பாரிய நட்சத்திர வெடிப்பின் ஆரம்ப தருணங்கள் பதிவு - நியூஜெர்ஸி ஆராய்ச்சியாளர்கள் சாதனை

அண்டவெளியில் பாரிய நட்சத்திரமொன்று சுயமாக வெடித்துச் சிதறும் போதான ஆரம்ப கணங்களை விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் பதிவு செய்துள்ளனர். பல தசாப்த தேடுதலின் பிற்பாடு உலகின் உயர்மட்ட தொலைநோக்கியைப் பயன்படுத்தி இந்த அதிசயிக்கத் தக்க நிகழ்வை விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் அவதானித்துள்ளனர்.

கடந்த காலங்களில் நட்சத்திரம் ஒன்று வெடித்துச் சிதறி பல நாட்கள் கழிந்த பின்னரான காட்சியையே விஞ்ஞானிகள் அவதானித்துள்ளனர். இந்நிலையில் தற்போது நட்சத்திர வெடிப்பு இடம்பெற்று இரு மணித்தியால காலத்துக்குள்ளான காட்சியை விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் அவதானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி நட்சத்திரமானது சூரியனை விட 8 மடங்கு பெரியதாகும். இந்த நட்சத்திர வெடிப்பின் போது திரில்லியன் எண்ணிக்கையான அணுகுண்டுகள் ஒரே சமயத்தில் வெடிக்கையில் வெளியிடப்படும் சக்திக்கும் அதிகமாக சக்தி வெளியிடப்பட்டுள்ளதாகக் கணிப்பிடப்பட்டுள்ளது. நியூஜெர்ஸியிலுள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சியாளரான அலிசியா சொடர்பேர்க்கும் அவரது சகாக்களுமே அதி சக்தி வாய்ந்த தொலைக்காட்டியைப் பயன்படுத்தி இந்த அரிய நட்சத்திர வெடிப்பு காட்சியைப் பதிவு செய்துள்ளனர்

No comments: