சிரியுங்கோ..................

பொண்ணு சுமாரத்தான் பாடுவா..!

பையனும் சுமாராதான் சமைப்பான்..!

சரி, கல்யாணம் எப்ப வைச்சுகலாம்?

--------------------------------------------------------------------------------

அந்த சாமியார் நடிகைகளோட மேனியழகு நிஜம் தானானு பல பேர்கிட்ட விசாரிக்கிறார். தீர விசாரிப்பதே மெய்ன்னு நினைக்கிறார் போல..

--------------------------------------------------------------------------------

அவர் பல் டாக்டரா?
உங்களுக்கு எப்படித் தெரியும்?

பல்லாண்டு வாழ்கன்னு வாழ்த்துறதுக்கு பதிலா.. பல் ஆடி வாழ்கன்னு வாழ்த்துறார்...

--------------------------------------------------------------------------------

சிகை அலங்காரம் செய்ய வந்த பொண்ணுக்கு காதல் கடிதம் கொடுத்தியே என்னாச்சு??
பின்னி எடுத்துட்டா

--------------------------------------------------------------------------------

தபால்காறனை காதலிக்கிறீயே..
என்ன சொல்கிறார்?

பதிவுதிருமணம் பண்ணலாம் என்கிறார்

--------------------------------------------------------------------------------

அதிரடி மெகா சீரியல் எடுக்கிறீங்களா....என்ன தலைப்பு ?இதுவாடா முடியும்..........................................................................

No comments: