நிலவுக்கு செல்ல தயாராகும் அமெரிக்காவின் பிரபல பாடகி

பிரபல கவர்ச்சி பாடகி மடோனா ராக்கெட்டில் நிலவுக்கு செல்ல திட்ட மிட்டுள்ளார்.
அமெரிக்காவின் பிரபல கவர்ச்சி பாடகி மடோனா இப்போது இங்கிலாந்தில் தனது குடும்பத்துடன் குடியேறி இருக்கிறார்.

அவருக்கு நீண்ட நாட் களாகவே ஒரு ஆசை. ராக்கெட்டில் நிலவுக்கு செல்ல வேண்டும் என்பது தான் அந்த ஆசை. இப் போது விண்வெளிக்கு பய ணிகளை ராக்கெட்டில் சுற் றுலா அழைத்து செல்வது போல 2013 ஆண்டுக்குள் நிலவுக்கும் சுற்றுலா பயணிகள் செல்லும் வாய்ப்பு கிடைக்கும் என்று ஒரு புத்தகத்தில் மடோனா படித்து இருக்கிறார்.

அது முதல் அவருக்கு அந்த ஆசை வந்து விட்டது. இதற்காக ஏராளமான தொகையை இப்போதே மடோனா சேமித்து வரு கிறார். ஆனால் அவரது இந்த ஆசை மடோனாவின் உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

பெண்களே இயக்கிய விமானம்

முழுக்க முழுக்க பெண் விமானிகள் மற்றும் பெண் ஊழியர்களை கொண்டு, சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட்டு சென்றது. விமானத்தை புதிய தலைமை விமானியான சமிலி கொரட்டபள்ளி இயக்கினார். இதில் 188 பயணிகள் பயணம் செய்தனர்.

எயர் இந்தியா எக்ஸ்பிரஸ்Õ நிறுவனத்தில் 76 விமானிகள் உள்ளனர். அவர்களில் 6 பேர் பெண்கள். இவர்களில் சமிலி கொரட்டபள்ளி என்ற பெண் விமானி, ஏர் இந்தியா எக்ஸ்பிரசில் முதல் பெண் கமாண்டராக (தலைமை விமானி) பதவி உயர்வு பெற்றுள்ளார்.

அவரை பாராட்டும் வகையில், முழுக்க முழுக்க பெண்களைக் கொண்டே சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு விமானத்தை இயக்க ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவ னம் முடிவு செய்திருந்தது.

அதன்படி, நேற்று பிற்பகல் 2.25 மணிக்கு சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தை (ஐஎக்ஸ் 662) ஷமிலி தலைமை விமானியாக இருந்து இயக்கினார். துணை விமானி, பணிப் பெண்கள் என முழுவதும் பெண்களைக் கொண்டே இயக்கப்பட்ட இந்த விமானத்தில் 188 பயணிகள் பயணம் செய்தனர்.

முன்னதாக, சமிலி சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறுகையில், ÔÔநமது நாட்டில் பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம்.

பெண்களால் முடியாதது எதுவுமில்லை என்பதை நிரூபிக்கும் விதத்தில் நாங்களே தனியாக விமானத்தை இயக்கி சிங்கப்பூர் சென்றுவிட்டு மீண்டும் சென்னைக்கு இன்று இரவு திரும்ப உள்ளோம். ஆண்கள் துணை இல்லாமல் விமானத்தை இயக்குகிறோமே என்ற அச்சம் சிறிது கூட எங்களிடம் இல்லைÕÕ என்றார்.

இதுபோல, கடந்த மார்ச் மாதம் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, சென்னையில் இருந்து கொழும்பு சென்ற இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை முழுக்க முழுக்க பெண்களே இயக்கினர். அதன்பின்னர், இப்போது 2வது முறையாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தை பெண்களே இயக்குகின்றனர்.

நாயை கடித்து குதறிய 11 வயது சிறுவன்

இந்த சம்பவம் பிரேசில் நாட்டில் நடந்துள்ளது. அங்குள்ள பெலோ நகரில் 11 வது சிறுவன் கேபிரியேல் தனது மாமாவின் வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்தான்.

அப்போது பயங்கரமாக குரைத்தபடி கேபிரியேல் மேல் பாய்ந்தது. `பிட்டி புல்' ரகத்தை சேர்ந்த ஒரு நாய்.

அது கேபிரியேலை கீழே தள்ளி பிராண்டியது.நிலை தடுமாறிய கேபிரி யேல் சுதாரித்துக் கொண்டு இந்த நாயை பிடித்து அதன் கழுத்தில் பலமாக கடித்து குதறினான். விடாமல் அந்த சிறுவன் கடித்து குதறியதில் அவனது பல் நாயின் கழுத்தில் சிக்கிக் கொண்டது. நீண்ட போராட்டத்துக்குப் பிறகு இருவரையும் மற்றவர்கள் தனித்தனியாக பிரித்தனர்.

அந்த சிறுவனை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவனுக்கு 5 தையல் கள் போடப்பட்டுள்ளன. அந்த நாயும் ரத்தம் சொட்ட சொட்ட சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

முதல் முறையாக அறுவை சிகிச்சையின் மூலம் 4 முதலைகள், 18 சிங்கங்களுக்கு கருத்தடை ஆபரேஷன்

சென்னை கால்நடை மருத்துவ கல்லூரி அறுவை சிகிச்சை நிபுணர்கள் முதல் முறையாக 4 முதலைகள், 18 சிங்கங்களுக்கு அறுவை சிகிச்சையின் மூலம் கருத்தடை அறுவை செய்தனர்.

அறுவை சிகிச்சை

அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள 4 முதலைகளுக்கும், சர்க்கஸ் மற்றும் தனியார் வசம் இருந்த பாரம்பரியம் தெரியாத 18 ஆண் சிங்கங்களின் இனப்பெருக்கத்தை தடுப்பதற்காக அறுவை சிகிச்சையின் மூலம் கருத்தடை செய்யப்பட்டது.

இந்த சிகிச்சையை சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவ கல்லூரி துறை பேராசிரியர் மற்றும் தலைவர் டாக்டர் ஆர்.சுரேஷ்குமார், பேராசிரியர் டாக்டர் பி.ஜஸ்டின் வில்லியம், இணை பேராசிரியர் டாக்டர் ஜி.தனஞ்ஜெயராவ் ஆகியோர் கொண்ட குழு செய்தது. இந்த அறுவை சிகிச்சை செய்வதற்கு 3 மணி நேரம் ஆகியது.

இது குறித்து தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ப.தங்கராஜ் கூறியதாவது:-

முதன்முÛ
முதலைகளில் இது போன்ற அறுவை சிகிச்சையை முதல் முறையாக சென்னை கால்நடை மருத்துவக்கல்லூரி அறுவை சிகிச்சை துறை நிபுணர்கள் வெற்றிகரமாக செய்து இருக்கிறார்கள். பொதுவாக வெளி தோற்றத்தை வைத்து ஆண், பெண் முதலைகளை இனவாரியாக பிரிப்பது கடினம். முதலைகள் வருடத்திற்கு இருமுறை 25 முதல் 30 வரை முட்டைகள் இடும். அதனால் முதலைகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இந்த அறுவை சிகிச்சை காரணமாக ஆண் முதலைகள், பெண் முதலைகளோடு இனச் சேர்க்கை செய்ய முடியும். ஆனால் இன விருத்தி நடைபெறாது.

இந்த அறுவைக்கு 3 மணி நேரம் ஆகும். அதன் பிறகு முதலைகள் 6 மணி நேரம் மயங்கிய நிலையிலே இருக்கும். அதன் பிறகு இதர சாரசரி முதலைகள் போல் செயல் பட தொடங்கும்.

சர்க்கஸ் சிங்கங்கள்

சிங்கங்களை பொறுத்தவரையில் சர்க்கஸ் மற்றும் தனியார் வசம் இருந்த பாராம்பரியம் தெரியாத 18 சிங்கங்களுக்கு அறுவை சிகிச்சை மூலம் கருத்தடை ஆபரேஷன் மேற்கொண்டு உள்ளோம். சிங்கங்கள் எந்த வகையை சேர்ந்தது என்பது பற்றி தெரியாததால் அவற்றை இனப்பெருக்கத்தில் ஈடுபடுத்த முடியாது. அதனால் பரம்பரியம் தெரியாத 18 சிங்கங்களுக்கும் கருத்தடை ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது.

இந்த அறுவை சிகிச்சையை தொடர்ந்து வெள்ளாடு மற்றும் செம்மறியாடுகளில் ஏற்படும் ஆந்த்ராக்ஸ்(அடைப்பான்) நோய்களை தடுக்க நிரந்தரமான, பக்க விளைவு இல்லாத தடுப்பு மருந்தை கண்டுப்பிடிப்பதற்காக கடந்த 3 ஆண்டு காலம் பாடுபட்டோம்.

இதற்காக அரசு ரூ.13 லட்சம் ஒதுக்கீடு செய்தது. தாவர எண்ணையில் இருந்து தற்போது புதிய வகை தடுப்பு மருந்தை கண்டு பிடித்து இருக்கிறோம். இந்த மருந்தை 6 மையங்களில் வைத்து சோதனை செய்து பார்த்து இருக்கிறோம். இந்த மருந்தில் பக்க விளைவுகள் இருக்காது. வெள்ளாடுகளுக்கும், செம்மறியாடுகளுக்கும் வரும் நோய்களுக்கு இந்த மருந்து தீர்வாக அமையும்.

கருத்தரங்கம்

வரும் 28, 29-ந் தேதிகளில் நடைபெறும் ``கால்நடைகளில் தோன்றும் புதுவகை நுண்ணுயிர் நோய்களும் மற்றும் கால்நடை உயிர் தொழில் நுட்பவியலின் பயன்பாடுகளும்' என்ற கருத்தரங்கில் புதிய வகை தடுப்பூசியை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி வெளியிடுகிறார்.

இந்த கருத்தரங்கில் வெர்ஜினியா மற்றும் மெரிலேண்ட் பல்கலைக்கழகத்தின் சார்பாக 15 வல்லுனர்கள் மற்றும் இந்தியா முழுவதிலும் இருந்து 150 விஞ்ஞானிகள் பங்கேற்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

உலகின் முதல் இணைய தளத்தின் பிதா மகன் Tim Berners Lee

வலையுலக பிதாமகன் என அழைக்கப்படும் Tim Berners Lee 1990 ஆம் ஆண்டு CERNஇல் (ஐரோப்பிய அணுசக்தி ஆய்வு கழகத்தில்) ஆய்வு செய்து கொண்டிருந்த போது Hypertext எனும் தொடர்ச்சியாக எழுத்து வடிவங்களை இணைக்கும் கருதுகோள் மூலம் சிறு கணினியையும் இணையத்தையும் இணைத்து உலகின் முதல் இணைய தளத்தை உருவாக்கினார்.

முதலில் CERN க்காக ஆய்வாளர்கள் தங்கள் கண்டுபிடிப்புகள், தகவல்களை பகிர்ந்து கொள்வதற்காக இந்த இணைய தளம் மற்றும் இணைய பக்கங்கள் உபயோகிக்கப்பட்டன.பின்னர் 1992 ஆம் ஆண்டு உலகின் மற்ற
ஆய்வு கழகங்களில் கணினி வழங்கிகள் வந்த பிறகு இணையம் உலகில் பரவ ஆரம்பித்தது.

உலகின் முதலாவது இணையத்தளம்

1990 இல் டிம் பெர்னர்ஸ் பின்னிய அந்த இணைய தளத்தின் உண்மையான பக்கம் தற்போது இல்லை எனினும் 1992இல் டிம் பெர்னர் அந்த தளத்தின் ஒரு பக்கத்தின் நகல் எடுத்து World wide web Consortium தளத்தில் வைத்துள்ளார்.

உலகின் முதலாவது இணையத்தளத்தின் இணையப்பக்கம்

உலகின் முதல் இணையதளத்திற்காக டிம் பெர்னர்ஸ் உபயோகித்த கணினி மற்றும் வழங்கி இங்கே.தற்போது எளிமையாக தெரியும் அந்த இணைய பக்கத்தில் ஆரம்பித்து இன்று உலகத்தையே புரட்டி போட்டு விட்டது உலகளாவிய இணைய வலை.இணைய வலையை கண்டுபிடித்ததற்காக பல்வேறு விருதுகள் பெற்ற டிம் பெர்னர்ஸ் உலகின் வாழும் அறிவுஜீவிகளின் பட்டியலில் முதல் இடம் பிடித்து 2004 ஆம் ஆண்டு இங்கிலாந்திடமிருந்து knight பட்டம் பெற்றார்.

முன்னொரு காலத்தில் தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக Global village பின் Global Hut என்ற பின்னர் தற்போது Global Desktop என சுருங்கி தற்போது Global Palm(??!!) என செல் பேசிகளிலும் இணைய பக்கங்கள் உள்நுழைந்து உலகமே உள்ளங்கைக்குள் சுருங்கி விட்டது.சென்ற ஜூன் மாத கணக்குப்படி உலகின் மொத்த இணைய தளங்களின் எண்ணிக்கை 17,23,38,726. எனவும் சென்ற ஒரு மாதத்தில் மட்டும் 40 லட்சம் இணைய தளங்கள் தொடங்கப்பட்டுள்ளன. டிம் பெர்னர்ஸ் இன்று நிகழ்ந்து கொண்டிருக்கும் இணைய தொழில் நுட்பங்களையும் வளர்ச்சியையும் பார்த்து தினம் தினம் ஆச்சர்யப்பட்டு கொண்டிருப்பார்.

அறிவியல் அதிசயங்கள் (8): எதிர்கால ந்யூரல் இயந்திரங்கள் ச.நாகராஜன்

இனிமேல் நடக்கப்போவது என்னவெனில் இந்த இயந்திரங்களை நம் உடலுக்குள்ளேயே நாம் செலுத்திக் கொள்ளப் போகிறோம், அவ்வளவு தான்! மனிதனும் இயந்திரமும் சங்கமமாகி விட்ட நிலையில் மனிதன் இயந்திரம் ஒன்றாகவே ஆகி விடும்! ராட்சஸ வேகத்தில் வளர்ந்து வரும் இயந்திரங்கள் மனிதர்களுக்கு எதிரிகளாகி விடும் என்று பயப்படத் தேவையில்லை என்று விஞ்ஞானிகள் திட்டவட்டமாகத் தெரிவிக்கின்றனர்.

இதை ஒரு உதாரணம் மூலமாக அவர்கள் தெளிவாக விளக்குகின்றனர். இன்று கம்ப்யூட்டர் வாழ்வின் எல்லா பகுதிகளிலும் புகுந்து விட்டது. கம்ப்யூட்டர் அனைத்தும் உலகில் ஒரு நாள் வேலை செய்யவில்லை என்று வைத்துக் கொள்வோம். மனித வாழ்க்கையே உலகில் ஸ்தம்பித்து விடும். ஆனால் 30 வருடங்களுக்கு முன்பு இது போல கம்ப்யூட்டர் உலகெங்கும் வேலை செய்யவில்லை என்றாலும் மனித வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்காது. ஒரு சில விஞ்ஞானிகள் மட்டுமே பாதிக்கப்பட்டிருப்பர்.ஆக இன்று நம்மை கம்ப்யூட்டர் ஆதிக்கம் செல்லும் நிலைக்கு வந்து விட்டோம். நாம் எடுக்கும் முடிவுகள் அனைத்துமே கம்ப்யூட்டர் தரும் தகவல்களின் அடிப்படையில் தான் என்று ஆகி விட்டது!

இனிமேல் நடக்கப்போவது என்னவெனில் இந்த இயந்திரங்களை நம் உடலுக்குள்ளேயே நாம் செலுத்திக் கொள்ளப் போகிறோம், அவ்வளவு தான்! இது வரை, மனித உடல் வேறு, இயந்திரங்கள் வேறு என்று தனித் தனியே இருந்தது. இனி அப்படி இருக்காது. மனிதனும் இயந்திரமும் சங்கமமாகி விட்ட நிலையில் மனிதன் இயந்திரம் ஒன்றாகவே ஆகி விடும்!

இந்த இயந்திரங்களே மூளையில் நமது சிந்தனா செல்களைத் தூண்டி விட்டு தக்க முடிவுகளை எடுக்கத் தூண்டும்! இந்த மனிதன் இயந்திரம் நாகரிகம் நம்மாலேயே உருவாக்கப்படுவதால் நமக்கு எந்தவித ஆபத்தும் இருக்காது.

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிலையமான நாஸாவில் அமிஸ் ரிஸர்ச் சென்டர் (Ames Research Centre) என்று ஒரு ஆய்வு மையம் உள்ளது. இதில் பிரபல ) என்று ஒரு ஆய்வு மையம் உள்ளது. இதில் பிரபல ஆராய்ச்சியாளரின் பெயர் சக் ஜோர்கென்ஸன். Chuck Jorgensen ஜோர்கென்ஸனும் அவரது சகாக்களும் அற்புதமான ஒரு ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மனித குரல்வளையில் உள்ள வோகல் கார்ட் எனப்படும் குரல் நாணில் உள்ள நரம்பு செல்களில் உருவாக்கப்படும் சிக்னல்களைப் பிடித்து அதை அப்படியே கம்ப்யூட்டரில் பேச்சாக ஒலிக்கச் செய்யும் முயற்சியே இவர்களது ஆராய்ச்சி!

பேச முடியாதவர்களுக்கு இது பெரிதும் துணை செய்யும். அவர்கள் பேச நினைத்ததை கம்ப்யூட்டர் தனது ஸ்பீக்கர் வாயிலாக ஒலிக்கச் செய்து விடும். அது மட்டுமின்றி விண்வெளியில் ஸ்பேஸ் சூட்டுடன் உள்ளவர்களுக்கும், மிக மிக அதிகமான இரைச்சல் உள்ள இடங்களில் பேச வேண்டியவர்களுக்கும் இது நல்ல பயனைத் தரும்.

மூளை தரும் சிக்னல்கள் மனித குரல்வளையில் உள்ள குரல் நாண்களை என்ன பேச வேண்டுமோ அதைப் பேச இயக்குகின்றன. இந்த சிக்னல்களை கம்ப்யூட்டர்கள் தெரிந்து கொள்ளும், பேசும், அவ்வளவு தான்!

இந்த விஞ்ஞான வளர்ச்சியின் அடுத்த கட்டம் என்ன?

மனம் மனதோடு தொடர்பு கொண்டு பேசும் டெக்கில்பதி என்பது தான்! இதுவும் எதிர்காலத்தில் சாத்தியமே என்று ஜோர்கென்ஸன் கூறுகிறார்.

புதிய ராதிகா

தமிழ் சினிமாவில் ராதிகாக்கள் பிரபலம். இதே பெயரில் மேஜிக் ராதிகா இருந்தார்.
தொடர்ந்து ராதிகா சவுத்ரி, குட்டி ராதிகா நடித்தனர். இப்போது புதிய ராதிகா வந்திருக்கிறார்.
செல்வராகவனின் உதவியாளர் பரந்தாமன் இயக்கும்

‘செல்வராகவன் பி.இ’யில் ஹீரோயினாக அறிமுகமாகும்

இவர், மும்பை மாடல். அவருக்கு ஜோடி புதுமுகம் கிஷன்.

உலகத்தை காப்பாற்றுவதற்கு 100 மாதங்கள் மட்டுமே அவகாசம்

அபாயமிக்க பூகோள வெப்பமாதலிலிருந்து பூமியைப் பாதுகாக்க, 100 மாத கால அவகாசம் மட்டுமே உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.

இதன் பிரகாரம் கால நிலை மாற்றம், எரிபொருள் மற்றும் நிதி போன்ற தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு புதிய உடன்படிக்கையொன்று ஏற்படுத்திக் கொள்ளப்படுவது அவசியரஔமன "கிறீன் நியூ டீல்' குழு என்ற அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் இவ்வமைப்பால் வெளியிடப்பட்ட அறிக்கையில் புதுப்பிக்கக் கூடிய சக்தி வளங்கள் மீதான பிரதான முதலீடு, சுற்றுச் சூழல் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலான ஆயிரக்கணக்கான தொழில் வாய்ப்புக்கள் என்பன உட்பட பல்வேறு திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன

6 பந்துகளையும் 6 விதமாக வீசுவேன் - சுழற்பந்து வீச்சாளர் அஜந்த மென்டிஸ்

ஒரு ஓவரில் 6 பந்துகளையும் 6 விதமாக வீசுவேனென்று இலங்கையின் சுழற்பந்து வீச் சாளர் அஜந்த மென்டிஸ் கூறியுள்ளார். இலங்கையில் நடை பெறவுள்ள இந்தியஇலங்கை கிரிக்கெட் தொடருக்கு முன்னணி சுற்றுலா நிறுவனமான "டிராவலார்க் ஹாலிடேஸ் ' நிறுவனத்தை அதிகாரபூர்வ சுற்றுலா முகவராக இலங்கை கிக்கெட் சபை நியமனம் செய்துள்ளது.இந்த நிறுவனம் 5 ஆயிரத்துக்கு மேற்பட்டோரை இலங்கைக்கு அழைத்துச்சென்று இந்திய அணிக்கு ஆதரவு தெரிவிக்கவும், பல்வேறு சிறப்பு சலுகைகளை அளிக்கவும் திட்டமிட்டுள்ளது.

இது பற்றிய தகவல் சென்னையில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில் தெரிவிக்கபட்டது. இதில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கப்டனும், இலங்கை கிரிக்கெட் சபைத்தலைவருமான அர்ஜூன ரணதுங்கவும் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இலங்கை அணியின் "புதிய ஹீரோ' வான சுழற்பந்து வீச் சாளர் அஜந்த மென்டிஸ் கூறியதாவது:

ஆசியக் கிண்ண கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதால் என் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஒரு நாள் போட்டியிலிருந்து டெஸ்ட் கிரிக்கெட் முற்றிலும் மாறுபட்டது.டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு நான் புதுசு.

நான் ஒருஓவரில் 5 விதமாக பந்து வீசி வருகிறேன். இப்போது 6 ஆவது பந்திலும் வித்தியா சத்தை காட்டும் வகையில் முயற்சி மேற்கொண்டுள்ளேன். முரளிதரன் எனக்கு முன்னோடி மாதிரி. அவருடன் இணைந்து பந்து வீச விரும்புகிறேன். அவருடன் சேர்ந்து இந்திய முன்னணி வீரர்களான டெண்டுல்கர், ராவிட், கங்குலி,லட்சுமண் போன்றோருக்கு பந்து வீசுவது எனக்கு கிடைத்த கௌரவமாகும். டெண்டுல்கர்,விக்கெட்டை கைப்பற்ற வேண்டுமென்ற ஆசை உள்ளது. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

90 வது வயதில் நெல்சன் மண்டேலா

தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவுக்கு நேற்று 90 வயது. கடந்த சில வாரங்களாக உலகின் பல நாடுகளுக்கும் சுற்றுப் பயணங்களை மேற்கொண்டுவிட்டு நாடு திரும்பிய மண்டேலா தென்னாபிரிக்காவின் கிழக்கு பகுதியில் உள்ள கேப் மாகாணத்தில் தனது சொந்தக் கிராமத்தில் குடும்பத்தவர்களுடன் அமைதியான முறையில் பிறந்த தினத்தைக் கொண்டாடினார். 2004 ஆம் ஆண்டு தனது 85 வயதில் பொதுவாழ்வில் இருந்து ஓய்வுபெற்றுக் கொண்ட அந்த மாமனிதரினால் உலகில் இடம்பெறுகின்ற அநீதிகளையும் கொடுமைகளையும் கைகட்டிப்பார்த்துக் கொண்டிருக்க முடிவதில்லை. மனித குலத்தின் நலன்களில் மானசீகமான அக்கறை கொண்ட எவரினாலும் உண்மையில் பொதுவாழ்வில் இருந்து ஓய்வுபெற முடியாது. நேற்றைய தினத்தில் கூட தனது கிராமத்தில் வைத்து பேட்டியொன்றை அளித்த மண்டேலா உலகில் உள்ள ஏழைகளுக்கு தனவந்தர்கள் கூடுதல் உதவிகளைச் செய்யவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இன்று சனிக்கிழமை உத்தியோகபூர்வ பிறந்த தினக் கொண்டாட்டங்கள் இடம்பெறவிருக்கின்றன. "இப்போது எந்த அதிகாரத்தையோ அல்லது செல்வாக்கையோ கொண்டிராத ஓய்வுபெற்ற ஒரு வயோதிபரின் பிறந்த தினத்தை நீங்கள் எல்லோரும் கொண்டாடுவதைப் பார்க்கும்போது எமக்குப் பெரும் கௌரவமாக இருக்கிறது' என்று வானொலி மூலம் விடுத்த பிறந்த நாள் செய்தியில் அவர் தெரிவித்திருக்கிறார்.
தனது நாட்டின் முதல் கறுப்பு இன ஜனாதிபதியாகுவதற்கு முன்னர் நெல்சன் மண்டேலா தடைசெய்யப்பட்ட ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் தலைவராக 27 வருடகாலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். மண்டேலாவை விடுதலை செய்து இனஒதுக்கலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான சமாதான முயற்சிகளை முன்னெடுத்தமைக்காக அவருடன் இணைந்து 1993 நோபல் சமாதானப் பரிசைப் பெற்றவரான தென்னாபிரிக்காவின் கடைசி வெள்ளையின ஜனாதிபதி எப்.டபிள்யூ.டி கிளாக் தெரிவித்திருக்கும் பிறந்த நாள் வாழ்த்துச் செய்தியில் மண்டேலாவை 20 ஆம் நூற்றாண்டின் மகத்தான தலைவர்களில் ஒருவர் என்று வர்ணித்திருக்கிறார். 90 வயதை அடைந்துவிட்டபோதிலும் மண்டேலா இன்னும் மிகுந்த துடிப்புடன் செயற்படுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. நண்பர்களினால்அன்புடன் "மடிபா' என்று அழைக்கப்படும் மண்டேலா மூன்று மன்றங்களின் (ஊணிதணஞீச்tடிணிணண்) தலைவராக இருக்கிறார். உலகின் 50 முன்னணிப் பல்கலைக்கழகங்கள் கௌரவப்பட்டங்களை அவருக்கு அளித்திருக்கின்றன.

1999 இல் ஜனாதிபதிப் பதவியில் இருந்து இறங்கிய பின்னர் எயிட்ஸ் நோய்க்கு எதிரான பிரசாரங்களை உலகம் பூராவும் முன்னெடுத்துவரும் அவர் இன்று சர்வதேச அரங்கில் தென்னாபிரிக்காவின் ஒரு நல்லெண்ணத் தூதுவராக உலா வந்து கொண்டிருக்கிறார். மண்டேலாவைக் கௌரவித்து அண்மையில் லண்டனில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி உலகம் பூராவும் ஒளிபரப்புச் செய்யப்பட்டது. மண்டேலாவை சிறையில் இருந்து விடுதலை செய்யக் கோரி 1988 ஆம் ஆண்டிலும் லண்டனில் இது போன்ற நிகழ்ச்சியொன்று நடைபெற்றிருந்தது. 20 வருடங்களுக்குப் பிறகு நடைபெற்ற லண்டன் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மக்கள் வெள்ளம் மண்டேலா எந்தளவுக்கு மதிக்கப்படுகின்றார் என்பதற்குச் சான்றாக அமைந்தது. பிரவேசிக்கும் இடங்களையெல்லாம் பிரகாசிக்க வைக்கும் சிரிப்பும் அவரது நகைச்சுவை உணர்வும் மக்களைத் தன்பக்கம் வென்றெடுப்பதில் மண்டேலாவுக்கு இருக்கின்ற அதிவிஷேடமான ஆற்றல்களாகும்.

மண்டேலாவின் தலைமைத்துவப் பண்பின் உச்சம் என்று சொல்லக் கூடியது முதல் ஐந்து வருடப் பதவிக் காலத்துக்கு ஜனாதிபதியாக இருந்து விட்டு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென்ற ஆசை கிஞ்சித்தும் இல்லாமல் அதிகாரத்தில் இருந்து இறங்குவதற்கு அவர் எடுத்த தீர்மானமேயாகும். அவ்வாறு செய்ததன் மூலமாக அவர் தென்னாபிரிக்காவின் ஜனநாயக மாற்றம் தனியொரு தலைவரின் ஆளுமையையோ புகழையோ மையமாகக் கொண்டதாக வளராமல் தடுத்து, ஜனநாயகக் கட்டமைப்பை ஆரோக்கியமான முறையில் நிறுவனமயப்படுத்தினார். அவரது நாட்டின் ஜனநாயக நிறுவனங்களுக்கு இருக்கின்ற உறுதிப்பாடு ஆபிரிக்காவின் ஏனைய பல நாடுகளில் காணப்பட முடியாததாகும். இதற்கு சிம்பாப்வே அரசியல் நிலைவரங்கள் எடுத்துக்காட்டாகும். மிக நீண்டகாலம் பதவியில் இருந்த பின்னரும் கூட அதிகாரத்தில் இருந்து இறங்கத் தயங்கும் சிம்பாப்வே ஜனாதிபதி றொபேர்ட் முகாபேயின் நடவடிக்கைகளினால் அந்நாட்டில் அரசியல் நெருக்கடி தீவிரமடைந்திருக்கிறது. சிம்பாப்வேயில் தலைமைத்துவம் கவலைக்குரிய வகையில் தோல்வி கண்டிருக்கிறது என்று மண்டேலா அண்மையில் கவலை தெரிவித்திருந்தார்.

அரசியல் நிலைவரங்கள் வேண்டிநிற்பதன் பிரகாரம் தனது செயற்போக்கை மாற்றிக்கொள்வதில் மண்டேலாவுக்கு இருந்த ஆற்றல் தென்னாபிரிக்காவில் இன ஒதுக்கலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான போராட்டத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாகும். 1960 களில் இன ஒதுக்கல் ஆட்சியாளர்கள் அடக்குமுறையை முழுவீச்சில் கட்டவிழ்த்துவிட்டபோது மண்டேலா தனது போராட்டத்தை காந்தியின் அகிம்சை மார்க்கத்தில் இருந்து ஆயுதப் போராட்டத்துக்கு மாற்றினார். பின்னர் 1990களில் மீண்டும் ஆயுதப் போராட்டத்தில் இருந்து அமைதிவழிப் பேச்சுவார்த்தை மற்றும் நல்லிணக்கப் போக்கிற்கு அவர் மாறினார். ஆனால், சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டதன் பின்னரே அவர் இதைச் செய்தார். ஆயுதப் போராட்டத்தைக் கைவிடுவதாக உறுதியளித்தால் மண்டேலாவை விடுதலை செய்வதாக 1985 இல் இன ஒதுக்கல் ஆட்சியாளர்கள் விதித்த நிபந்தனையை அவர் நிராகரித்தமை இங்கு கவனிக்கத்தக்கதாகும். அப்போது மண்டேலா ஆட்சியாளர்களிடம் கூறிய வார்த்தைகள் இவைதான் சுதந்திரமான மனிதனால் மாத்திரமே பேச்சுவார்த்தைகளில் ஈடுபட முடியும்; சிறைக் கைதிகள் ஒப்பந்தங்களில் ஈடுபட முடியாது.

நன்மையே வெல்லும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கையும் மனித குலத்தின் நல்வாழ்வு மீதான பற்றுமே மண்டேலாவின் நீடித்த புகழுக்கும் செல்வாக்கிற்கும் காரணமாகும். உலகிற்கு ஒரு தார்மீக வழிகாட்டியாக விளங்கும் மண்டேலாவின் காலத்தில் வாழ்வதென்பது நம் எல்லோருக்கும் ஒரு வரப்பிரசாதம் எனலாம். அவருக்கு எமது வாழ்த்துக்கள்!

தொண்டு செய்வதையே வாழ்வாக்கிய சிவத்தமிழ்ச்செல்வி

மனித குலத்தைத் துன்பங்களிலிருந்து விடுவிப்பதற்காகவே மண்ணில் வலம் வந்தவர் புத்தபெருமான். "ஏழைகளுக்குச் செய்யும் உதவிகள் எனக்குச் செய்யப்படுபவை' என்று இதயம் திறந்தவர் இயேசுநாதர். ஓர் அநாதை அழும்பொழுது அவன் விழிகளிலிருந்து வழியும் கண்ணீர் ஆண்டவன் கைகளில் படுகிறது என்றார் நபிகள் பெருமான்.

"காக்கைக் குருவி எங்கள் ஜாதி, கடலும் மலையும் எங்கள் கூட்டம்'என்று பிரபஞ்சத்தைப் பாரதியின் பாதையில் பேதமின்றி முழுமையாகத் தழுவிக்கொள்பவரே உண்மையான சமயத் தொண்டன். இத்துடன் சத்தியம், ஞானம், அனர்த்தம் என்னும் மூன்றின் கலைவையாகக் காட்சிதரும் கடவுளைத் தேடுதல் மட்டுமே சமயமில்லை. கதியற்றவர்களுக்குத் தொண்டு செய்வதே உயர்ந்த சமயப் பணி இத்துடன் மனிதன் பிறருக்குத் தொண்டு செய்வதற்காக பிறந்தவன் என்பது மகாவீரரின் வாக்கு.

மேலே கூறப்பட்ட வாக்கியப்படி நம் மத்தியில் வாழ்ந்து அண்மையிலே நம்மை எல்லாம் ஆறாத் துயரில் ஆழ்த்திவிட்டு பிறப்பறுத்துச் சென்றுவிட்ட தமிழ் கூறும் நல்லுலகில் மதிப்புடனும் மாட்சியுடனும் பிரகாசித்த தெய்வத் திருமகள், சிவத்தமிழ்ச்செல்வி கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டியாவார்.

மேலும், தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலயத்தின் நிர்வாகப் பணிகளுக்குப் பொறுப்பாகவிருந்து இவ்வாலயத்தின் முன்னேற்றத்திற்காக இவர் மகத்தான சேவையாற்றியுள்ளார். இத்துடன் இவர் சமயப் பணி, சமூகப்பணி, கல்விப்பணி, அறப்பணி, கலைப்பணி யாவற்றையும் மக்கள் யாவரும் வியக்கும் வண்ணம் செய்து மக்களின் மனதிலே ஓர் உதயசூரியனாக விளங்கினார். இவர் துர்க்காபுரம் மகளிர் இல்லத்தை 1982 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 3 ஆம் திகதி துர்க்காதேவி தேவஸ்தானத்தில் பன்னிரண்டு பிள்ளைகளோடு தொடங்கி இவ்வில்லம் உயர்ச்சியும் செழுமையும் அடைவதற்காக முன்னின்று உழைத்தார். மேலும், இவ்வில்ல வளர்ச்சிக்காக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழுகின்ற சைவத்தமிழ் மக்கள் நிதியுதவி, மதியுதவி, சரீரவுதவி யாவற்றையும் "மாரி பொய்ப்பினும் பாரியுள்ளவரை வாரி வழங்குவான் என்ற வாக்குக்கு அமைய சகல உதவிகளையும் செய்து அன்னையார் இவ்வில்லத்தை பிள்ளைகளுக்கு யாதொரு குறைவுமின்றி பராமரிப்பதற்காக வழிவகுத்தார்கள்.

இவ் துர்க்காபுரம் மகளிர் இல்லம் நாளொரு மேனியும் பொழுதொருவண்ணமுமாக வளர்ந்து வரும் காலத்தில் நாட்டில் ஏற்பட்ட போர்ச் சூழலினாலும் கொந்தளிப்பினாலும் செல் தாக்குதல்களினாலும் பல இன்னல்களுக்கு முகம் கொடுக்கவேண்டிய துர்பாக்கியம் ஏற்பட்டது. ஆயினும், அம்மையார் அவர்கள் தமது தளராத அஞ்சாமையினாலும் நிர்வாகத் திறமையினாலும் ஆளுமையினாலும் இறையருளினாலும் மதியூகத்தாலும் எப்பக்கமும் கோணாது இவ்வில்லத்தில் வாழுகின்ற பிள்ளைகளின் நலனையே கருத்தில் கொண்டு மகளிர் இல்லத்தை நன்கு நடத்திக் குழந்தைகளைக் காப்பாற்றினார்.

உண்மையிலேயே கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டியவர்கள் ஓர் தூய தியாகியாகவும் சிறந்த சிந்தனைச் சிற்பியாகவும் பிறர் துன்பத்திற்கு இரங்கும் கனிவும் தன்னுயிரைத் தியாகம் செய்து பிறர் துயரைத் துடைக்கத் துணியும் செயலாண்மையும்மிக்கவராக நம்மத்தியில் வாழ்ந்த ஒரு பெருமகள்! மேலும், தமிழகத்தில் வாழுகின்ற மக்களின் நாவிலே "காவேரி' ஆற்றின் நாமம் நிலைத்து நிற்பதுபோல யாழ். குடாநாட்டில் வாழுகின்ற சைவத் தமிழ் மக்களின் மனதிலும் கொழும்பு வாழ் சகல சமூக மக்களின் மனதிலும் இவரின் தங்கம்மா நாமம் என்றும் நிலைத்து நிற்கின்றது.

உலகிலே தமக்கென வாழாது பிறர்க்கென வாழ்வோர் ஒரு சிலரே. இத்தகையோராலேயே உலகம் நிலை பெற்றுள்ளது என ஆன்றறிந்த அறிவினையுடையோர் கூறுவர். பண்புடையோர் பட்டுண்டுலகம் அது விண்மேல் மாண்புக்கு மாய்வது மண் என்ற குறளுக்கு அமைய தன்னுடைய கஷ்ட, துன்பங்களைப் பாராது தன்னை நாடிவந்த மக்களின் துன்பங்கள், துயரங்கள் யாவற்றையும் நீக்கி வள்ளலார் கூறியது போல "வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம்' நான் வாடினேன் என்ற வாக்கு அமைய வாழ்ந்து காட்டினார் அன்னை தங்கம்மா அப்பாக்குட்டியவர்கள்.

கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டியவர்கள் "யான் எல்லாம் வல்லேன்' என்றெண்ணிய தாயுமில்லை, சொல்லியதாயுமில்லை.'ஆனால், அவைகள் யாவும் அவருடைய துணிந்த நடையாலும் பணிந்த மொழியாலும் பிரதிபலிக்கக்கூடியதாக அமைந்திருந்தது. மேலும், இறையியல் மேதை "உவில்லியம்' கூறியது போல "இறைவனிடமிருந்து உன்னதமானவற்றை எதிர்பார், இறைவனுக்காக உன்னதமானவற்றை' எத்தணி' என்ற கருத்திற்கு அமைய தம் வாழ்க்கை ஓட்டத்தை திறம்பட ஓடி முடித்தார்.

மேலும், தெய்வத்திருமகள், சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியவர்கள் சீலம், நோன்பு, செறிவு, அறிவு என்னும் நால்வகை நெறியில் நயம்படவாழ்ந்து நல்லோர் போற்ற விளங்கினார். "அன்புடையார் என்பு உரியர் பிறர்க்கும்' என்ற குறள் நெறிக்கு அமைய எல்லோர்க்கும் இனியவளாய், வல்லவளாய், வளம் நலமிக்கவளாக எம்மத்தியில் வாழ்ந்த தெய்வப் பெருமகள் தான் தங்கம்மா அப்பாக்குட்டி அம்மையார் அவர்கள். உண்மையிலேயே கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டியின் மறைவு சைவ உலகிற்கு மாபெரும் இழப்பாகும். சமயத்தையும் சமூகத்தையும் நல்வழியில் இட்டுச்செல்வதே இந்து மதத்தின் அடிப்படைத் தத்துவம் என்பதை தனது செயலால் நிரூபித்துக்காட்டியவர் அம்மையார் என்பதை உலக சைவப் பேரவை (இலங்கைக் கிளை) நன்கு அறியும்.

இத்துடன், அம்மையாரின் ஆலோசனைகளை உலக சைவ பேரவை (இலங்கைக்கிளை) நன்கு மதித்து ஆக்கபூர்வமான பல பணிகளைத் திறம்படச் செய்துள்ளது என்பதை இவ்விடத்தில் குறிப்பிட வேண்டும். மேலும், வடபுலத்தில் இன்றைய பல்வேறு நெருக்கடிகள் மத்தியில் சற்றும் சளைக்காது தனது இறுதி காலம் வரை மனம், வாக்கு, காயம் என்ற திரிகரண சுத்தியுடன் தொண்டுசெய்த சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டியின் சேவைகள் காலத்தால் அழியாதனவாக உயர்ந்த இலட்சியங்களையும் சிந்தனைத் தெளிவையும் செயலாற்றும் திறனையும் பெற்றிருந்த அன்னையார் தன் வாழ்க்கையில் சந்தித்த இடர்கள், பிரச்சினைகள் பல அவற்றையெல்லாம் புன்னகையுடன் எதிர்கொண்டு வெற்றி கண்டாரெனில் அதன் இரகசியம் அவர் தம் வாழ்வில் கைகொண்ட அமைதி நிறைந்த தூய்மையான இறை பக்தியேயாகும்."கருமம் செய், பலனை பகவானுக்கே விட்டுவிடு' என்று கர்மயோகத் தத்துவமே அவர் வாழ்வு அவர் வெற்றி.

அன்னையாரின் சைவப் பண்புக்கும் தகைமைக்கும் என்னிடம் அவர் காட்டிய அன்புக்கும் அவரின் மறைவை ஒட்டி பின்வரும் கண்ணீர் அஞ்சலியை செலுத்தவுள்ளேன்.

"அகம் நிறைந்து எழுந்திடும் அன்பினாலே முகம் மலர்ந்து ஒளிர்ந்திடும் தெய்வத் திருமகள் தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களே, நாம் இனிச் செய்வதை அறியோம், இல்லை என்கிற சொல்லை அறியாப் பொன்மனச் செல்வியே, எங்கு நீ போயினை! உமது பிரிவை எங்ஙனம் ஆற்றுவோம்' என சைவத் தமிழ் உலகு ஏங்குகிறது.

வங்கியின் குளறுபடியால் கோடீஸ்வரனான சிறுவன்

பிரிட்டனைச் சேர்ந்த சிறுவனின் வங்கிக் கணக்கில் திடீரென்று கோடிக்கணக்கான ரூபா சேர்ந்ததையடுத்து அச்சிறுவன் திடீர் கோடீஸ்வரனாகி உள்ளான். சிறுவனின் கணக்கில் இந்தப் பணம் எப்படிச் சேர்க்கப்பட்டது என்பதற்கான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குறிப்பிட்ட வங்கி உத்தரவிட்டுள்ளது.

பிரிட்டனில் மாணவர்கள் பாடசாலைகளிலிருந்து விலகாமல் தொடர்ந்து கல்வியைத் தொடருவதற்காக குறிப்பிட்ட தொகைப் பணம் அரசின் கல்வி நிதியாக வழங்கப்படுகிறது.

லண்டனிலுள்ள தோமஸ் டெல்போர்ட் பாடசாலையில் படித்துவந்த வில்லியம் போவன் (வயது 16) என்ற மாணவன் தனது வங்கிக் கணக்கில் வாராந்த கல்வி நிதி சேர்க்கப்பட்டு இருக்கின்றதா என்று பணம் மீளப்பெறும் (ஏ.டி.எம்) இயந்திரத்தில் சரிபார்த்தான்.

அப்போது, அவனது வங்கிக் கணக்கில் 46 கோடி ரூபா சேர்க்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதுவும் அரசு அளித்த நிதியாக இருக்கும் என்று கருதி வில்லியம் போவன், உடனடியாக 75 ஆயிரம் ரூபா எடுத்தான். அந்தப் பணத்தை தனது நண்பர்களுடன் இஷ்டம் போல செலவு செய்தான்.

இது குறித்து அவன் தனது தாயிடம் தெரிவிக்கவே, அவர் அதிர்ந்து போனார். வங்கியிடம் விளக்கம் கேட்டபோது, வில்லியம் போவன் கணக்கில் தவறாக பணம் சேர்க்கப்பட்டது தெரியவந்தது. அந்தப் பணம் எந்த கணக்கில் செலுத்தப்பட வேண்டிய பணம் என்பதும் தெரியவில்லை. இதுகுறித்து வங்கி நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

மீண்டும் காதல் வலையில் வோர்ன்

அவுஸ்திரேலிய சுழல் ஜாம்பவான் ஷேன் வோர்ன் மீண்டும் காதல் வலையில் சிக்கியுள்ளார்.

வோர்ன் காதல் சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வது வழக்கம். 2000 இல் நேர்ஸ் ஒருவர் வோர்ன் தன்னிடம் போனில் காதல் வார்த்தைகள் பேசி தொந்தரவு செய்வதாக புகார் கொடுத்தார். லண்டன் ஹோட்டல் ஒன்றில் தன்னிடம் வோர்ன் தகாத முறையில் நடந்து கொண்டதாக இளம் பெண் ஒருவர் பகிரங்க குற்றம் சாட்டினார்.

ஹெலன் என்ற தென் ஆபிரிக்க பெண்ணும் இதே புகாரை 2003 இல் கொடுத்தார். கெரிஎன்ற பெண்ணுக்கும் ஆபாச எஸ்.எம்.எஸ்.அனுப்பியது அம்பலமானதால் மனைவி சிமோனின் வெறுப்பை சம்பாதித்த வோனின் மண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தது.

இந்நிலையில் ரி.வி. தொகுப்பாளர் கெல்லியுடன் தற்போது காதல் வசப்பட்டுள்ளார். இது பற்றி கெல்லியின் தந்தை கூறுகையில்; என் மகளின் தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட விருப்பமில்லை. அவர் வோர்னுடன் பழகுவது பற்றி தெரியாது என்றார்.

விளையாட்டுத் துறையில் பரிசுத் தொகைகள் மூலம் முதல் பில்லியனராக மாறிவிட்ட டைகர் வூட்ஸ்

விளையாட்டுத் துறையில் கிடைக்கும் பரிசுத் தொகையைக் கொண்டு உலகளவில் முதல் பில்லியனராக (1 பில்லியன் = 100 கோடி) மாறிய விளையாட்டு வீரர் என்ற பெருமையை கோல்ப் வீரர் டைகர் வூட்ஸ் பெறவுள்ளார்.
உலகப் புகழ் பெற்ற இதழான "போர்ப்ஸ்' அதிகம் சம்பாதித்த வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் டைகர் வூட்ஸ் முதலிடம் பிடித்துள்ளார். 2007 ஆம் ஆண்டில் மட்டும் இவர் விளையாட்டின் மூலம் பெற்ற தொகை 115 மில்லியன் டொலர்.

இவருக்கு அடுத்த இடத்தில் இங்கிலாந்து கால்பந்தாட்ட வீரர் டேவிட் பெக்காம் (65 மில்லியன் டொலர்) இடம் பெற்றுள்ளார்.

டைகர் வூட்ஸ் விளையாட்டுத் துறையில் கால்பதித்த பின்னர், விளம்பரங்களில் நடித்ததன் மூலம் மட்டும் 750 மில்லியன் டொலர் ஈட்டியுள்ளார். தற்போது 32 வயதாகும் டைகர் வூட்ஸ், இதுவரை 50 கோல்ப் தொடர்களில் பங்கேற்றுள்ளார். இதன்மூலம் மிகக் குறைந்த வயதில் அதிக போட்டித் தொடர்களில் பங்கேற்ற வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

இதேபோல் சாம்பியன்ஷிப் பட்டங்களை கைப்பற்றுவதிலும் விரைவில் அவர் உலக சாதனை படைக்கவுள்ளார். இதுவரை 14 சாம்பியன்ஷிப் பட்டங்களை பெற்றுள்ள வூட்ஸ், ஜேக் நிக்கோலாஸ் சாதனையை (18 பட்டங்கள்) நிச்சயம் முறியடிப்பார் என கோல்ப் பார்வையாளர்கள் ஆணித்தரமாக நம்புகின்றனர்.

உலகளவில் மிகவும் ரசிக்கப்படும் நபரான வூட்ஸ், கோல்ப் போட்டிகளில் விளையாடும் போது அதை ஒளிபரப்பும் ரி.வி. நிறுவனத்தின் புகழ் 3 மடங்கு உயர்கிறது. சமீபத்தில் சான்டியாகோவில் நடந்த யு.எஸ்.ஓப்பன் கோல்ப் சாம்பியன்ஷிப் பட்டத்தை வூட்ஸ் கைப்பற்றிய போது உலகெங்கிலும் பலர் அதை ரி.வி.யில் பார்த்து மகிழ்ந்தனர்.

தொடர்ந்து புகழ்பெற்று வரும் வூட்ஸ், 2010 ஆம் ஆண்டில் ஒரு பில்லியன் டொலருக்கு சொந்தக்காரராகிவிடுவார் என்று "போர்ப்ஸ்' இதழ் கணித்துள்ளது.

2007 ஆம் ஆண்டு மட்டும் 1479 கோடி ரூபா வருவாய் ஈட்டியுள்ளார் வூட்ஸ். விளம்பரங்களில் நாயகனாகப் பார்க்கப்படும் டைகர் வூட்ஸ், அதனால் மட்டும் இதுவரை 9350 கோடி ரூபாவை வருவாயாகப் பெற்றுள்ளார். அவர் பங்கேற்கும் விளம்பரத்தால் கம்பனிகளும் கோடிக்கணக்கில் இலாபமடைந்து வருகின்றன. அவரை ஒப்பந்தம் செய்துள்ள நைக் நிறுவனம் கடந்த ஆண்டு மட்டும் 7560 கோடி ரூபாவுக்கு பொருட்களை விற்பனை செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

எனக்கு நான்தான் போட்டி

"எனது மனதைக் கவர்ந்தது மைக்கேல் ஜாக்ஸனின் இசையும் ஸ்டைலும்தான்" என்றார் ஏ.ஆர்.ரஹ்மான்.

இதுபற்றி அவர் கூறியதாவது:

ஒவ்வொரு படத்திலும் முத்திரை பதிக்க வேண்டும் என்று எண்ணுவேன். யாருடனும் நான் போட்டிப் போடவில்லை. எனக்கு நான்தான் போட்டி. ஒவ்வொரு முறையும் என் இசையில் முன்னேற்றம் செய்கிறேன்.

பொதுவாக சொந்த குரலில் பாட வேண்டும் என்று எண்ணுவதில்லை. பாட வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அதிர்ஷ்டவசமாக அது ஹிட்டாகி விடுகிறது. பாடுவதற்கு என்னதான் சுதந்திரம் இருந்தாலும் அதற்காக எனது உழைப்பை குறைத்துக் கொள்வதில்லை.

சர்வதேச அளவில் புகழ்பெறுவதற்கு எந்த அக்கறையும் எடுத்துக் கொள்வதில்லையே என்கிறார்கள். எதற்காக அக்கறை எடுக்க வேண்டும்?. நான் அமைக்கும் இசை சில நேரம் உலகதரத்துக்கு அமைகிறது. அதற்காக பிரத்யேகமாக கவனம் எடுப்பதில்லை. இந்தியாவில் பாப்புலராக இருப்பதில் சந்தோஷம்.

இங்கு சில மாற்றங்களுக்கு நானும் காரணமாக இருக்கிறேன். நமது துறை பெரிய அளவில் சிறப்பான முன்னேற்றம் கண்டிருக்கிறது. இசை அமைப்பதில் ஆர்வம் அதிகரித்திருக்கிறது. படைப்பாளிகளும் வித்தியாசமான முயற்சியில் ஈடுபடுகின்றனர். இங்கு வாழ்வதும், பணிசெய்வதும் வரப்பிரசாதம். மைக்கேல் ஜாக்ஸனின் இசையும், ஸ்டைலும் என்னை பெரிதும் கவரும். அவருடைய இசையை ரசிப்பதை மிகவும் விரும்புகிறேன்.

இவ்வாறு ஏ.ஆர்.ரகுமான் கூறினார்.

கல்லிலே கலைவண்ணம்

கம்போடியாவின் நாம்பென் நகரில் இருந்து 245 கி.மீ. தொலைவில் உள்ளது பரேக் விகார் மாநிலம். அங்கு பரேக் விகார் என்ற 11ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட, புராதன பெருமை பெற்ற கோயில் உள்ளது. தஞ்சையை ஆண்ட மன்னன் ராஜராஜன் காலத்தில் படைகளுடன் சென்றவர்கள் அங்கேயே தங்கிவிட்டதாகச் சொல்வார்கள்.

தமிழகக் கோயில்கள் சாயலில் கட்டப்பட்ட தாய்லாந்து எல்லையை ஒட்டி அமைந்துள்ள இதை உலக முக்கிய சின்னமாக அறிவிக்க கம்போடிய அரசு ஆதரவு திரட்டி வருகிறது. இதுவரை அதன் திட்டத்தை ஆதரித்த தாய்லாந்து, இப்போது தனது முடிவைக் கைவிடுவதாக அறிவித்துள்ளது. கலைநயங்களுடன் சிதிலமடைந்து நிற்கும் கோயில் இது.