பிரெஞ்ச் ஓப்பன் டெனிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல்நிலை வீரர் ரோஜர் பெடரர் காலிறுதிக்கு..........

பிரெஞ்ச் ஓப்பன் டெனிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல்நிலை வீரர் ரோஜர் பெடரர் காலிறுதிக்கு முன்னேறினார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓப்பன் டெனிஸ் போட்டி பாரிஸ் நகரில் நடந்து வருகிறது.

இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று முன்தினம் நடந்த 4 ஆவது சுற்று ஆட்டத்தில் முதல்நிலை வீரர் ரோஜர் பெடரர் (சுவிற் சர்லாந்து) , பிரான்ஸ் வீரர் ஜூலியன் பென்னட்சை சந்தித்தார். இதில் பெடரர் 64, 75, 75, என்ற நேர் செட்டில் வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

ரோஜர் பெடரர் காலிறுதி ஆட்டத்தில் 24 ஆம் நிலை வீரர் பெர்னாடோ கொனாலிஸ்ஸை (சிலி) எதிர்கொள்கிறார். 4 ஆவது சுற்று ஆட்டத்தில் பெர்னாடோ 76,63,31 என்ற நேர்செட்டில் அமெரிக்க வீரர் ராபி ஜினெரியை தோற்கடித்து காலிறுதிக்குத் தகுதி பெற்றார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் 4 ஆவது சுற்று ஆட்டத்தில் 7 ஆம் நிலை வீராங்கனை எலீனா டெமென்டிவா 64, 16,62 என்ற செட் கணக்கில் சக நாட்டு வீராங்கனை வெரா சோனாரேவாவைத் தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறினார்.

No comments: