேடம்

நிஜ வில்லனான எம் ஆர் ராதா


1967-ம் ஆண்டு ஜனவரி 12-ம் நாள் மாலையில் எம்.ஆர். இராதாவும், திரைப்படத் தயாரிப்பாளார் வாசுவும் எம்.ஜி.ஆரின் மணப்பாக்கம் தோட்டத்து வீட்டிற்குச் சென்று அவரைச் சந்தித்துப் பேசியுள்ளனர். இந்த சந்திப்பின்போது எம்.ஜி.ஆர். துப்பாக்கியால் தனது இடது காதருகே சுடப்பட்டார். இராதாவின் உடலில் நெற்றிப் பொட்டிலும் தோளிலுமாக இரு குண்டுகள் பாய்ந்தன. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரும் உயிர்பிழைத்தனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டையடுத்து இராதா எம்.ஜி.ஆரை சுட்டுக் கொல்ல முயன்றார் என்றும், அதன்பின் தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்ய முயன்றார் என்றும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

துப்பாக்கிச் சூடு நடந்த பொழுது எம்.ஜி.ஆர். தமிழ்த் திரைப்படத்துறையில் ஒரு பெரிய நடிகராக இருந்தார். அந்நேரம், அண்ணாத்துரை தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் வெகுவாக வளர்ந்து கொண்டிருந்தது. தேர்தலை எதிர்நோக்கி பரவலான முயற்சிகள் செய்து கொண்டிருந்தது. வெற்றிபெரும் வாய்ப்பும் கூடுதலாக இருந்தது. அக்கட்சியின் வாக்குசேகரிப்புத் திட்டத்தில் எம்.ஜி.ஆரின் திரைப்படம் சார்ந்த புகழும் ஒரு முக்கிய பங்கு வகித்தது.

எம்.ஆர்.இராதாவும் அனைவரும் மதிக்கும் மேடை நாடக மற்றும் திரைப்பட நடிகராக விளங்கினார்.[1] பெரிய நடிகரான எம்.ஜி.ஆர். கூட எம்.ஆர்.இராதா நிற்கையில் அமர்ந்து பேசுவதில்லை என்று வழக்கு விசாரனையில் தெரிவித்திருந்தார். பெரியார் தலைமையிலான திராவிடர் கழகம் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்திருந்தது. இருப்பினும் அத்தேர்தலில் அக்கட்சி காங்கிரஸ் கட்சியை ஆதரித்தது. திராவிடர் கழகத்தின் முன்னணி ஆதரவாளரான[2][3] ராதா, காமராஜரின் தனிப்பட்ட நண்பரும் ஆவார். இதனால், அவர் காங்கிரசுக்கு ஆதரவாகவும், தி.மு.கவிற்கு எதிராகவும் ஒரு தீவிர நிலைப்பாட்டை எடுத்திருந்தார்.

துப்பாக்கிச் சூட்டிற்குப் பிறகு வழக்கு துவங்குகையில் தேர்தல் முடிவுற்று அண்ணா தலைமையிலான தி.மு.க. அரசு ஆட்சியில் அமர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

முதலில் சைதாப்பேட்டை முதல் வகுப்பு நீதிபதி எஸ். குப்புசாமி முன்னிலையில் நடைபெற்ற வழக்கின் இறுதியில் அவர் இராதா குற்றவாளி என்றே தோன்றுவதாகத் தீர்ப்பளித்தார். அதன்பின் செங்கல்பட்டு அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி லட்சுமணன் முன்னிலையில் வழக்கு நடைபெற்றது. அரசு தரப்பில் வழக்கறிஞர் பி.ஆர். கோகுலகிருஷ்ணனும், இராதா தரப்பில் வழக்கறிஞர் என்.டி. வானமாமலையும் வாதாடினர்.[4] ஒன்பது மாத கால வழக்கு விவாதத்திற்குப் பின்னர் நவம்பர் 4-ம் தேதி நீதிபதி தனது 262 பக்கத் தீர்ப்பை வழங்கினார். அதில், வாசுவின் சான்றின் அடிப்படையிலும், இராதாவிற்கு எம்.ஜி.ஆர். மீது தொழில்முறை எதிர்ப்புநிலை இருந்ததன் அடிப்படையிலும் இராதா குற்றவாளியென முடிவு செய்தார். இக்குற்றத்திற்கென இந்திய தண்டனைச் சட்டம் 307, 309-ம் பிரிவுகளின் கீழும், 1959-ம் ஆண்டு ஆயுதச் சட்டம் 25(1), 27 பிரிவுகளின் கீழும் அவருக்கு ஏழு வருடக் கடுங்காவல் தண்டனை விதித்தார். இராதாவின் வயது (57) கருதியே மேலும் கடுமையான தீர்ப்பு வழங்கவில்லை என்றும் குறிப்பிட்டார். இதன்பின், வழக்கத்திற்கு மாறாக, வழக்கு விசாரணைக்கான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாத நிலையிலேயே சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை எடுத்துக் கொண்டு தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது. உச்சநீதி மன்றத்தில் இராதா மேல்முறையீடு செய்ததன் பேரில் வெறுமனே உயர்நீதிமன்ற விசாரணை சரியா என்று மட்டும் பார்க்காமல் சாட்சிகளை மீண்டும் விசாரித்த இந்திய உச்சநீதி மன்றம் அவரது தண்டனைக் காலத்தை ஏழிலிருந்து மூன்றரை ஆண்டுகளாகக் குறைத்தது.

தீர்ப்பு மற்றும் தண்டனைக்குப் பின் இராதா சிறையில் இருக்கும்போது ரஷ்யா அல்லது ராணி என்றழைக்கப்பட்ட அவரது மகளுக்குத் திருமணம் நடந்தது. இராதாவால் அதில் கலந்துகொள்ள முடியவில்லை. காமராஜரின் தூண்டுதலின்பேரில்தான் இராதா எம்.ஜி.ஆரைச் சுட்டார் என்ற வதந்தி நிலவியதால் அவர் திருமணத்திற்குத் தலைமை தாங்கவில்லை, பெரியார் தலைமையேற்றார். திரையுலக நடிகர்களில் ஜெமினி கணேசன்-சாவித்திரி தம்பதியைத் தவிர வேறு பெரிய நடிகர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.

1968 இறுதியில் இராதாவிற்கு திருச்சியில் தங்கியிருக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டுடன் ஜாமீன் கிடைத்தது. பின்னர் உச்சநீதிமன்ற தீர்ப்பிற்குப்பின் இராதா விடுதலையானார். விடுதலையானபின் தனது வெற்றி நாடகங்களான தூக்குமேடை, ரத்தக்கண்ணீர், லட்சுமிகாந்தன் கொலை வழக்கு ஆகிய நாடகங்களின் தொகுப்பாக கதம்பம் என்ற பெயரில் நாடகம் நடத்தினார். ராதாவே எம்.ஜி.ஆருடன் பேசி நாடகத்திற்குத் தலைமை தாங்குமாறு அழைத்தார்; அவரும் ஒப்புக் கொண்டார். எனினும் ஏதோ காரணங்களுக்காக அவர் கலந்துகொள்ளவில்லை. பின்னர் பெரியாரின் இறுதிச் சடங்கின்போது எம்.ஜி.ஆரும் இராதாவும் சந்தித்துக் கொண்டனர் என்றும் அப்போது அவர் எம்.ஜி.ஆருக்கு தனதருகில் இருப்பவர்களை நம்பக்கூடாது என்று எச்சரிக்கை செய்ததாகவும் கூறப்படுகிறது.

மு.க.முத்து நடிப்பில் வந்த சமையல்காரன் என்ற திரைப்படத்திலும் பின்னர் ஜெய்சங்கருடன் நான்கு படங்களிலும் இராதா நடித்தார். 1975-ல் இந்திரா காந்தி அரசின் நெருக்கடி நிலை அறிவிப்பின்பின் உள்நாட்டுப் பாதுகாப்புப் பேணல் சட்டம் மிசாவின்கீழ் மீண்டும் கைது செய்யப்பட்டார். அப்போது விடுதலைக்கீடாக பெரியாருடன் தொடர்பில்லை என்று எழுதித்தர வேண்டும் என்ற நிபந்தனையை ஏற்க மறுத்துவிட்ட அவர் பதினோரு திங்கள் சிறைக்குப்பிறகு மைய அரசு அமைச்சர்களின் தலையீட்டின் பேரில் வெளிவந்தார்.

அதன்பின் சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் வெற்றிகரமாக நாடகம் நடத்திவிட்டு மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டதையடுத்து திருச்சி திரும்பினார். 1979-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி இறந்தார். அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள எத்தனித்தாலும் அவரது பாதுகாப்புக் கருதி இராதா குடும்பத்தினர் அவரை வர வேண்டாம் எனக் கூறிவிட்டனர். அரசுமரியாதையையும் ஏற்க மறுத்துவிட்டனர்.

"காக்க காக்க" வில் மாயா உயிருடன்.................

"காக்க காக்க" வின் இறுதியில் 'மாயா' (ஜோதிகா) பாண்டியனால் (ஜீவனால்) சுட்டுக்கொலை செய்யப்படுகிறாள். திரைப்படம் சிறப்பாக அமைந்தாலும் அந்த காட்சி ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியது. தமிழ் திரைப்படம் என்றாலே கதாநாயகனும் கதாநாயகியும் சேர்ந்து விடுவார்கள் என்பது ரசிகர்களின் ஒரு நப்பாசை.தனது மனைவியை எவ்வளவு மீட்கப் பாடுபட்டும் இறுதியில் தோல்விகண்ட சூரியா, தனது மனைவியை மீட்டால் எவ்வளவு சந்தோஷப் படுவார்.ஜோதிகா உயிருடன் இருந்தால் எப்படி இருக்கும் என்றுதான் பாருங்களேன்................

அல்பர்ட் ஐன்ஸ்டீனின் கண்டுபிடிப்புகள்
[1905] இல் வெளிவந்த அவரது முதலாவது கட்டுரையான "நிலையானதிரவத்தில் தொங்கும் சிறிய துணிக்கைகளின் வெப்ப மூலக்கூற்றுக்கொள்கையினால் வேண்டப்படும் இயக்கத்தில்" அவரது பிரௌனியன் இயக்கம்தொடர்பான ஆராய்ச்சியை விபரித்தது.அப்போது சர்ச்சைக்குள்ளாகியிருந்த திரவஇயக்கவியலினைப் பாவித்து, முதன் முதலில் அவதானிக்கப்பட்டு பலஆண்டுகள் கடந்த நிலையில், இப்போதும் கூட திருப்தியான விளக்கம்கொடுக்கப்படாத இப் பிரௌனியன் இயக்கமானது அணுக்கள் இருப்பதற்கானஅனுமான ரீதியான ஆதாரமாகக் கொள்ளப்படலாம் என இக்கட்டுரைநிறுவியது.அத்துடன் அப்போது சர்ச்சையில் இருந்த இன்னொரு விடயமானபுள்ளிவிபரப்பொறிமுறையினையும்(statistical mechanics) இது தெளிவுபடுத்தியது.

இக்கட்டுரை அணுக்கள் என்பது ஒரு பயன்பாடான கோட்பாடாகஅங்கீகரிக்கபட்டிருந்தாலும் கூட, அணுக்களின்இருக்கை தொடர்பாக பெளதீகவியலாளர்களுக்கும் இரசாயனவியலாளர்களுக்குமிடையில்l சூடானவிவாதங்கள் நடைபெற்று வந்தன. அணுக்கொள்கை தொடர்பான ஐன்ஸ்டீனின்புள்ளிவிபர ரீதியான விளக்கம், சாதாரண நுணுக்குகாட்டியினூடாகநோக்குவதன் மூலம் அணுக்களை எண்ணும் வழியினைப்பரிசோதனையாளர்களுக்குக் வழங்கியது. அணுவுக்கெதிரான கொள்கையுடையஒரு முக்கியஸ்தரான வில்கெல்ம் ஒஸ்ற்வால்ட் (Wilhelm Ostwald) என்பவர், ஐன்ஸ்டீனின் பிரெளணியனின் இயக்கம் தொடர்பான முழுமையான விளக்கம்காரணமாக, தான் அணு தொடர்பாக நம்பத்தலைப்பட்டிருந்தார் எனப் பின்னாளில்ஆர்ணல்ட் ஸோமர்பெல்ட் (Arnold Sommerfeld) என்பவரிடம் கூறியிருந்தார்.

ஒளியின் உற்பத்தி மற்றும் மாற்றீடு தொடர்பான ஓர் ஆய்வு ரீதியான நோக்கில்" ("On a Heuristic Viewpoint Concerning the Production and Transformation of Light") என்கின்ற அவரது இரண்டாவது ஆய்வுக்கட்டுரையானது ஒளிச்சக்திச் சொட்டுஇப்போது போட்டோன் [Photon] என அழைக்கப்படுகிறது) என்றகருதுகோளினை முன்வைத்ததுடன் இது எவ்வாறு ஒளிமின் விளைவு போன்றவிடயங்களை விளக்க பயன்படுத்தப்படலாம் எனவும் விபரித்தது. இச் சக்திச்சொட்டுக் கருதுகோளானது, ஒளிச் சக்தியானது ஒரு குறித்த அளவுடையதொடர்ச்சியற்ற) சக்திச் சொட்டுக்களாகவே (quanta) உறிஞ்சப்படவோகாலப்படவோ முடியும் எனக் கருதும் போது, மக்ஸ் பிளாங் (Max Planck)கினால்முன்வைக்கப்பட்ட கரும்பொருட் கதிர்ப்பு விதியினை (law of black-body radiation) வலுப்படுத்தியது. ஓளியானது உண்மையில் தனித்தனிச் சக்திப்பொட்டலங்களாலேயே (Packets) உருவாக்கப்பட்டது எனக் கருதுவதன் மூலம், ஐன்ஸ்டீனினால் மர்மமாகவிருந்த ஒளிமின் விளைவை விளக்க முடிந்தது.

ஓளியின் இச் சக்திச் சொட்டுக் கருதுகோளானது, ஜேம்ஸ் கிளாக்மக்ஸ்வெல்லின்(James Clerk Maxwell) மின் காந்த நடத்தைக்கானசமன்பாடுகளினால் வழிநடத்தப்படும் ஒளியின் அலைக்கொள்கையுடன்முரண்பட்டதுடன், பெளதிகத் தொகுதிகளிலுள்ள சக்தியானது மேலும் மேலும்முடிவற்ற பகுதிகளாகப் பிரிக்கப்பட முடியும் (infinite divisibility of energy) என்றகருத்துடனும் பொதுப்படையாக முரண்பட்டது. ஒளிமின் விளைவுக்கானஐன்டீனின் சமன்பாடுகள் மிகச் சரியானவை என பரிசோதனைகள் மூலம்நிரூபிக்கப்பட்ட பின்னரும் கூட, அவரது விளக்கமானது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. எனினும், 1921 இல் அவருக்கு நோபல் பரிசுவழங்கப்பட்டபோது ஒளி மின்னியலில் அவருடைய உழைப்புவிதந்துரைக்கப்பட்ட பின்னரே பெரும்பாலான பெளதீகவியலாளர்கள்அவருடைய சமன்பாடு hf = Φ + Ek சரியெனவும் ஒளிச் சொட்டு சாத்தியமெனவும்எண்ணத்தலைப்பட்டனர்.

சக்திச் சொட்டுப் பொறிமுறையினைத்(quantum mechanics) தோற்றுவித்தவர்களால் அடிப்படைத் தத்துவமாகப் பயன்படுத்தப்பட்டகருதுகோளான ஒளியின் அலைத்-துணிக்கை இரட்டைத்தன்மை (wave-particle duality), அதாவது பெளதிகத் தொகுதிகள் அலைத்தன்மை, துணிக்கைத்தன்மைஆகிய இரு வேறுபட்ட இயல்புகளையும் காட்டவல்லவை என்ற கருத்தினைச்சக்திச் சொட்டுக் கொள்கை வலியுறுத்தியது. சக்திச் சொட்டுப் பொறிமுறைவிருத்தியடைந்த பின்னரே ஒளி மின் விளைவு தொடர்பான முழுமையானதெளிவு பெறப்பட்டது.

ஐன்ஸ்டீனின் மூன்றாவது ஆய்வுக்கட்டுரையான, "இயங்கும் பொருட்களின்மின்னியக்கவியலில்" ("On the Electrodynamics of Moving Bodies") என்பது 1905 ஜூன்இல் வெளிவந்தது. இக்கட்டுரையை எழுதிக் கொண்டிருந்த காலத்தில்ஐன்ஸ்டீன் மிலேவாவுக்கு "சார்பு இயக்கத்தில் எமது உழைப்பு" என்பது பற்றிகடிதம் எழுதியுள்ளமையானது, மிலேவாவும் இவ் ஆய்வில் பங்குபற்றினாராஎனச் சிலரை வினவ இடமளிக்கிறது. இக்கட்டுரையானது நேரம், தூரம், திணிவுமற்றும் சக்தி தொடர்பான கொள்கையான விசேட தொடர்புக் கொள்கையினைஅறிமுகப்படுத்தியதுடன் மின்காந்தவியலுடன்(electromagnetism) பொருந்துவதாயும் புவியீர்ப்பு விசையைத் தவிர்ப்பதாயும் இருந்தது.

ஏனைய சில தெரிந்த அலைகளைப்போன்றல்லாது ஒளி அலை பயணம்செய்வதற்கு நீர், வளி போன்ற ஒரு ஊடகம் அவசியமில்லை என்பதைக் காட்டியமைக்கெல்சன்-மோலே பரிசோதனையினால்(Michelson-Morley experiment) உருவான குழப்பத்தை விசேட தொடர்பியல் தீர்த்து வைத்தது. இதன் மூலம்ஒளியின் வேகமானது மாறாதது, அவதானியின் இயக்கத்தில் தங்கியது அல்லஎன்பது நிரூபணமாயிற்று. நியூட்டனின் புராதனப் பொறிமுறையின்(Newtonian classical mechanics) கீழ் இது சாத்தியமற்றதாகவிருந்தது.

இயங்கும் பொருட்கள் அவற்றின் இயக்கத்திசையில் நெருக்கப்பட்டிருக்குமாயின் மைக்கல்சன்-மோலே முடிவு பயன்படுத்தப்பட முடியும் என்பதை 1894 இல்ஏற்கனவே ஜோர்ஜ் பிற்சரால்ட்(George Fitzgerald) என்பவர் ஊகித்திருந்தார். உண்மையில் ஐன்ஸ்டீனின் இவ் ஆய்வுக்கட்டுரையின் சில முக்கியமானசமன்பாடுகளான லோறன்ஸ் மாற்றீடுகள் (Lorentz transforms), 1903 இல்போர்த்துக்கேயப் பெளதிகவியலாளரான ஹென்றிக் லோரன்ஸ் (Hendrik Lorentz) என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டவை என்பதுடன் அவை பிற்சரால்டினுடயஊகத்தினைக் கணித வடிவில் கூறின. அனாலும் இக் கேத்திரகணிதவிசித்திரத்திற்குரிய காரணங்களை ஐன்ஸ்டீன் தெரியப்படுத்தினார். (Light quanta) ( 30 )

அசையாக்கரடி


அசையாக்கரடி தென் அமெரிக்காவிலே வாழும் இரவிலே இரைதேடும் ஒரு விலங்கு. இது ஒரு தாவர உண்ணி என்றும், பூச்சி, பல்லி முத்லியவற்றையும் உண்ணும் என்பதால் எல்லாமுண்ணி விலங்கு என்றும் கூறப்படுகின்றது. இது நெடுநேரம் அசையாமலே இருக்கும் என்பதாலும், மிக மிக மெதுவாகவே நகரும் என்பதாலும் இதனை "அசையா"க் கரடி என்கிறோம். இதன் உடல் இயக்கமும் மிக மிக மெள்ளவே நடக்கும். இதன் வயிறு மிக மிக மெள்ளத் தான் இயங்கும். உண்ட உணவு செரிக்க ஒரு மாதம் கூட செல்லும். ஒரு ஆண் அசையாக்கரடி ஒரேயொரு பெண் கரடியுடன் தான் உறவாடி இருக்கும் என்பர்.

உலகில் இன்றுள்ள அசையாக்கரடிகள் இரு வெவ்வேறு குடும்பத்தை சேர்ந்த 6 இனங்களாக உள்ளன. மெதுவாக நகரும் மூன்று விரல்கள் கொண்ட பிராடிபொடிடீ (Bradypodidae) குடும்பத்தை சேர்ந்த மூவிரல் அசையாக்கரடி உள்ளது ஒரு குடும்பம் ஆகும். மற்றது இருவிரல் அசையாக்கரடி உள்ள மெகலோனிசிடீ (Megalonychidae) குடும்பம் ஆகும். மூவிரல் அசையாக்கரடியைன் விட இருவிரல் அசையாக்கரடி சற்றே பெரிதாகவும், சற்றே விரைவாகவும் நகரும், ஆனால் இவ் இரண்டு குடும்பங்களுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இல்லை. இவ்விரு வகை அசையாக்கரடிகளும் நடு அமெரிக்காவிலும் தென் அமெரிக்காவிலும் ஒரே காடுகளில்தான் வாழ்கின்றன.

அண்மைக் காலம் வரை அசையாக் கரடிகள் ஒரு நாளைக்கு 16 மணிநேரம் உறங்குகின்றன என்று அறிவியல் அறிஞர்கள் கணித்து இருந்தனர். இவ்வாய்வு உயிர்க்காட்சியகங்களில் பிடித்து வைத்து வளர்க்கும் விலங்குகளை ஆய்ந்ததின் பயனாக அறியப்பட்டது. ஆனால் அண்மையில், உறக்கத்தை அளக்கும் கருவிகளைக்கொண்டு அறிவியலாளர்கள் ஆய்ந்ததில், காட்டில் வாழும் பழுப்பு கழுத்துள்ள மூவிரல் அசையாக்கரடிகள் சராசரியாக ஒரு நாளைக்கு 9.6 மணிநேரம்தான் உறங்குகின்றன என்று கண்டறிந்துள்ளார்கள்

