மக்கள் வாழ்வதற்குரிய சிறந்த இடமாக டென்மார்க் தலைநகர் கோபன்கேஹன் விளங்குவதாக ஆய்வொன்று தெரிவிக்கின்றது.
நியூயோர்க், லண்டன் போன்ற நகரங்களே சிறந்த இடம் என்று நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருப்பதைப் பொய்யாக்கி விட்டது சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு.
மக்கள் வாழ்வதற்கு, உலகில் சிறந்த இடம் கோபன்கேஹன் நகரம் என்பது அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. வடக்கு ஜரோப்பாவில் உள்ள டென்மார்க் நாட்டின் தலைநகரான கோபன்கேஹனில் தான் மக்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கான அனைத்து சூழ்நிலைகளும் உள்ளன.
அதிகம் மாசுபடாத சுற்றுப்புறச் சூழல், சிறந்த போக்குவரத்து வசதி, வாழ்க்கைத் தரம், சிறந்த நகரக் கட்டமைப்பு உள்ளிட்ட காரணங்களால் சிறந்த நகரமாக கோபன்கேஹன் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சிறந்த 20 நகரங்கள் பட்டியலில் கூட லண்டன், நியூயோர்க் நகரங்களால் இடம்பெற முடியவில்லை.
முனிச் நகரம் இரண்டாம் இடம்பிடித்துள்ளது. டோக்கியோ, சூரிச், ஹெல்சிங்கி ஆகிய நகரங்கள் முதல் 5 இடங்களுக்குள் வந்துள்ளன.
No comments:
Post a Comment