லக்னோ உயிரியல் பூங்காவில் உள்ள அரிய வகை பெண் பறவை, ஆண் பறவையாக மாறி வருகிறது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் மட்டுமே காணப்படும் அரிய இனபறவை, மயில்களை போல நீண்ட தோகை கொண்டது. ஆண் பறவைகளின் உடல் வெண்மை நிறமாக காணப்படும். மார்பு பகுதி கருப்பு நிறத்தில் இருக்கும்.
பெண் பறவைகளை விட ஆண் பறவைகள் உயரமாக இருக்கும் ஆண் பறவைகளின் கண் பகுதியை சுற்றிலும், இரத்த சிவப்பு நிறத்தில் திட்டு இருக்கும். பெண் பறவைகள் இயல்பாக எடை மற்றும் உயரம் குறைவாகவும், பழுப்பு நிறத்தில் இருக்கும். லக்னோ உயிரியல் பூங்காவில், இரண்டு ஆண் பறவைகளுடன் பெண் பறவையும் கூண்டில் வளர்ந்து வந்தது.
ஆண் பறவைகளுடன் உறவு கொண்டு, முட்டையிட்டு வந்தது. கடைசியாக 2006ம் ஆண்டு இந்த பெண் பறவை முட்டையிட்டது. அதன் பின்னர், முட்டையிடுவது நின்று போனது. இதன் உடல் பகுதியும், நிறமும் ஆண் பறவை போல மாறியுள்ளது.கண்களுக்கு அருகில் சிவப்பு நிற திட்டு தோன்ற ஆரம்பித்துள்ளது. பெண் பறவைகளுக்கு சுரக்கும் ஹார்மோன்கள் நின்று போய், ஆண் பறவைகளுக்கான ஹார்மோன் சுரப்பிகள் திடீரென்று செயல்படத் துவங்கியுள்ளது தான் மாற்றத்திற்கு காரணம் என்று கருதப்படுகிறது.
இப்போது, இது பெண் பறவையாகவே கருத்தப்பட்டாலும், முழுமையாக் ஆண் பறவையாக மாறும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக கருதப்படுகிறது. இது ஆண் பறவையாக மாறி, பெண் பறவையுடன் சேர்ந்து இன விருத்தியில் ஈடுபட்டால், அது மிகப்பெரிய அதிசயமாக கருதப்படும் என்று உயிரியல் பூங்கா அதிகாரிகள் கூறினர்.
மனிதர்களிலும் இது போல ஹார்மோன் சுரப்பிகள் குளறுபடி ஏற்படுவது உண்டு. சில பெண்களுக்கு நடுத்தர வயதின் போது, ஆண் ஹார்மோன் சுரப்பிகள் திடீரென்று செயல்படத்துவங்கும். அப்போது, அவர்களுக்கு முகம் மற்றும் உடலில் முடி முளைக்கத்துவங்கும். இது போல தான், பறவைகக்கும் மாற்றம் ஏற்படுள்ளதாக கருதப்பட்டாலும், ஆண் பறவைக்குரிய அனைத்து அம்சங்களும் இதில் ஏற்பட்டு இருப்பது வியப்பை ஏற்படுத்துவதாக உள்ளது.
No comments:
Post a Comment