இரட்டைத்திமில் ஒட்டகம்

இரட்டைத்திமில் ஒட்டகம் (Camelus bactrianus) என்பது இரட்டைத் திமில் கொண்ட, பாலூட்டி விலங்கினத்தைச் சேர்ந்த ஒட்டகம் ஆகும். இவ் ஒட்டகங்கள் ஈடான சுமை தாங்கும் இரட்டைக் குளம்புகளைக் கொண்டுள்ளன. இவை சீனாவின் வடக்கேயும், மங்கோலியாவிலும் உள்ள கோபி பாலைநிலப்பகுதியில் வாழ்கின்றன. ஆப்கானிஸ்தானுக்கு வடக்கே, கிரேக்க மொழியில் பாக்ட்ரியா என்று அழைக்கப்பட்ட பகுதியில் கி.மு 2500 ஆண்டளவில் இந்த இரட்டைத் திமில் ஒட்டகம் வளர்ப்பு விலங்காக மாற்றப்பட்டது (கொல்லைப்படுத்தப்பட்டது) என்று நினைப்பதால், இதனை பாக்ட்ரிய ஒட்டகம் என்றும் அழைப்பர். பெரும்பாலும் காணப்படும் ஒற்றைத்திமில் ஒட்டகம் கி.மு 4000 ஆண்டளவில் வளர்ப்பு விலங்காக ஆனது என்று கருதப்படுகின்றது.

இன்று ஏறத்தாழ 1.4 மில்லியன் இரட்டைத்திமில் ஒட்டகங்கள் உலகில் வாழ்கின்றன. இவை வளர்ப்பு வகை ஒட்டகங்கள். ஆனால் 2002 அக்டோபர் மாதத்தில், வட மேற்கு சீன-மங்கோலியாப் பகுதியில் வளர்ப்புக்கு உட்படுத்தப்படாத இயற்கைசூழலில் வாழும் இரட்டைத்திமில் ஒட்டகங்களைக் கண்டுபிடித்துள்ளனர். இந்த இயற்கைவாழ் இரட்டைத்திமில் ஒட்டகங்கள் இன்று உலகில் ஏறத்தாழ 950 இருக்கலாம் என்றும், இந்த இயற்கைவாழ் வகை முற்றாக அழிவுறும் நிலையில் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டு அதற்கான பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த இரட்டைத்திமில் ஒட்டகங்கள் ஏறத்தாழ 3 மீட்டர் நீளமும் 2 மீட்டர் உயரமும் கொண்டவை. திமில்கள் மட்டுமே 20 செ.மீ உயரம் உடையவை. ஆண் ஒட்டகங்கள் 400 கிலோ கிராம் முதல் 600 கிலோகிராம் வரை எடையுள்ளதாக இருக்கும். பெண் ஒட்டகங்கள் ஏறத்தாழ 350 கிலோ கிராம் முதல் 500 கிலோ கிராம் வரை எடையுள்ளதாக இருக்கும். இரட்டைத்திமில் ஒட்டகங்களுக்கு அதிகமாக முடி (உடல்மயிர்) இருக்கும். இவற்றின் மூக்குத் துளைகளை இறுக்கி மூடிக்கொள்ளும் வசதி கொண்டவை. மணல் வீச்சில் இருந்து காத்துக்கொள்ள தடிப்பான கண்ணிமைகளும் உள்ளன.

இந்த ஒட்டகங்கள் நடக்கும் பொழுது இடப்புறம் உள்ள முன்னங்காலையும் பின்னங்காலையும் ஒரு சேர முன்னெடுத்து வைத்துப் பின்னர் வலப்புறம் உள்ள முன்னங்காலையும் பின்னங்காலையும் ஒரு சேர முன்னெடுத்து வைத்து நடக்கின்றன. இப்படி இடக்கால்களும் பின்னர் வலக்கால்களும் நகர்த்தி நடத்தலுக்கு குதிரை நடைக் கலைச்சொல்போலவே பண் அல்லது போக்கு என்று பெயர். இரட்டைத்திமில் ஒட்டகம் ஒன்று ஏறத்தாழ 200 கிலோ கிராம் எடையைச் சுமந்துகொண்டு ஒரு நாளைக்கு 50 கிலோ மீட்டர் தொலைவு நடக்க வல்லது. சிறுதொலைவு ஓட்டத்தில் மணிக்கு 65 கிலோ மீட்டர் விரைவில் ஓட வல்லது.

இவ்விலங்கின் இனப்பெருக்கம் பின்பனிக் காலத்தில் நடக்கிறது. ஆண் ஒட்டகங்கள் தம்முடைய ஐந்து முதல் ஆறு வயதிற்குள் இனப்பெருக்கத்திற்கான வளர்ச்சியை அடைகின்றன. பெண் ஒட்டகங்கள் மூன்று முதல் நான்கு வயதிற்குள் இனப்பெருக்கத்திற்கான வளர்ச்சியை அடைகின்றன. இனப்பெருக்கப் பருவத்தின்போது ஒரு குழுவில் உள்ள ஆண்களில் மிகவும் வலிமை வாய்ந்த ஒட்டகம் மற்ற ஆண் ஒட்டகங்களைக் கடித்தோ அவற்றின் மேல் அமர்ந்து காட்டியோ தன் வலிமையைப் பறைசாற்றும். இப்படி பெண் ஒட்டகத்தைக் கவர்ந்து பின் உறவு கொள்ளும். தன் வாழ்நாளில் ஒரு ஆண் ஓட்டகம் பல பெண் ஒட்டகங்களுடன் உறவு கொள்ளும். இவ்விலங்கின் சூல்கொள்ளும் காலம் பதிமூன்று மாதங்களாகும். ஓட்டகக் கன்று பிறந்த சில மணி நேரத்தில் நன்றாக நடக்கத் தொடங்கிவிடும். ஓட்டகக் கன்று மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை தன் தாயுடன் வாழும்.

இரட்டைத்திமில் ஒட்டகம் பகற்பொழுதில் உற்சாகத்துடன் இரை தேடும்.இவை தனியாகவோ 30 விலங்குகள் வரை கொண்ட குழுக்களாகவோ காணப்படும்.இவ்விலங்கு ஒரு தாவரவுண்ணி ஆகும்.எவ்வகையான கடினமான முட்களையும் உண்ணக்கூடிய தன்மையை இவ்விலங்கின் வாய் பகுதிகள் பெற்றுள்ளன. இவை உண்ணும்பொழுது உணவைப் பகுதியாக மென்றுவிட்டு உணவுப் பையில் சேகரித்துக்கொண்டு பின்பு ஓய்வு நேரத்தில் அசை போடும்.

இரட்டைத்திமில் ஒட்டகங்களில் தனித்த ஒரு சில உள்ளினங்கள் (சிற்றினிங்கள்) இருப்பதாக நம்ப இடம் உண்டு. இந்த ஒட்டகங்களில் மூன்று வெவ்வேறு இடங்களில் வாழும் வகைகளாகக் கொள்ள இடம் உள்ளது. இயற்கைவாழ் இரட்டைத்திமில் ஒட்டகங்கள் கோபி பாலை நிலத்தில் காழ்சுன் கோபி (Gashun Gobi) என்னும் பகுதியில் மட்டுமே வாழ்கின்றன. இவை வளர்ப்பு இரட்டைத் திமில் ஒட்டகங்களில் இருந்து பழக்க வழக்கங்களிலும், மரபணு தொடரமைப்பு முறைகளிலும் மாறுபட்டது. ஆனால் இம்மாறுபாடுகளின் சிறப்புத் தன்மையை இன்னும் நிறுவவில்லை. மரபணுக் குறிப்புத்தொடரில், 3% வேறுபாடு உள்ளதாக கூறப்படுகின்றது. மிகக் குறைந்த எண்ணிக்கையிலான இயற்கைவாழ் விலங்குகளின் தரவில் இருந்து பெற்றதால், இவை உறுதியான முடிவுகள் அல்ல.

கனடிய ஆய்வாளர் வில்லியம் சோம்மர்சு (William Sommers) என்பவர், இயற்கைவாழ் ஒட்டகங்கள் உப்புநீரை குடிக்கக்கூடியவை என்று கண்டு கூறியுள்ளார். வளர்ப்பு ஒட்டகங்கள் உப்புநீரைக் குடிக்க மாட்டா என்பது குறிப்பிடத்தக்கது. உப்புநீரைக் குடித்தாலும், அது இவ்விலங்குகளுக்குப் பயன்படுகின்றதா என்பது நிறுவப்படவில்லை.

