எவரெஸ்ட் சிகரத்தின் அடி வாரப் பகுதியான `கூமோலங்மா' மலைப் பகுதியில் இருக்கும் அஞ்சலகம் உலகத்திலேயே மிக உயரமான இடத்தில் உள்ள தபால் நிலையமாக விளங்குகிறது,
திபெத்தின் டிங்ரி கவுன்டி பகுதிக்கு உட்பட்ட `கூமோலங்மா', கடல் மட்டத்திலிருந்து 5 ஆயிரத்து 200 மீட்டர்கள் உயரத்தில் உள்ளது. ரத்தத்தை உறைய வைக்கும் குளிர் நிலவும் இப்பகுதி ஒரு பனிப் பாலைவனம.
உலகத்தின் உச்சத்தைப் பார்க்கும் ஆர்வத்துடன் வரும் சாகச சுற்றுலாப் பயணிகளும், மலையேற்ற வீரர்களும்தான் இங்கு அபூர்வமாகத் தென்படுவார்கள்.
ஒலிம்பிக் ஜோதியை எவரெஸ்ட் பகுதிக்குக் கொண்டு வரும் முடிவெடுத்த சீனா, அதையொட்டி தகவல் தொடர்புக்காக இந்தத் தபால் நிலையத்தை கடந்த 2001-ம் ஆண்டு ஏப்ரல் 18-ம் தேதி திறந்தது.ஒரு சிறிய பெட்டிக்கடையைப் போலிருக்கும் இந்தத் தபால் நிலையம் மூலம் தினசரி 30 பேர் வரை சேவையைப் பெறுகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் பல்வேறு நாட்டு சுற்றுலாவாசிகள், மலையேற்ற வீரர்கள்.
`இங்கிருந்து, எங்கோ உள்ள எங்களின் உறவினர், நண்பர்களுக்கு கடிதம் அனுப்புவது ஓர் அற்புதமான அனுபவம்' என்கிறார்கள் இந்தச் சேவையைப் பயன்படுத்துவோர். வருடத்தில் ஏப்ரல் முதல் அக்டோபர் வரை 7 மாதங்கள் மட்டுமே இந்த அஞ்சலகம் இயங்குகிறது.அதற்குப் பின் `கடையை' அடைத்துவிட்டுப் போய்விடுவார்கள்.
இதற்கெனவே ஒரு தற்காலிகச் சாலையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தபால் நிலையம் ஏற்படுத்தப்படுவதற்கு முன், `கூமோலங்மா' பகுதியிலிருநëது வெளி உலகத்துக்கு இருந்த ஒரே தொடர்பு,
அவசர கால அழைப்புக்கு உதவும் சாட்டிலைட் போன் மட்டும் தான். அந்த நிலையை இந்த அஞ்சலகம் மாற்றியுள்ளது.இங்கிருந்து சமவெளிப் பகுதிக்கு கடிதங்கள் கொண்டு செல்லப்பட்டு,
பின்னர் அங்கிருந்து உலகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படுகின்றன. அதனால் கால தாமதம் ஏற்படுகிறது என்றபோதும், அதுபற்றி யாரும் புகார் கூறுவதில்லை.
No comments:
Post a Comment