வெற்றி

நிலா தேய்வதால்
வானம் வருத்தப்படுவதில்லை...

பூக்கள் உதிர்வதால்
செடிகள்புலம்புவதுமில்லை...

மழையில் நனைவதால்
மரங்கள் குடை பிடிப்பதுவுமில்லை...

மதங்கள்வேறுபடுவதால்
மனிதம் மாறுவதுமில்லை...

நம்பிக்கை தொடர்வதால்
தோல்வி வெற்றியின் வேரறுப்பதுமில்லை..

உழைத்து வாழ்வதால்
வாழ்வில் வறுமை வீசுவதுவுமில்லை..!

No comments: