இதுவரை ஆயிரக்கணக்கான பாடல்களை கொடுத்து ஒட்டுமொத்த இசை ரசிகர்களையும் கட்டிப்போட்ட இசைஞானி இளையராஜா, ஒரு முறை கூட, தன் பாடல் எப்படி படமாக்கப்படுகிறது என்பதை பார்க்க செட்டுக்கு போனதே இல்லை. முதன் முதலாக அவர் தனது பாடல் படமாக்கப்படுவதை நேரில் பார்த்து அசந்து போயிருக்கிறார்.
பண்ணைபுரத்தில் இருக்கிற தனது வீட்டுக்கு சென்னையில் இருந்து கிளம்பிய ராஜா, மதுரை வழியாக போய் கொண்டிருந்தாராம். ராஜா இசையமைத்த ஜெகன்மோகினி படப்பிடிப்பு மதுரை திருமலை நாயக்கர் மஹாலில் நடந்து கொண்டிருந்தது. தயாரிப்பாளர் எச்.முரளியும், இயக்குனர் என்.கே.விஸ்வநாதனும், படப்பிடிப்புக்கு வர வேண்டும் என்று அன்பு வேண்டுகோள் விடுக்க, தட்ட முடியாமல் மதுரையில் காரை நிறுத்த சொல்லி சில நிமிடங்கள் அங்கே செலவிட்டார் இளையராஜா.
படத்தின் நாயகன் ராஜாவும், நிலாவும் ஆடிப்பாடும் காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தார்கள். இவர் போனதும் யூனிட்டே பரவசம் ஆகிவிட்டதாம். நிலாவும், ராஜாவும் இசைஞானி காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டதுதான் ஹைலைட்!
No comments:
Post a Comment