உடையும் நிலையில் இருந்த சீன ஏரியில் பூமி அதிர்ச்சி

சீனாவில் நில நடுக்கம் ஏற்பட்டு உடையும் நிலை யில் இருந்த ஏரியில் திடீர் பூமி அதிர்ச்சி ஏற்பட்டது. இதனால் 2 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டனர்.

சீனாவில் கடந்த மாதம் ஏற்பட்ட பூகம்பத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியானார்கள். நில நடுக்கத் தினால் பல அணைகள், ஏரிகள் உடையும் நிலையில் இருந்தன.

இதில் சுலோசன் என்ற இடத்தில் உள்ள தன்கி ஜாஷான் ஏரியும் ஒன்று. இந்த ஏரி உடைந்து விடக் கூடாது என்பதற்காக பல்வேறு பாது காப்பு பணிகள் மேற் கொள் ளப்பட்டன.

இந்த நிலையில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் ஏரி அமைந்துள்ள பகுதியில் நில அதிர்ச்சி ஏற்பட்டது. இது ரிக்டர் ஸ்கேல் அளவுக்கு 4.8 புள்ளிகளாக பதிவாகி இருந்தது. அந்த பகுதியில் நிலச்சரிவும், நிகழ்ந்தது.

இதனால் ஏரி உடையும் அபாயம் ஏற்பட்டது. ஏரிக்கு கீழ் பகுதியில் உள்ள ஊர்களில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.

ஏரி உடைந்தால் பெரும் அபாயம் ஏற்படும் நிலை உருவானது. இதனால் அந்த பகுதியில் இருந்து 2 லட்சம் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடத்துக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். மற்றவர்களையும் வெளி யேற்றும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

ஏரி உடைய போகிறது என்று தகவல் பரவியதும் மக்கள் அலறியடித்துக் கொண்டு மேடான இடங் களை நோக்கி ஓடினார்கள். இதனால் எங்கு பார்த்தாலும் பீதி நிலவுகிறது.

ஏரி உடைந்து விட்டால் மீட்பு பணிகளில் ஈடுபட ராணுவம் தயார் நிலையில் வைக்கப்பட்டது. மீட்பு படகு களும் தயார் நிலையில் உள்ளன.

No comments: