Pen Drive மூலம் பரவும் வைரஸ்களைத் தடுக்க......


தற்பொழுது பென்டிரைவ் மூலமாக பரவும் வைரஸ், மால்வேர்களின் தொல்லை மிகவும் அதிகமாக உள்ளது.

இதனை தடுக்க ஒரு இலவச மென்பொருள் உள்ளது. USB Firewall எனப்படும் இந்த மென்பொருளை உங்கள் கணணியில் நிறுவிக் கொள்ளவும்.

அதன் பின் எந்தவொரு பென்ட்ரைவையும் கணணியுடன் இணைக்கும் பொழுது, இந்த மென்பொருளானது அதுவாகவே பென்ட்ரைவை ஸ்கேன் செய்து விடும். கணணியில் நுழைய முயற்சிக்கும் கோப்புகளை தடுத்து நிறுத்தும். (முக்கியமாக Autorun.inf).

உங்கள் கணணியில் வேறு ஆண்டி வைரஸ் மென்பொருள் நிறுவப்பட்டிருந்தாலும் அதனோடு இதையும் உபயோகப்படுத்தலாம்.

தரவிறக்கச்சுட்டி

இலவச மென்பொருட்களை அங்கீகாரத்துடன் தரவிறக்கம் செய்ய

சாதாரன இலவச மென்பொருளை தரவிறக்க விரும்பினால் கூகுளில் சென்று தேடி ஒவ்வொரு மென்பொருளாகத் தான் தரவிறக்க வேண்டும்.

ஆனால் நமக்கு பயன்படும் அனைத்து இலவச மென்பொருட்களையும் அங்கீகாரத்துடன் ஒரே இடத்தில் இருந்து எளிதாக நம் கணணியில் நிறுவலாம்.

புதிதாக அறிமுகமாகிக் கொண்டிருக்கும் அனைத்து பீரிவேர் அப்ளிகேசன் பற்றிய தகவல்களும், எத்தனை பேர் இந்தப் புதிய மென்பொருளை பயன்படுத்தியுள்ளனர் எப்படி இருக்கிறது என்று பயன்படுத்திய மக்களின் பின்னோட்டத்துடன் நாம் எளிதாக அறியலாம்.

இலவச மென்பொருட்களை கொடுக்க பல இணையதளம் இருந்தாலும் சில நேரங்களில் இவ்வாறான தளங்களில் சென்று தரவிறக்கும் போது Adware என்று சொல்லக்கூடிய தொல்லைகள் நம் கணணியில் ஊடுறுவ வாய்ப்பிருக்கிறது.

இதற்காக மென்பொருள் உருவாக்கும் நிறுவனத்தின் இணையதளத்திற்கு சென்று தரவிறக்கலாம் அல்லது இதே போல் நம்பிக்கையாக இருக்கும் தளத்தில் இருந்து இலவச மென்பொருட்களை எளிதாக தேடி தரவிறக்கலாம்.

ஆனால் www.freenew.net என்ற இணையத்தளத்தின் மூலம் நேரடியாக குறிப்பிட்ட மென்பொருள் உருவாக்கும் இணையதளத்திற்கே இணைப்பு கொடுத்து நேரடியாக Install செய்யலாம்.



விடை தரும் கணிதம்......!

கணித பாடம் தொடர்பாக எழுகின்ற சந்தேகங்கள் மற்றும் பிரச்சனைகளை சில நொடிப்பொழுதுகளில் மிக இலகுவாக தீர்த்து வைக்கிறது இந்த இணையம்.

மாணவர்களுக்கு இந்த இணையம் மிக பெரிய சேவையினை செய்கின்றது என்றால் அது மிகையாகாது.

இந்த இணையத்தில் கணித பாடம் தொடர்பான உங்களின் வினாக்களை டைப் செய்து பின்னர் அதன் கீழே பாட அலகினை தெரிவு செய்து பின்னர் Answer என்பதை கிளிக் செய்தவுடன் விடை தோன்றும்.

மிக தெளிவான விளக்கத்துடன் விடையினை பெறும் வசதியும் உண்டு. கணித பாடத்தின் முழு பாட அலகினையும் கொண்டுள்ளமை இதன் மற்றுமொரு சிறப்பம்சம் ஆகும்.

அத்துடன் இந்த தளத்தில் உங்களை பதிவு செய்து உங்களின் வினாக்களையும் அதற்கான பதில்களையும் சேமிக்க முடியும். ஏற்கனவே தீர்க்கப்பட்ட பிரச்சனைகளையும் பார்க்க முடியும்.


இந்த இணையத்தளத்தில் பெற்றுகொள்ளலாம் www.mathway.com