46 வருட கால கணிப்பீடு ஒரு நாளில் நிறைவேற்றம்

அமெரிக்காவானது அணு ஆயுத பரிசோதனைகளை மேற்கொள்ளும் முகமாக உலகிலேயே அதிவேகமாக இயங்கும் கணினியொன்றை வடிவமைத்துள்ளதாக அமெரிக்க சக்திவள திணைக்களம் அறிவித்துள்ளது.

இக் கணினியானது ஒரு செக்கனுக்கு 1000 திரில்லியன் கணிப்பீடுகளை மேற்கொள்ளும் திறன் கொண்டது. நியூமெக்ஸிக்கோவிலுள்ள லொஸ் அலமொஸ் தேசிய ஆய்வு கூடத்திலுள்ள இக்கணினியானது அமெரிக்க அணு ஆயுத பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு மட்டுமல்லாது, உலகளாவிய சக்திச் சவால்களுக்கு தீர்ப்பனவாகவும் அமைவதாக கூறப்படுகிறது.

உலகிலுள்ள 6 பில்லியன் மக்கள் சாதாரண கணிப்பானைப் பயன்படுத்தி வருடத்திலுள்ள அனைத்து நாட்களிலும் 24 மணி நேரம் உழைத்து 46 வருடங்களில் மேற்கொள்ளும் கணிப்பீட்டை இந்த "ரோட்ரன்னர்' கணினி ஒரு நாளில் நிறைவேற்றும் வல்லமையைக் கொண்டு விளங்குகிறது

No comments: