இந்திரலோகத்தில் நா.அழகப்பன்' என்ற விஷப்பரீட்சை மூலம் தன்னையும் சோதித்து ரசிகர்களையும் சோதித்த நகைச்சுவை நடிகர் வடிவேலு இனிமேல் கதாநாயகனாக வேஷம் கட்டுவதில்லை என்ற முடிவோடு சுற்றி வந்தார். ஆனால் அவரின் இந்த வைராக்கியம், பிரசவ வைராக்கியம் போன்று ஆறே மாதத்தில் தவிடுபொடியாகி விட்டது.
சின்னத்திரையில் "மாயாவி மாரீசன்' என்ற குழந்தைகளுக்கான தொடரை இயக்கி வந்த ராஜூ என்பவர் வடிவேலுவுக்கு கதை ஒன்றை கூறி அசத்தியுள்ளாராம்.
இதை கேட்ட வடிவேலு, தனது விரதத்தை சற்று தளர்த்தி மீண்டும் ஹீரோவாவது என்ற முடிவுக்கு வந்துள்ளாராம்.
வடிவேலுவை அசத்திய அந்த கதைதான் என்ன என்று விசாரித்த போது "சிரிப்பு திருடன் சிங்காரம்' ரேஞ்சுக்கு திருட சென்ற இடத்தில் எல்லாம் எக்குதப்பாக மாட்டிக் கொள்ளும் ஏமாளி கயவாளிதான் கதையின் நாயகனாம். இது போதாதா வடிவேலுவுக்கு. லபக் என்று ஹீரோ போஸ்ட்டிங்கிற்கு மீண்டும் மாறி விட்டார்.
ஆனால் இம்முறை இந்திரலோகத்தில் இருந்தது போன்று கருத்து சொல்லி சோதிக்க வேண்டாம் என்பதுதான் ரசிகர்களின் வேண்டுகோள்
No comments:
Post a Comment