உலகிலேயே விலை அதிகம் 2.5 லட்சத்துக்கு கறுப்பு தர்பூசணி ஏலம்

ஒரே ஒரு தர்பூசணி பழத்தை எவ்வளவு விலை கொடுத்து வாங்குவீர்கள்? ம்...ம்.. அதிகபட்சமாக 50 ரூபாய். ஆனால் ஜப்பானில் ஒரே ஒரு தர்பூசணி ரூ.2.5 லட்சத்துக்கு ஏலம் போய் உள்ளது.

டென்சுகே என்ற கறுப்பு நிற தர்பூசணி ஜப்பானின் வடக்கு பகுதியில் உள்ள ஹொக்கைடோ தீவில் மட்டும்தான் விளைகிறது. அதற்கு நல்ல மவுசு இருந்து வருகிறது. ஜப்பானில் பரிசுப் பொருட்களாக கூட தர்பூசணி தரப்படுகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டில் முதல் முறையாக 65 கறுப்பு நிற தர்பூசணி விற்பனைக்கு வந்துள்ளது. அதில் ஒன்றுதான் இது. முதல் முறையாக விற்பனைக்கு வருவதை ஏலம் விடுவது ஜப்பானில் வழக்கம். அதை ஏலம் எடுப்பது மிகவும் பெருமைக்குரிய விஷயமாக கருதப்படுகிறது.

இந்தாண்டு ஏலம் இரண்டு நாட்களுக்கு முன்பு நடத்தப்பட்டது. அதில் ஒரு கறுப்பு டென்சுகே தர்பூசணி ரூ.2.5 லட்சத்துக்கு ஏலம் போய் சாதனை படைத்துள்ளது. இதுவரை நடந்த கறுப்பு தர்பூசணி ஏலங்களில் இதுதான் அதிகபட்சம். மேலும் ஒரே ஒரு கறுப்பு தர்பூசணி இந்த அளவு விலை போயுள்ளது உலகில் வேறெங்கும் இல்லை எனவும் கருதப்படுகிறது.

கடல் உணவுகளை வியாபாரம் செய்யும் ஒருவர் இந்த விலை கொடுத்து தர்பூசணியை வாங்கியுள்ளார். இதற்கு காரணம் தர்பூசணி மீது உள்ள காதல் அல்ல. உள்ளூர் விவசாயிகளுக்கு கைகொடுக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில்தான்.

இந்த தர்பூசணி 7.7 கிலோ எடை உள்ளது. ஏப்ரல், மே மாத காலநிலை காரணமாக இதில் இனிப்பு அதிகமாக இருக்கிறதாம்.

பிற வகை தர்பூசணிகள் விலை இன்னும் அதிகமாக இருக்கிறது. கடந்த மாதத்தில் யுபாரி வகையை சேர்ந்த இரண்டு தர்பூசணிகள் ரூ.96 லட்சத்துக்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.

No comments: