ஸ்பெயினில் நண்பர் ஒருவருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட பந்தயப் புறா 10 ஆண்டுகளின் பின்னர், அதனை வளர்த்துவந்த பழைய எஜமானரிடமே பறந்து திரும்பி வந்துள்ளது.
பிரிட்டனின் நார்த் யார்?க்ஷர் நகரைச் சேர்ந்த பந்தயப் புறா ஆர்வலரான 76 வயதுடைய டினோ ரியர்டென் இரண்டாம் உலகப் போரின் போது பிரிட்டிஷ் றோயல் விமானப் படைக்கு உதவிக்காக பந்தயப் புறாக்களை பழக்கியவர். இவர் வளர்த்துவந்த பெண் புறா பத்து ஆண்டுகளுக்கு முன்னர் நீண்ட தூரம் பறந்து சாதனை படைத்தது.
கடந்த 1998 ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டின் அல்ஜெரிக்ஸ் நகரில் இருந்து பறக்கவிடப்பட்ட பெண் புறா 1,200 மைல்கள் பறந்து நார்த் யார்?க்ஷரில் உள்ள ஸ்கிப்டன் பகுதியில் உள்ள ரியர்டன் வீட்டுக்குத் திரும்பியது. அப்போது, இந்த புறாவின் சாதனை பத்திரிகைகளின் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றது. இந்த சாதனையைத் தொடர்ந்து நார்த் யார்?க்ஷரை சேர்ந்த இன்னொரு புறா ஆர்வலருக்கு, இந்த புறாவை அளித்தார் ரியர் டன். ஆனால், உடனடியாக ரியர்டன் வீட்டுக்குத் திரும்பிவந்துவிட்டது.
அதே ஆண்டு லன்காஷைர் பகுதியைச் சேர்ந்த தனது நண்பர் அல்ப் பின்னிங்டன் என்பவருக்கு இந்த புறாவை பரிசாக அளித்தார். கடந்த 10 ஆண்டுகளாக அல்ப் பின்னிங்டனிடம் வளர்ந்து வந்த 13 வயது பெண் புறா திடீரென்று தந்தையர் தினமான ஜூன் 16 ஆம் திகதி ரியர்டன் வீட்டுக்கு திரும்பிவந்தது. 10 ஆண்டுக்குப் பின், தனது எஜமானரை தேடி, அவரிடமே புறா திரும்பி வந்திருப்பது பெரிதும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
புறா மீண்டும் வீடு திரும்பியதுடன் ரியர்டனை அடையாளம் கண்டுகொண்டு அவரிடம் நடந்து வந்தது. புறாவை எடுத்து சோதித்த போது அதன் வலது காலில் பொருத்தப்பட்டு இருந்த வளையம் இருந்தது தெரியவந்தது. இதன் மூலம், 10 ஆண்டுக்கு முன் தனது நண்பருக்கு பரிசளிக்கப்பட்ட புறா என்பதை ரியர்டன் புரிந்து கொண்டார். இனி தனது வீட்டிலேயே தொடர்ந்து அந்த புறாவை வளர்க்க முடிவு செய்துள்ளார்.
No comments:
Post a Comment