கமலஹாசன் ஒரு பார்வை


அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்னும் அழகான பாடலுடன் களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்குள் நுழைந்த கமலஹாசன் தற்போது 10 வேடங்களில் தசாவதாரம் திரைப்படம் வரை வந்துவிட்டார். கமலஹாசனின் திரையுலக வரலாற்றில் சாதனைகள் பலவுள.
தசாவதாரம், 2008 இல் வெளிவர இருக்கும் ஒரு தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் பத்து வித்தியாசமான வேடங்களில் கமல்ஹாசன் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. கதாநாயகியாக நடிக்கும் அசினும் இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார்.

கமலின் ஒரு வேடம் நம்மை 12ம் நூற்றாண்டுக்கே அழைத்துச் செல்கிறது. கமல் ரங்க ராஜ நம்பியாக நடிக்க குலோத்துங்கனாக வருகிறார் நெப்போலியன். இதன் படப்பிடிப்பு சிதம்பரத்தில் நடந்து முடிந்திருக்கிறது. படத்தில் இரண்டு டசின் குதிரைகள் மற்றும் யானைகளும் நடித்திருக்கின்றன.கமலின் பத்து வேடங்களில் ஒன்று ஒரு விஞ்ஞானி. இவரது ஆராய்ச்சி நிலையம் அமெரிக்காவில் இருக்கிறது. இதற்காக மிகவும் சிரமப்பட்டு சிறப்பு அனுமதி வாங்கியிருக்கிறார்கள்.

மல்லிகா ஷெராவத் கமலுடன் ஒரு நடனக் காட்சியில் வருகிறார். கூடவே இருபது அமெரிக்க அழகிகளும் நடனமாடியிருக்கின்றனர். படப்பிடிப்புக்க்காக 80 பாரந்தூக்கிகள் பயன்படுத்தப்பட்டனவாம். பாடல் காட்சி படமாக்கப்பட்ட மலேசியாவில் கமலின் ரசிகர்களைக் கட்டுப்படுத்த சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் தேவைப்பட்டிருக்கிறது.
தசாவதாரம் படப்பிடிப்பில் இருந்தது ஏதோ ஒரு கல்வி நிறுவனத்தில் படிப்பதை போல இருந்ததாக அதன் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் கூறியிருக்கிறார்.

No comments: