வாலி வதை படலம்.... ஒரு சிறிய நோக்கு........!


வானர அரசனான வாலி இந்திரனின் அம்சமாவான். இந்திரன் அழித்த மந்திரமாலையின் சக்தியால் வாலி யாருடன் யுத்தம் செய்ய சென்றாலும் யுத்தம் செய்ய வருபவனின் அரை பலம் வாலியிடம் வந்து தஞ்சமடையும். வாலியை எந்த ஒரு அரசனாலும் நேரில் யுத்தம் செய்து வெல்ல முடியாது. அது ஒரு புறம் இருக்கட்டும். பரம்பொருள் ஏன் வாலியைக் கொல்ல வேண்டும். என்ன காரணம்...? காரணம் உள்ளது... ஏனென்றால் அவன் மாற்றான் மனை தொடுபவன். அவன் செய்கின்ற யுத்தங்கள் எல்லாம் அதர்ம யுத்தம். காரணம் அந்த மந்திரமாலை இல்லாமல் அவன் யுத்தம் செய்வதில்லை.

பரம் பொருள் ஸ்ரீ ராமர் வாலி மீது பாணம் செலுத்திய பின்னர் வாலி அவரைக் குறித்து சில வினாக்களைக் கேட்கிறான். தர்மத்தின் ரூபமான தாங்கள் ஏன் அதர்மம் செய்தீர்கள் என்று கேட்கிறான். அதற்கு பரம்பொருள் பின்வருமாறு பதிலளிக்கிறார். தமது முன்னோரான மாந்தாத்தா அவர்கள் எவ்வாறு ஒரு அதர்மரூபனுக்கு தண்டனை அழித்தார்களோ அதே போல தான் தானும் உனக்கு தண்டனை அழித்திருக்கிறேன். அப்போது வாலி ஸ்ரீ ராமரிடம் அப்படி எந்த தர்மத்தில் எழுதியிருக்கிறது மறைந்திருந்து தாக்குவது தர்மம் என்று என வினவ, அவர் அதற்கு “கொடிய மிருகத்தை மறந்திருந்து தாக்குவது அதர்மம் அல்ல, வானர அரசே” என்று பதிலழிக்கிறார். அது மட்டுமல்ல பலவானின் தவறு கூட தர்மமாகும் என எண்ணி பாவம் செய்த உனக்கு தண்டனை அழித்தது தவறில்லை எனக் கூறுகிறார். அதற்கு வாலி தான் கொடியமிருகம் அல்ல எனக்கூறுகிறான்.
ஸ்ரீ ராமரோ, “ நீ நரமிருகமாவாய், மிருகம் கூட பசி எடுத்தால் தான் வேட்டையாடுகிறது, ஆனால் நீ நினைத்த கணத்தில் வேட்டையாடுகிறாய் அதுவும் அடுத்தவன் துணைவியை, அதனால் தான் நீ உனது தீய திருஷ்டியை சுக்கிரீவனின் மனைவியில் வைத்தாய்..... ” என்று பதிலளிக்கிறார்.

“பேச்சில் தீச்செயல் கொண்டவன் சகல உயிர்களின் ஆனந்தமதை அழிப்பவன் நமது விரோதியாய் இல்லாவிட்டாலும் அவனை வதம் செய்ய வேண்டும்... நமது உடன் பிறந்தவனின் மனைவி, நமக்கு சகோதரியாக, நமக்கு மகளாக, ஏன்... மாதாவாகவும் தெரிய வேண்டும்... இந்த விதியை மீறுபவன் மன்னனாய் இருந்தாலும் மடியத்தான் வேண்டும், எனவும் பதிலளிக்கிறார்.

அதற்கு வாலி, எனக்கு தண்டனை அழிக்கும் அதிகாரத்தை உமக்கு அழித்தது யார்... நீர் யார் என்று குழப்பமடைய, அதற்கு தான் இஷ்வாகு வம்சத்தில் வழி வந்தவர்... தனக்கு அதர்மத்துக்கு எதிராக தண்டனை அழிக்கும் அதிகாரம் இருக்கிறது என பரம்பொருள் பதிலளிக்கிறார்.

இறுதியில் வாலியும் பரம்பொருளை அடையாளம் கண்டு கொண்டான். சுக்கிரீவனிடம் மகுடத்தைக் கொடுத்துவிட்டு, தனது குடும்பத்தை சுக்கிரீவனிடம் ஒப்படைத்துவிட்டு பரம்பொருளின் மடியிலே, ஸ்ரீ ராம நாமத்தை உச்சரித்தவாறே உயிர் பிரிகிறான். பரம்பொருளின் பாணம் பட்டதால் அவனது பாவங்கள் நீங்கி முக்தியடைகிறான்.

தோழியுடன் இனிமையாய் ஒரு நாள்…..!
கைத்தொலைபேசியை எடுத்தேன்… தோழிக்கு அழைத்தேன்…!... பேசினேன்…. சிறியதொரு நலன் விசாரணை….. எனது பல்கலைக்கழகத்தை ஒரு முறை சுத்திக்காட்டலாம் என எண்ணினேன்… ஆரம்பமானது எமது சிறிய சுற்றுலா… ஒவ்வொன்றாக அறிமுகப்படுத்தினேன்.... இடையில் எமது நண்பர்களின் அறிமுகம்…. சில சில குறும்புக்கதைகள்…. தோழியின் முகத்தில் புன்முறுவலுடன் தொடர்ந்தது…… சிற்றுண்டிச்சாலையில் சில நிமிடங்கள்…. மறக்கமுடியாத சில நிமிடங்கள்…. இனி இப்படி ஒரு குறுஞ்சுற்றுலா வருமோ….!

”கவிதை எழுதுவோமா ?” என யோசித்த படி உட்கார்ந்தேன்....!


கவிதை எழுதுவோமா....?
என யோசித்த படி உட்கார்ந்தேன்....!
எழுதுகிற கவிதைகள் யாவும்
காதலை பற்றியே இருக்கிறதே
என்றொரு யோசனை.....!

வேறு தலைப்பில் எழுத ஆசைதான்
ஆனால் வேறு தலைபு தெரியவில்லை
தெரிந்து எழுத முடியவில்லை....!
ஏன் அப்படியொரு குழப்பம்....!

வீட்டில் பழைய சஞ்சிகைகளைப்
புரட்டிப் பார்த்தேன்....!
ஒன்றுமே தென்படவில்லை....!
என்ன செய்வதென்றும் புரியவில்லை....!

திடீரென்று ஒரு யோசனை
நூலகத்துக்கு போவோமா.....!
பிரபலம் பெரும் கவிஞர்கள்
விதமான கவிதை ஆக்கங்கள்....!
அடுக்கடுக்காய் இருந்தது....!

தேடலில் சில நிமிடங்கள்...
மெது மெதுவாய் ஓடின....!
பற்பல கவிஞர்கள் கூடவே....!
இடையில் எமது கவிப்பேரரசுடன்...!
சொல்லவா வேண்டும்...!

கவிப்பேரரசின் கவிதை என்றாலே....
ஒருவரும் தேவையில்லை....!
வாசிக்க தொடங்கினால் போதும்
ஒவ்வொரு வரியும் இனிக்கும்....

அவர் கவிதைகளில் ஒரு பயணம்.
முடிவில்லாத கற்பனை.......!
கவிஞரின் வரிகளே சிறந்தது....!
அதிலும் கவிப்பேரரசின் வைர வரிகளை
சொல்லவா வேண்டும்...!

காதலை பற்றி எழுதிய கவிஞர்....!
தூங்கிய காதலை எழுப்பி விட்டார்....!
இனி தூங்கவா முடியும்....!
அதில் ஒரு குறுந்தூக்கம்....!
வீடு திரும்பினேன்....!

வீட்டுக்கு வந்து யோசித்தேன்....!
ஒருகையில் பேனாவைத் திறந்தபடி
சும்மா யோசித்தாலும்......!
காதல் கவிதை தான் வருகிறது...!
என்ன செய்வது........!!!!


பேஸ்புக்கிற்கு போட்டியாக "கூகுள் பிளஸ்"....!


கூகுள் நிறுவனம் பேஸ்புக்கிற்கு போட்டியாக "கூகுள் பிளஸ்" என்ற சமூக இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கூகுள் நிறுவன பொறியியல் பிரிவு மூத்த துணை தலைவர் குண்டோத்ரா தனது வலைப்பதிவில் தெரிவித்துள்ளதாவது: சமூக இணையத்தளம் எனப்படும் சமூகவலை தளங்களில் மக்கள் பெரும் ஈடுபாடு காட்டி வருகின்றனர்.

அவர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் விதமாக சமூக இணையதளத்தை உருவாக்கும் முயற்சியில் கூகுள் நிறுவனம் ஈடுபட்டு வந்தது. தற்போது கூகுள் பிளஸ் என்ற பெயரில் புதிய ‌தொழில்நுட்பத்திலான சமூக இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம்.

இந்த புதிய சமூக இணையத்தளம் பேஸ்புக் தளத்தை ஒத்திருக்கும் போதிலும் அதைவிட கூடுதல் வசதிகளை பெற்றுள்ளது. இந்த புதிய சேவையினை ஆண்ட்ராய்ட் ஓபரேடிங் சிஸ்டத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் கைத்தொலைபேசிகள் விற்கும் விற்பனை மையங்களிலிருந்து பெற்றுக்கொள்ளலாம் என்றும், தற்போதைய அளவில் சோதனைக்காக இது அறிமுகப்படுத்தப்பட்டிருப்பினும் வருங்காலங்களில் பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சர்க்கிள்ஸ், ஸ்பார்க்ஸ், ஹேங்அவுட்ஸ் மற்றும் மொபைல் உள்ளிட்ட ‌சிறப்பம்சங்களை உள்ளடக்கியதாக இந்த சேவை வடிவமைக்கப்பட்டுள்ளது. கூகுள் பிளசில் உள்ள சர்க்கிள்கள், பேஸ்புக்கின் தகவல் பகிர்ந்து கொள்ளும்( இன்பர்மேசன் ஷேரிங்) சேவையை ஒத்திருத்தாலும், இது பேஸ்புக்கைப் போல தனது தகவலை அனைவருக்கும் தெரிவிக்காமல் உப‌யோகிப்பாளருக்கு நெருக்கமான நண்பர்களுக்கு மட்டும் தெரிவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதாவது உபயோகிப்பாளர்களின் உண்மையான தகவல்களை உரிய நண்பர்களுக்கு மட்டும் தெரிவிப்பது என்ற கொள்கையுடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. கிளவுட் தொழில்நுட்பமுறையில் இங்கு பொட்டோக்கள் பதிவேற்றம் செய்யப்பட உள்ளதால் இன்ஸ்டன்ட அப்லோட் இதில் சாத்தியமாகிறது.

இது இதன் மற்றொரு சிறப்பம்சமாகும். மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சமாக அதுவும் பேஸ்புக்கில் இல்லாத சிறப்பம்சமாக இதில் வீடியோ சாட் வசதி உள்ளது. ஒரே சமயத்தில் பல நண்பர்களுடன் வீடியோ சாட் முறையில் தொடர்பில் இருப்பது இந்த சேவையின் மூலமே சாத்தியமாகி உள்ளதாக அவர் அதில் தெரிவித்துள்ளார்.

600 மில்லியன் பயனாளர்களைக் கொண்டு சமூக இணையதள உலகில் முடிசூடா மன்னனாக விளங்கிய பேஸ்புக்கிற்கு தங்கள் நிறுவனத்தின் கூகுள் பிளஸ் கடும் சவாலாக அமையும் என்று அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக தகவலுக்கு