படிவளர்ச்சியில் சிறப்பான மாறுபாடு கொண்ட, அதே நேரத்தில் உலகளாவிய வகையில் அழிவுறும் நிலையில் உள்ள விலங்குகள் என்னும் பட்டியலில் 8 ஆவதாக உள்ளது இந்த இரட்டைத்திமில் ஒட்டகம். குறிப்பாக இயற்கைவாழ் இரட்டைத்திமில் ஒட்டகம் அழிவுறும் தருவாயில் உள்ளது.

டுபாயின் தோற்றம்

நன்றி நண்பர் ருக்க்ஷான்

லினக்ஸ் இப்பொழுது நொக்கியாவில்...............


உலகின் முன்னணி செல்போன் தயாரிப்பு நிறுவனமான நோக்கியா நிறுவனம், தனது வாடிக்கையாளர்களின் இண்டநெட் இணைப்பு சேவையைக் கருத்தில் கொண்டு, லினெக்ஸ் ஆபரேட்டிங் சிஸ்டத்தை புதிய போன்களில் வழங்குவது குறித்து யோசித்து வருகிறது.

இதன்மூலம் இண்டநெட் இணைப்புடன் கூடிய போன்கள் விற்பனையை அதிகரிக்க நோக்கியா திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

செல்போன்களில் தற்போது லினெக்ஸ் ஓ.எஸ். வெற்றிபெற்றுள்ள நிலையில், சந்தையில் லினெக்ஸ் போன்களின் மாடல்களை அதிகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

விமக்ஸ் போன்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு லினெக்ஸ் போன்களை வழங்க நோக்கியா முடிவு செய்திருப்பதாக அந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறினார்.

தடையை வென்றது 'தசாவதாரம்"


நடிகர் கமல் நடித்துள்ள தசாவதாரம் படத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதி மன்றம் இன்று தள்ளுபடி செய்தது. சர்வதேச ஸ்ரீவைஷ்ணவ தர்ம சம்ராக்ஷண அமைப்பின் தலைவர் ஸ்வாமி கோவிந்த ராமானுஜ தாசா என்பவர் நடிகர் கமல் நடித்துள்ள தசாவதாரம் படத்தை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.
.
இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், ‘தசாவதாரம் படத்தில் சைவர்களுக்கும், வைணவர்களுக்கும் மோதல் ஏற்படுவது போல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இது இந்துக்களை புண்படுத்துவதாகும். எனவே இந்தப் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கிவிட்டு தணிக்கை சான்றிதழ் வழங்க தணிக்கை குழுவிற்கு உத்தரவிட வேண்டும்.

மேலும், தசாவதாரம் என்ற பெயரை படத்திற்கு பயன்படுத்த தடை விதிக்கவேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் வெங்கட்ராமன், சத்திய நாராயணன் ஆகியோர் அடங்கிய உயர்நீதி மன்ற டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது. இந்த வழக்கில் தணிக்கைக் குழு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதே போல படத்தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் சார்பிலும் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அவர்கள் தங்கள் மனுவில், ‘12-ம் நூற்றாண்டில் நடந்த வரலாற்று சம்பவத்தை பின்னணியாக கொண்டு படம் எடுக்கப்பட்டுள்ளது. படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இல்லை. கற்பனையான குற்றச்சாட்டுக்களை மனுதாரர் கூறியுள்ளார்.

இந்த படத்தை தணிக்கைக்குழு பார்த்த பிறகே ‘யூ’ சான்றிதழை வழங்கி உள்ளது. மனுதாரர் படத்தை பார்க்காமலேயே வழக்கு தொடுத்துள்ளார்.

படத்தின் தலைப்புக்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது. எனவே மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் படத்தை எதிர்க்கும் மனுவை தள்ளுபடி செய்து இன்று தீர்ப்பளித்தனர்.

‘தசாவதாரம்’ தலைப்புக்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது. படத்தில் ஓம், பிரணவ மந்திரம், பகவத் கீதை ஆகியவற்றின் மீது கால் வைப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருப்பதாக மனுதாரர் கூறியிருப்பது கற்பனையானது.

ராமானுஜர் என்ற கதாபாத்திரம் படத்தில் இடம் பெறவில்லை. மனுதாரர் கற்பனையான குற்றச்சாட்டுக்களை கூறியிருக்கிறார்.

அரசியல் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள கருத்துரிமையை தடுக்க யாருக்கும் உரிமை கிடையாது. அதே நேரத்தில் எந்த பிரிவு மக்களின் உணர்வுகளையும், மத நம்பிக்கைகளையும் புண்படுத்தும் வகையில் கருத்துரிமையை யாரும் தவறாக பயன்படுத்தக் கூடாது என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.