'ஆஸ்கார்' விருதை அடுத்து புதிய முயற்சி "திருக்குறளுக்கு இசையமைப்பேன்'' ஏ.ஆர்.ரகுமான் பேட்டி


'ஆஸ்கார்' விருதை அடுத்து புதிய முயற்சி "திருக்குறளுக்கு இசையமைப்பேன்" என்று ஏ.ஆர்.ரகுமான் கூறினார்.

பேட்டி

உலக திரையுலகின் மிக உயர்ந்த விருது, 'ஆஸ்கார்.' `ஸ்லம் டாக் மில்லினர்' படத்துக்கு இசையமைத்ததன் மூலம் ஏ.ஆர்.ரகுமான் 2 ஆஸ்கார் விருதுகளை வென்று, இந்தியாவையும், தமிழ்நாட்டையும் தலைநிமிர வைத்து இருக்கிறார்.

ஆஸ்கார் விருதுகளுடன் அமெரிக்காவில் இருந்து அவர் நேற்று சென்னை திரும்பினார். நேற்று மாலை ஏ.ஆர்.ரகுமான், சென்னை வடபழனியில் உள்ள கிரீன்பார்க் ஓட்டலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவரை பேட்டி காண்பதற்கு 300-க்கும் மேற்பட்ட புகைப்பட நிபுணர்களும், நிருபர்களும் அங்கு குவிந்தனர்.

தாமதம்

3 மணிக்கு பேட்டி தொடங்க இருந்தது. ரகுமான் ஒரு மணி நேரம் தாமதமாக 4 மணிக்குத்தான் அங்கு வந்து சேர்ந்தார். புகைப்பட நிபுணர்கள் போட்டி போட்டுக்கொண்டு அவரை படம் எடுத்தார்கள். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 1/2 மணி நேரம் போட்டோவுக்கு `போஸ்' கொடுத்தபின், ரகுமான் நிருபர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். அவரது பேட்டி விவரம் வருமாறு:-

கேள்வி:- ஆஸ்கார் விருதை வென்றதற்காக உங்களை கவுரவிக்கும் வகையில், மத்திய அரசு `எம்.பி.' பதவி வழங்கினால், ஏற்றுக்கொள்வீர்களா?

பதில் (சிரித்தபடி):- அந்த மாதிரி பதவிகளை எல்லாம் நான் எதிர்பார்க்கவில்லை. பதவிக்காக நான் கவலைப்படுவதில்லை.

சுதந்திரம்

கேள்வி:- தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மூன்று மொழி படங்களில் இசையமைக்கும்போது, எந்த மொழி படத்தில் உங்களுக்கு அதிக சுதந்திரம் இருந்தது?

பதில்:- என் தாய் மொழி தமிழ் என்பதால், தமிழ் படங்களில் இசையமைக்கும்போதுதான் அதிக சுதந்திரம் இருந்ததாக உணர்ந்தேன்.

கேள்வி:- `ஸ்லம் டாக் மில்லினர்' படம் `ஆஸ்கார்' விருது பெறும் என்று எதிர்பார்த்தீர்களா?

பதில்:- அந்த படத்தை முதலில் வாங்குவதற்கு ஆள் இல்லை. நல்ல கதையம்சம் இருந்ததாக நான் ஆரம்பத்திலேயே உணர்ந்தேன். அதனால் அந்த படத்துக்கு முழுமையான ஈடுபாடுடன் இசையமைத்தேன்.டேனி பாயல்

கேள்வி:- அந்த படத்தின் டைரக்டர் டேனி பாயல் பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:- மிக சிறந்த டைரக்டர்.

கேள்வி:- அவருடன் மீண்டும் இணைந்து பணிபுரிவீர்களா?

பதில்:- இன்னும் முடிவு செய்யவில்லை.

கேள்வி:- இசைப்புயல், ஆஸ்கார் நாயகன் ஆகிய 2 பட்டங்களில் உங்களுக்கு பிடித்தது எது?

பதில்:- இரண்டுமே பிடிக்கவில்லை.

திருக்குறள்

கேள்வி:- வைரமுத்து எழுதும் புதிய தமிழ் தாய் வாழ்த்து பாடலுக்கு, எப்போது இசையமைப்பீர்கள்?

பதில்:- அவர் எழுதி முடித்ததும், இசையமைப்பேன்.

கேள்வி:- உங்கள் இசையில், `சிம்பொனி' எப்போது வரும்?

பதில்:- அதற்கு இன்னும் `டைம்' ஆகும்.

கேள்வி:- ஆஸ்கார் விருதை அடுத்து, உங்கள் சாதனையாக அடுத்த முயற்சி எது?

பதில்:- திருக்குறளுக்கும், குனங்குடி மஸ்தான் கவிதைகளுக்கும் இசையமைக்கப்போகிறேன்.

தமிழ் படங்கள்

கேள்வி:- தொடர்ந்து தமிழ் படங்களுக்கு இசையமைப்பீர்களா?

பதில்:- நல்ல தமிழ் படங்களுக்கு மட்டும் இசையமைப்பேன்.

கேள்வி:- இந்தியாவின் கதாநாயகனாகி விட்ட நீங்கள், ஒரு படத்தில் கதாநாயகனாக நடிப்பீர்களா?

பதில் (சிரித்தபடி):- எனக்கு நடிக்க தெரியாது. இசையமைக்கத்தான் தெரியும். அதனால் நடிக்க விரும்பவில்லை.

கேள்வி:- `ஆஸ்கார் கேட்'டை நீங்கள் திறந்து விட்டு இருக்கிறீர்கள். தொடர்ந்து தமிழ் பட கலைஞர்கள் ஆஸ்கார் விருது பெறுவார்கள் என்று நம்புகிறீர்களா?

பதில்:- நிறைய பேர் வாங்கப்போகிறார்கள்.

இளையராஜா

கேள்வி:- இளையராஜா, உங்களுக்கு வாழ்த்து தெரிவித்தாரா?

பதில்:- அவரும், அவருடைய மகன்கள் இரண்டு பேரும் சேர்ந்து எனக்கு `இமெயில்' மூலம் வாழ்த்து அனுப்பினார்கள்.

கேள்வி:- `ஸ்லம் டாக் மில்லினர்' படத்தில் இடம்பெற்ற ``ஜெய் ஹோ'' பாடலுக்கு அமெரிக்கர்கள் மத்தியில் வரவேற்பு எப்படி இருந்தது?

பதில்:- ஸ்பீல்பெர்க் முதல் மைக்கேல் ஜாக்சன் வரை அத்தனை பேரும் பாராட்டினார்கள்.

தமிழில் பேச்சு

கேள்வி:- இந்தியாவில் இருந்து முதன் முதலாக ஆஸ்கார் விருது வாங்கிய அனுபவம் எப்படி இருந்தது?

பதில்:- இதற்கு முன்பு இத்தாலி, ஜப்பான், ஜெர்மன், சீனா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் ஆஸ்கார் விருது வாங்கி இருக்கிறார்கள். இது, இந்தியாவின் `டைம்.' `ரோஜா' படத்துக்காக தேசிய விருது பெறும்போது எவ்வளவு சந்தோஷப்பட்டேனோ, அவ்வளவு சந்தோஷப்பட்டேன், ஆஸ்கார் விருது பெறும்போது...

கேள்வி:- ஆஸ்கார் மேடையில் தமிழில் பேச வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு எப்படி வந்தது?

பதில்:- என் தாய் மொழியை அந்த இடத்தில் பேசவேண்டும் என்று விரும்பினேன். பேசினேன்.

மணிரத்னம்

கேள்வி:- உங்களை இசையமைப்பாளராக அறிமுகம் செய்த மணிரத்னம் வாழ்த்து தெரிவித்தாரா?

பதில்:- ஆஸ்கார் விருது பெற்றதும், நான் அவருடன் போன் மூலம் தொடர்புகொண்டேன். போன் கிடைக்கவில்லை. ஆனால், நான் அமெரிக்காவுக்கு புறப்படும்போதே அவர் என்னை வாழ்த்தி தான் அனுப்பி வைத்தார்.

கேள்வி:- `ஸ்லம் டாக் மில்லினர்' படத்தில் இடம்பெற்ற மும்பை தாராவி பகுதி மக்களுக்காக நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?

பதில்:- தாராவியில் உள்ள குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அந்த குழந்தைகள் ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்டு சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்தபோது, அதைப் பார்த்து அவ்வளவு சந்தோஷப்பட்டேன்.

இலங்கை தமிழர்கள்

கேள்வி:- இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவது பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:- இலங்கை தமிழர்களுக்காக நான், ``வெள்ளை பூக்கள்'' என்ற பாடலுக்கு ஏற்கனவே இசையமைத்து இருக்கிறேன். இலங்கையில் அமைதி நிலவ வேண்டும் என்று விரும்புகிறேன். அங்கு யாரும் போரினால் சாகக்கூடாது என்று பிரார்த்தனை செய்கிறேன்.

கேள்வி:- ஆஸ்கார் விருது பெற்ற ஞாயிற்றுக்கிழமை உங்களுக்கு எப்படி இருந்தது?

பதில்:- அன்று நான் தூங்கவே இல்லை. முதலில் 4 மணி நேரம் ஒத்திகை பார்த்தேன். மறுபடியும் ஒருமுறை ஒத்திகை பார்க்க வேண்டி இருந்தது. அன்று எனக்கு ஓய்வு இல்லை.

திருப்தி

கேள்வி:- 2 ஆஸ்கார் விருதுகள், உங்களுக்கு திருப்திதானா?

பதில்:- இன்னும் நிறைய பேருக்கு கிடைக்க வேண்டும்.

கேள்வி:- ஆஸ்கார் விருது மூலம் உங்களுக்கு எவ்வளவு பணம் கிடைத்தது?

பதில்:- 500 டாலர், வரியில்லாமல் கிடைத்தது.

கேள்வி:- உங்களுக்கு பரிசு பொருட்கள் நிறைய கிடைத்ததா?

பதில்:- எனக்கு கிடைத்த `சாம்பைன்' பாட்டில்களை எல்லாம் திருப்பிக் கொடுத்து விட்டேன்.

அறக்கட்டளை

கேள்வி:- உங்கள் பெயரில் உள்ள அறக்கட்டளை மூலம் என்ன செய்ய ஆசைப்படுகிறீர்கள்?

பதில்:- உலகம் முழுவதும் உள்ள ஏழ்மையை போக்க ஆசைப்படுகிறேன். எல்லோருக்கும் உணவு கிடைக்க வேண்டும்.

கேள்வி:- `ஸ்லம் டாக்' (தெரு நாய்) என்பது, இந்தியாவை அவமதிப்பது போல் இல்லையா?

பதில்:- நாய்களை நம் நாட்டில்தான் அவமரியாதையாக கருதுகிறோம். வெளிநாட்டில், செல்லப்பிராணிகளாக நினைக்கிறார்கள்.

குழந்தைகள்

கேள்வி:- நீங்கள் ஏற்கனவே இசையமைத்த படங்களில், ஆஸ்கார் விருதுக்கு தகுதியான படம் என்று எந்த படத்தை கருதினீர்கள்?

பதில்:- `லகான்.'

கேள்வி:- ஆஸ்கார் விருது பெற்றது பற்றி உங்கள் குழந்தைகள் என்ன சொன்னார்கள்?

பதில்:- என் மூன்று குழந்தைகளும் எனக்கு `இ-மெயில்' அனுப்பிக்கொண்டே இருந்தார்கள்.

இவ்வாறு ஏ.ஆர்.ரகுமான் பதில் அளித்தார்.

அறிவை வளர்க்கும் இணைய தேடல்

உடலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன. மூளைசுருக்கம் ஏற்படுவதோடு, உயிரணுக்களின் செயல்பாடுகளும், ஒரு விடயத்தை பற்றி தொடர்ச்சியான சிந்தனையில் எண்ணி பேசும் திறனும் குறைகின்றன. மனதை எப்போதும் செயல்பாட்டில் இருக்க செய்யவும், மூளையை நலமுடனும், தொடர்ச்சியான எண்ண செயல்பாடுகளோடும் இயங்கசெய்யவும் சில சிறிய செயல்பாடுகள் போதுமானவை. இதற்காகவே முன்பு குறுக்குசொல், புதிர் போன்ற சில விளையாட்டுகள் உதவின. தொழில்நுட்ப வளர்ச்சி காலக்கட்டமான இக்காலத்தில், மனித மூளையின் நலமான செயல்பாடுகளுக்கு இணையத்தள வசதி ஏற்படுத்தும் செல்வாக்கை மதிப்பிடும் வகையில் அறிவியலாளர்கள் ஆராய தொடங்கினர். இணையதள தேடுதலையும் மூளையின் செயல்பாடுகளையும் இணைத்து நடத்தப்பட்ட முதல் ஆய்வு இதுவாகும். இது வயதானோரின் மனநோயியல் அமெரிக்க இதழில் வெளிவந்துள்ளது.
லாஸ்ஏஞ்சல்ஸ் கலிபோர்னிய பல்கலைக்கழகக் குழு நடத்திய இவ்வாய்வுக்காக, நரம்பியல் ரீதியில் நலமான, 55 லிருந்து 76 வயதான 24 பேர் முன்வந்தனர். அதிலுள்ள பாதிபேருக்கு இணையத்தில் தகவல் தேடி பெற்ற அனுபவம் இருந்தது. மற்றவருக்கு அவ்வனுபவம் இல்லை. இந்த இரண்டு குழுக்களிலும் இணையதளத்தில் தேடிய அனுபவம் பெற்றிருந்த குழு தான் மூளையின் செயல்பாட்டில் மிகப் பெரிய வேறுபாட்டை காட்டியது. ஆய்வில் ஈடுபட்ட அனைவரும் புத்தகம் ஒன்றை வாசிக்க கேட்டுக்கொள்ளப்பட்டனர். அவ்வாறு அனைவரும் ஒரே செயல்பாட்டில் பங்கெடுத்தபோது, வழக்கமாக செயல்படும் மூளையின் பகுதி எல்லோருக்கும் செயல்பட்டது. ஆனால் இணையதளத்தில் அனுபவம் கொண்டிருந்தவர்களின் மூளையின் முன்பகுதி, நரம்புடன் தொடர்புடைய மற்றும் அதன் மேற்புறப்பரப்பு ஆகியவற்றிலும் அதிக செயல்பாடுகள் பதிவாகின.

இதிலிருந்து இணையதள தேடுதலில் அனுபவம் கொண்டவர்களிடத்தில் வழக்கமாக புத்தகத்தை வாசிக்கும்போது ஏற்படுவதற்கு மேலான, அதிக அளவிலான நரம்பு மண்டல செயல்பாடுகள் காணப்பட்டதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். இவர்கள் இணையத்தில் தேடிய அனுபவம் இல்லாதவர்களை விட இரண்டு மடங்குக்கு அதிகமான மூளையின் செயல்பாடுகளை பதிவு செய்தனர். இவ்வாறு பதிவான மூளை செயல்பாடுகளின் அளவீட்டை voxel என மதிப்பிட்டனர். இணைய தளத்தில் தேடிய அனுபவம் கொண்டவர்கள் 21,782 வோசெல் செயல்பாடுகளை பதிவு செய்தபோது, பிறர் வெறும் 8,646 வோசெல் செயல்பாடுகளையே பதிவு செய்தனர்.

இந்த ஆய்வை பற்றி, அதன் மிக முக்கிய ஆய்வாளரும், லாஸ்ஏஞ்சல்ஸ் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பேராசியருமான Gary Small பேசுகின்றபோது, ஆய்வின் முடிவுகள் ஊக்கமூட்டுவதாகவும், வளர்ந்துவரும் கணினி தொழில்நுட்பங்கள் நடுத்தர மற்றும் முதிய வயதினருக்கு உடல் மற்றும் உள்ளார்ந்த பயன்களை கொண்டு வருகிறது என்றும், இணையத்தில் தேடுவது, மூளையின் இயக்கத்தை தூண்டுகின்ற செயல்பாடுகளை தொடர செய்கின்றது என்றும் தெரிவித்தார்.

வயதாகும்போது புதிய மொழி ஒன்றை கற்றால், நினைவாற்றல் வளர்வதோடு மூளையின் செயல்பாடும் உயர்வதாக முன்பு அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இவ்வாறு மூளையின் செயல்பாட்டை இணையதள தேடுதலும் வளர்க்கும்மென்றால் கணினி மற்றும் இணைய வசதி தொழில்நுட்பங்கள் தொடர்ந்து வளர்ச்சியடைவது கண்கூடு.

ஞாபக மறதியைப் போக்கும் மாத்திரை

பள்ளி, கல்லூரி தேர்வுகளைப் பற்றிக் கவலையா? அல்லது குறிப்பிட்ட தொலைபேசி அல்லது செல்பேசி எண்களை மறந்து விடுகிறீர்களா? இனி கவலை வேண்டாம். ஞாபக சக்தியை பெருக்கி, நினைவாற்றலை மேம்படுத்துவதற்கு புதிதாக மாத்திரை கண்டுபிடிக்கப்பட்டு விட்டது.

பரீட்சைக்கு தேவையானவற்றை மறுநினைவூட்டுவதற்கும், முக்கிய தினங்களை மறந்து விடுவதை போக்குவதற்கும் மாத்திரை ஒன்றை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.அல்ஸிமெர் நோயாளிகளுக்காக கண்டறியப்பட்டுள்ள இந்த மாத்திரையானது, அடுத்த சில ஆண்டுகளில் நினைவாற்றல் திறனுக்காகவும் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயோதிகத்தால் ஏற்படும் ஞாபக மறதியைப் போக்கும் வகையில் அமெரிக்க மருந்து நிறுவனங்க்ள் இணைந்து இந்த மாத்திரையை தயாரித்துள்ளன.மூளையை மேம்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் மாத்திரைகள் தற்போது பிரிட்டனில் ஆரோக்கியமான உடல்நிலையுடன் இருப்பவர்களால் பயன்படுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தண்ணீரை Microwave Oven னில் சூடாக்காதீர்கள்!! ஆய்வாளர்கள் எச்சரிக்கை!!!


தண்ணீரை Microwave Oven னில் சூடாக்காதீர்கள் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இவர்கள் ஏன் இப்படிக்கூறுகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள, Microwave Oven எனப்படும் நுண்ணலை அடுப்புகளின் அடிப்படையைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

சாதாரண அடுப்பில் சமைக்கும்போது, முதலில் வெப்பம் பாத்திரத்தை அடைந்து, பின்னர் அதனுள்ளிருக்கும் பதார்த்தத்தினுள் நுழைகிறது. அதாவது, சாதாரண வெப்பக்கடத்தல் முறை மூலம் அங்கு சமையல் நடைபெறுகிறது. நுண்ணலை அடுப்பின் அமைப்பு முற்றிலும் வேறுமாதிரியானது. சாதாரண Electric Ovenகளில் வெப்பத்தை உண்டாக்க heaterகள் இருக்கும்.

ஆனால்,அப்படியொரு அமைப்பே இல்லாதபோது Microwave Oven களில் எவ்வாறு வெப்பம் உண்டாக்கப்படுகிறது? இந்த விந்தையை நுண்ணலைதான் செய்கிறது.மின்சாரத்தின் மூலம் சக்திவாய்ந்த மைக்ரோ அலைகள் Microwave Oven இனுள் உருவாக்கப்படும். இவ்வாறு உருவாக்கப்படும் மைக்ரோ அலைகள் சாதாரணமாக, செக்கனுக்கு 45 கோடி அதிர்வுகள் என்ற எண்ணிக்கையில் இருக்கும்.

இந்த நுண்ணலைகள், சூடாக்குவதற்காக உள்ளே வைக்கப்பட்டிருக்கும் பதார்த்தத்தின் மூலக்கூறுகளை அசைத்து - அவற்றை அதிர்வுறச் செய்கின்றன. இவ்வாறு ஏற்படும் அதிர்வில் மூலக்கூறுகள் ஒன்றோடொன்று உராய, வெப்பம் பிறப்பிக்கப்படுகிறது. இந்தச் செயற்பாடு பதார்த்தத்தின் சகல பாகங்களிலும் நிகழ்வதால் பதார்த்தம் முழுவதும் ஒரே நேரத்தில் விரைவாகச் சூடேறிவிடுகிறது.

podiyan.com micro மைக்ரோ அலைகளினால் அசைக்கக்கூடிய மூலக்கூறுகளைக்கொண்ட பொருட்களை மட்டுமே Microwave Ovenமூலம் சூடாக்க இயலும். பீங்கான், கண்ணடி போன்றவற்றின் மூலக்கூறுகளை மைக்ரோ - வேவினால் அசைக்க இயலாது.

எனவே இவற்றினால் தயாரிக்கப்பட்ட பாத்திரங்களில்வைத்துச் சமைத்தால் பாத்திரம் சூடேறாது - ஆனால் பதார்த்தம் சமைக்கப்பட்டுவிடும். இதனால் பாத்திரத்தைச் சூடாக்கச் செலவழிக்கப்படவேண்டிய சக்தி மீதமாகிறது. உலோகப் பாத்திரங்களை Microwave Oven இனுள் உபயோகிப்பதைத் தவிர்க்கவேண்டும். ஏனெனில், உலோகம் -- மின்காந்த அலைகளை, அதாவது மைக்ரோவேவை தன்னுள் ஊடுருவ அனுமதிக்காது.

இதெல்லாம் சரி, தண்ணீரை Microwave Oven இல் சூடேற்றினால் அப்படி என்ன தகாத விளைவு நேரும்?

சாதாரண அடுப்பில் தண்ணீரைச் சூடக்கினால், பாத்திரத்தின் அடியில் ஏற்படுத்தப்படும் வெப்பத்தினால் பாத்திரத்தின் உள்ளே வாயுக் குமிழிகள் உருவாகி, அவை மெல்ல மேலெழுந்து - மேற்பரப்பை அடைந்தவுடன் வெடித்து நீராவியையும் வெளியேற்றும். இந்தச் செயற்பாடு, தண்ணீர் அதிகமாக வெப்பமாவதைத் தடுத்து, தண்ணீரின் கொதி நிலையான 100 செல்ஸியஸ் அளவிலேயே தொடர்ந்து பேண உதவுகிறது.

இவ்வாறான நிகழ்வு Microwave Oven இல் ஏற்படுவதில்லை. Microwave Oven இனுள் தண்ணீரின் மூலக்கூறுகள் அசைக்கப்பட்டு தண்ணீர் சூடாகும். ஆனால், வெப்பத்தின் சீர்ப் பரம்பலால் வாயுக் குமிழிகள் ஏற்படுவதில்லை. நீராவி வெளியேறாததால் தண்ணீரின் சூடு அதன் கொதி நிலையான 100 செல்ஸியஸ் அளவையும் கடக்கிறது. இந்த நிலை, Super Heat நிலை என்று அழைக்கப்படுகிறது.

இந்த நிலையில் தூசி போன்ற சிறு பொருள் தண்ணீரில் புகுமானால் அது வாயுக் குமிழிகள் உண்டாகும் வாய்ப்பைத்தோற்றுவித்துவிடும். ஏற்கனவே மைக்ரோ அலைகளின் தூண்டலால் உராய்வுநிலையில் இருக்கும் தண்ணீர் மூலக்கூறுகள் - வாயுக் குமிழிகளை உயர் அழுத்தத்துடன் வெளியேற்ற - அவை வெடித்துச்சிதறி அடர்த்தியான நீராவியை உருவாக்கும். இந்த நிலையில் மின்கசிவு, சடுதியான வெடிப்பு போன்ற விபத்துக்கள் ஏற்படும் சாத்தியங்கள் அதிகம்.

எனவேதான், Microwave Oven களில் தண்ணீரைச் சூடாக்காதீர்கள் என்கிறார்கள் ஆய்வாளர்கள்!

பால்வீதியில் 40 ஆயிரம் கோள்களில் உயிரினம் இருக்கிறது; விஞ்ஞானிகள் தகவல்

அமெரிக்காவில் உள்ள எடின்பர்க் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் பால்வீதியில் உள்ள கோள்களில் உயிரினங்கள் இருக்கிறதா? என்று ஆய்வு செய்து வருகிறார்கள்.

இதற்காக விஞ்ஞான டன்கன் பார்கன் ஒரு கம்ப்ïட்டர் புரோகிராமை தாயாரித்து ஆய்வு செய்தார். இதில் பால்வீதிகளில் உள்ள 37 ஆயிரத்து 964 கோள்களில் உயிரினம் இருக்க வாய்ப்பு உள்ளதாக தெரிய வந்தது.

இது பற்றி டன்கன் போர் கன் கூறியதாவது:-

நான் உருவாக்கிய கம்ப்ïட்டர் புரோகி ராம் மூலம் 330 கோள் களில் தண்ணீர், தாதுப் பொருட்கள், வெப்பநிலை போன்ற தகவல்களை ஒப்பிட்டு பார்த்து அவை எந்த விகிதத்தில் அமைந் தால் உயிரினங்கள் வாழ ஏற்றவையாக இருக்கும் என்பதை கண்டறிந்தேன். அதன் பின் இந்த விகிதத்தை கொண்டு பால் வீதியில் உள்ள கோள்களில் உயிரினங்கள் வாழ ஏற்றவையாக இருக் கின்றனவா என்பது கண்டு பிடிக்கப்பட்டது.

பிற கோள்களிலுள்ள உயிரினங்கள் அமீபா போன்ற நுண்ணுயிராக இருக்காமல் வளர்ச்சி அடைந்த உயிரினங்களாக இருக்கும். பிற கிரகத்திலுள்ள உயிரினங்களை சந்திக்க 300 முதல் 400 ஆண்டுகள் ஆகும்.

இந்த பால் வீதியில் 361 அறிவுக்கூர்மையான நாகரீகமடைந்த உயிரினங் கள் இருக்கிறது. அவற்றை நம்மால் ஆள இயலாது.

நாங்கள் ஆராய்ந்த கோள்கள் நம்மை விட மிகப்பழமையானவையாக இருப்பதால் அவை நம் முடைய நாகரீகத்தை விட முன்னேற்றமடைந்ததாக இருக்கும்.

சொந்தமாக கம்ப்யூட்டர் வேண்டாம் - வருகிறது கூகுள் ஜி&டிரைவ்

லேப்டாப் வாங்காமல் அவசரப்பட்டு டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் வாங்கி விட்டீர்களா? லேப்டாப் இருந்தாலும் அதை மறந்து விட்டு வெளியே செல்கிறீர்களா? எதுவானாலும் இனி கவலையில்லை.

இருந்த இடத்தில் இருந்து உங்கள் கம்ப்யூட்டரில் டேட்டாக்களை தொடர்பு கொள்ளும் ஜி&டிரைவ் வசதியை கூகுள் விரைவில் அறிமுகம் செய்கிறது.

கம்ப்யூட்டர் யுகத்தில் புதிய புரட்சி ஏற்படுத்தக்கூடிய இந்த வசதி பற்றி அமெரிக்க தொழில்நுட்ப செய்திக்கான வெப்சைட் கூறுகையில், யுயுஉங்கள் கம்ப்யூட்டர் ஹார்டிரைவை தூக்கி எறியுங்கள். கூகுள் ஜி&டிரைவ் விரைவில் வருகிறதுருரு என்கிறது.

அதாவது, நமது கம்ப்யூட்டரில் நாம் வைத்திருக்கும் அத்தனை டேட்டாக்களையும் இன்டர்நெட்டில் கூகுள் ஏற்படுத்தித் தரும் இடத்திலும் ஸ்டோர் செய்து வைக்கலாம். அதன்மூலம், இருக்கும் இடத்தில் இன்டர்நெட் இணைப்புடன் கம்ப்யூட்டர் இருந்தால் போதும். ஜி&டிரைவ் மூலம் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள டேட்டாக்களை நீங்கள் தொடர்பு கொள்ள முடியும்.

இந்த வசதியில் இமெயில், போட்டோக்கள், இசை, தகவல் பைல்கள் என சகலமானவற்றையும் தொடர்பு கொள்ள முடியும். கூகுள் இப்போது அளித்து வரும் வசதிகளுடன் கூடுதலாக இந்த சேவையும் கிடைக்கப் போகிறது.