இலங்கையில் இப்படி ஓர் அதிசய இடமா?



இலங்கையில் இப்படி அதிசய இடமா? என்று கேட்குமளவிற்கு கிழக்கில் அதுவும் அம்பாறை மாவட்டத்தில் இவ்விடம் அமைந்துள்ளது. ஆம் பொத்துவில் நகரின் கடலருகே இவ்வதிசய இடம் உள்ளது. இதனை மண்மேடு என மக்கள் அழைக்கின்றனர்.ஆனால் உண்மையில் இதனை மண்மேடு என்று சொல்வதை விட மண்மலை என்றே கூறமுடியும். இரண்டு தென்னை மர உயரம் அளவிற்கு மணல் குவிந்து காணப்படுகிறது.

ஆனால் யாரும் குவிக்கவில்லை. அது இறைவனின் சிருஷ்டிப்பில் இயற்கையாக ஏற்பட்டுள்ளது.இம் மண்மலையால்தான் சுனாமி அனர்த்தத்தின்போது பொத்துவில் நகரம் பாதுகாக்கப்பட்டது என்பதனையும் இவ்வண் குறிப்பிடலாம்.

கடலருகே மண்மேடு அதுவும் மலை போலக் காணப்பட்டால் உல்லாசப்பயணிகளுக்கு கேட்கவும் வேண்டுமா? இதமான காற்று. கடற்காட்சி ரம்மியமான சூழல் என்றால் மக்களுக்குச் சொல்லவும் வேண்டுமா?

தினமும் பல நூற்றுக்கணக்கான மக்கள் அங்கு விஜயம் செய்து மண்மலையில் ஏறிச் சறுக்கி விளையாடி மகிழ்ந்து வருகிறார்கள்.

1 comment:

Anonymous said...

நல்ல தகவல்.நன்றி.
அது என்ன //அது இறைவனின் சிருஷ்டிப்பில் இயற்கையாக ஏற்பட்டுள்ளது.//இரண்டில் ஒன்று தானே இருக்கலாம்.