பாதுகாப்பாக இணையதளத்தை பயன்படுத்துவது எப்படி?

முதலில் சிறந்த பாதுகாப்பான Anti-virus உங்கள் கணிப்பொறியில் நிறுவிக்கொள்ளுங்கள் , வாரம் இருமுறை உங்கள் கணினியை scan செய்யுங்கள்.

விண்டோஸ் பயன்படுத்துவதை விட Linux OS (UBUNDU,SUSE,MANDRIVA) நிறுவிக்கொள்ளுங்கள் வைரஸ் பாதிப்பை பெருமளவில் தவிர்க்கலாம் அல்லது இரண்டையும்கணினியில் நிறுவி இணையதள பயன்பாட்டுக்கு Linux பயன்படுத்தலாம்.

பெரும்பாலான வைரஸ் கள் விண்டோசை குறிவைத்து உருவக்கபடுவதே இதற்க்கு காரணம்.Linux ஸை வைரஸ் அவ்வளவு எளிதில் பாதிக்காது. அப்படி பதித்தாலும் எளிதில் அகற்றிவிடலாம்.

கணினியில் Internet Explorer இருந்தாலும் கூடுதலாக ஒரு Firefox அல்லது Google crome Browser நிறுவிக்கொள்ளுங்கள் ஏனெனில் மேற்கூறிய காரணம் இதற்கும் பொருந்தும்.

இணையதள முகவரியை டைப் செய்யும்போது கவனமாக செய்யுங்கள் ஏனென்றால் பிரபல தளத்தின் முகவரியில் ஓரிரு எழுத்துக்கள் மட்டும் மாற்றி வைத்திருப்பார்கள் அவ்வாறு செல்லும்போது வைரஸ் பதிப்பை உண்டக்கிவிடுவார்கள்.

கேம்ஸ் டவுன்லோட் செய்யும்போது மிகுந்த கவனம் தேவை ,பாதுகாப்பான (Brothers soft,cnet) போன்ற இணைய தளங்களில் மட்டும் Download செய்யுங்கள் , பெரும்பாலான இணையதளங்கள் இலவசம் என்ற பெயரில் வைரஸ் இணைத்து விடுவார்கள், மேற்கூறிய தளங்களில் இவை நிகழ்வதில்லை.

POP UP விளம்பரங்கள் Click here என்று வந்தால் அவற்றை கிளிக் செய்யவேண்டாம் .

புது software ,games போன்றவற்றை டவுன்லோட் செய்யும் முன் அவற்றின் முழு விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள் , குறிப்பாக இன்ஸ்டால் செய்யும் போது Agreement எவ்வளவு பெரியதாக இருந்தாலும் முழுவதும் படித்துவிட்டு instaal செய்யுங்கள்.
Community Websites செல்லும்போது மிகுந்த கவனமாக இருங்கள் தற்ப்போது அவற்றில் இருந்துதான் மிக அபாயகரமான வைரஸ்கள் வருகின்றன .

இணையத்தளத்தில் Social Engineering Techniques எனப்படும் இணையதள உபயோகிப்பாளர்களின் weakness ஆபாச படங்கள், கண்கவரும் படங்கள், illegal copy of softwares,flashanimations, love ,sex,success contents போன்றவற்றை அதிகம் விரும்புவார்கள் என்பதை தெரிந்து கொண்டு அதற்கேற்ப வைரஸ்களை உருவாக்கி அத்துடன் இணைத்து விடுகின்றனர் .இதுதான் தற்போதைய வைரஸ் பரப்பும் புதிய தொழில்நுட்பம் .

இவற்றை தெரிந்து இணையத்தளத்தில் பாதுகாப்பாக கணினியை பயன்படுத்தலாம் .

கூகுலின் புதிய சேவை

எத்தனை நாளுக்கு தான் கூகுலும் நாளிதழ்களின் விரோதி என்னும் புகாரையும் விமர்சனத்தையும் கண்டும் காணாமல் இருக்க முடியும்.அது தான் நாளிதழ்களின் நண்பனாக தன்னை காட்டிக்கொள்ளும் புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது.

‘பாஸ்ட்பிலிப்’ என்னும் பெயரிலான இந்த சேவை நாளிதழ் செய்திகளை விரைவாகவும் சுலபமாகவும் படிக்க உதவுவதாக கூகுல் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதாவது பத்திரிக்கைகளை புரட்டி பார்ப்பது போலவே இந்த சேவையின் மூலம் செய்திப்பக்கங்களை புரட்டி பார்த்து படிக்க முடியும் என கூகுல் கூறுகிறது.

இந்த செய்தி சேவைக்ககாக கூகுல் நியூயார்க் டைம்ஸ்,வாஷிங்டன் டைம்ஸ் உள்ளிட்ட பிர‌ப‌ல‌ செய்திதாள் நிறுவ‌ன‌ங்க‌ளோடு ஒப்ப‌ந்த‌ம் செய்து கொண்டுள்ள‌து.

கூகுல் ஏற்க‌ன‌வே கூகுல் நியூஸ் என்னும்பெய‌ரில் செய்தி சேவையை வ‌ழ‌ங்கி வ‌ருகிற‌து.இந்த‌ சேவை பிர‌ப‌ல‌மாக‌ இருந்தாலும் நாளித‌ழ் நிறுவ‌ன‌ங்க‌ளால் க‌டுமையாக‌ விம‌ர்சிக்க‌ப்ப‌ட்டு வ‌ருகிற‌து.த‌ங்க‌ள் செய்திக‌ளை எடுத்து வெளியிட்டு கூகுல் விள‌ம்ப‌ர‌ம் மூல‌ம் காசு பார்ப்ப‌தாக‌ நாளித‌ழ்க‌ள் சார்பில் குற்ற‌ஞ்சாட்ட‌ப்ப‌டுகிற‌து.
பொதுவாக‌வே நாளித‌ழ்க‌ளுக்கு இது சோத‌னையான‌ கால‌ம் தான்.இண்டெர்நெட்டின் போட்டி கார‌ண‌மாக‌ நாளித‌ழ்க‌ளின் வ‌ருவாய் பாதிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. இந்நிலையில் கூகுலின் செய்தி சேவையை ஒரு சுர‌ண்ட‌லாக‌வே நாளித‌ழ்க‌ள் பார்க்கின்ற‌ன‌.த‌ங்க‌ள் உழைப்பை உறிஞ்சித்தின்னும் ஒட்டுண்ணி என்று வால் ஸ்டிரீட் ஜ‌ர்ன‌ல் ஆசிரிய‌ர் ச‌மீப‌த்தில் காட்ட‌மாக‌வே கூறியிருந்தார்.

இந்த‌ பின்ன‌ணியில் தான் கூகுல் பாஸ்ட்பிலிப் செய்தி சேவையை அறிமுக‌ம் செய்துள்ள‌து.கூகுல் செய்தி சேவைக்கும் இதற்கும் அடிப்படையிலேயே வித்தியாச‌ம் உள்ள‌து.பாஸ்ட்பிலிப் சேவையில் செய்தி ப‌க்க‌ங்க‌ள் புகைப்ப‌ட‌ம் போல‌ ஒவ்வொன்றாக‌ கிளிக் செய்வ‌து போல அமைந்திருக்கிற‌து.ஒவ்வொன்றாக‌ கிளிக் செய்தால் ப‌டித்துக்கொண்டே போகலாம்.

இர‌ண்டு கார‌ண‌ங்க‌ளுக்காக‌ கூகுல் இவ்வாறு செய்துள்ள‌து.ஒன்று வ‌ழ‌க்க‌மான‌ செய்தி இணைப்பை காட்டிலும் இப்ப‌டி கிளிக் செய்யும் போது ப‌த்திரிக்கையை புர‌ட்டும் உண‌ர்வை பெற‌ முடியும்.அதைவிட‌ முக்கிய‌மாக‌ ப‌க்க‌ங்க‌ள் ட‌வுண்லோடு ஆவ‌தும் விரைவாக‌ இருக்கும்.

செய்தி த‌ள‌ங்க‌ளுக்கு செல்லம் போது குறிப்பிட்ட ப‌க்க‌ங்க‌ள் ட‌வுண்லோடு ஆவ‌து தாம‌தாவ‌தே இணைய‌வாசிக‌ள் அதிக‌ நேர‌ம் செய்தி த‌ள‌ங்க‌ளில் த‌ங்காத‌த‌ற்கான‌ கார‌ண‌மாக‌ க‌ருத‌ப்ப‌டுகிற‌து.மாறாக‌ புர‌ட்டிப்பார்க்கும் வ‌ச‌தியோடு விரைவாக‌ ப‌டிப்ப‌து சாத்திய‌மானால் இணைய‌வாசிக‌ள் அதிக‌நேர‌ம் செல‌விடுவார்க‌ள் என்று கூகுல் எதிர‌பார்க்கிற‌து.இத‌னால் அதிக‌ விள‌ம்ப‌ர‌ங்க‌ளை வெளியிட‌ முடியும்.

செய்தி சேவையில் கூகுல் விள‌ம்ப‌ர‌ வ‌ருவாயை தானே வைத்துக்கொண்டாலும் பாஸ்ட்பிலிப் சேவையில் வ‌ருவாயை நாளித‌ழ்க‌ளோடு ப‌கிர்ந்து கொள்ள‌ முன்வ‌ந்துள்ள‌து.அதாவது இணைந்து சம்பாதிப்போம் என கூகுல் நாகிதழ்களோடு கைகோர்த்துள்ளது.

ப‌த்திரிக்கைகளை ப‌டிக்கும் அனுப‌வ‌த்தையும் வ‌ச‌தியையும் இண்டெர்நெட் தொழில்நுட்ப‌த்தோடு இணைந்துத‌ரும் வ‌ச‌தியாக‌ கூகுல் இத‌னை வ‌ர்ணித்துள்ள‌து.

இந்த‌ சேவை வெற்றி பெற்றால் நாளித‌ழ்க‌ளுக்கு வ‌ருவாய் வ‌ருவ‌தோடு கூகுல் மீதான‌ விம‌ர்ச‌னமும்,கோபமும் குறையும்.

பிராண வாயு தோன்றுவதற்கு முன்பே உயிரினங்கள் இருந்தன

பூமியில் பிராண வாயு தோன்றுவதற்கு 200மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னரே கடல்களில் உயிரினங்கள் வாழ்ந்ததாக புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

பூமியின் வரலாற்றில் 'ஆர்ச்சியன்' காலக் கட்டம் என்று அழைக்கப்படும் காலத்தில் விஷ வாயுக்களான மீத்தேன், அம்மோனியா மற்றும் பிற விஷ வாயுக்களே இருந்தன. இதனால் இந்தக் காலக்கட்டங்களில் உயிரினங்கள் இருந்திருக்க வாய்பே இல்லை என்றுதான் இது நாள் வரையிலான ஆய்வுகள் தெரிவித்து வந்தன.

தற்போது நியூஜெர்சியில் உள்ள ரட்ஜர்ஸ் பல்கலைக் கழகத்தின் புதிய சர்வதேச ஆய்வுக் குழு, பூமியில் சுவாசிப்பதற்கான வாயு இல்லாத காலக் கட்டத்திலும் தாவரம் போன்ற பாக்டீரியாக்கள் இருந்ததாக கண்டு பிடித்துள்ளனர்.

தென் ஆப்பிரிக்காவின் 2 அல்லது 3 பில்லியன் ஆண்டுகள் பழைமையான கடலடி பாறைகளின் மீதங்களை வைத்து நடத்திய ஆய்வில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நைட்ரஜன் சுழற்சியின் ரசாயன ஆதாரங்கள் இதனை நிரூபித்துள்ளதாக கூறும் இந்த ஆய்வு, பிராண வாயு இல்லாமல் இருந்திருந்தால் இது நடக்க வாய்ப்பேயில்லை என்று கூறியுள்ளது.

வாழும் உயிரிகள் நைட்ரஜன் சுழற்சியைப் பெற்று மேலும் சிக்கலான இயற்கை மூலக் கூறுகளை உற்பத்தி செய்துள்ளது.

இந்த நைட்ரஜன் சுழற்சியின் இருப்பு பூமியில் பிராண வாய்வு தோன்றுவதற்கு முன்பே உயிரினங்கள் இருந்ததற்கான சுவடு என்று இந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒளி இயைபாக்க (Photo Synthesis) நடவடிக்கை மூலம் பிராண வாயுவை ஒரு துணைப்பொருளாக உற்பத்தி செய்த உயிரிகள் சுமார் 2.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர்தான் தோன்றியுள்ளன என்று கூறும் இந்த ஆய்வாளர்கள், அதன் பிறகு 200 மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகே வளி மண்டலத்தை பிராண வாயு செறிவூட்டியது என்று கூறியுள்ளனர்.

"நைட்ரஜன் ஒப்பு நோக்கி பார்க்கப்படும்போது, ஒரு அசையா மூலக்கூறும், அதன் வளிமண்டல ஆயுள் ஒரு பில்லியன் ஆண்டுகள்" என்கிறது இந்த ஆய்வு.

மாறாக பிராண வாயு உற்பத்திக்கான ஒளி இயைபாக்கம் தொடர்ச்சியாக நடைபெறும் ஒரு நடவடிக்கையாகும்.

இருப்பினும் பூமியில் எப்போது பிராண வாயு ஒளி இயைபாக்கம் தொடங்கியது என்பது இன்னமும் புரியாத புதிராகவே உள்ளது என்று இந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மனதைப் படிக்கும் மூளை துளை
மூளை சொல்ல நாம் செய்து கொண்டிருக்கும் வேலைகள் தான் எல்லாமே இல்லையா? மூளையிலிருந்து புறப்படும் எண்ண அலைகள் தான் நம்முடைய எல்ல செயல்களுக்கும் காரணம் என்பது நமக்கு தெரிந்த உண்மையே! மூளை என்னதான் கட்டளை அனுப்பினாலும் அதை உள் வாங்கி செயல்படுத்த நம்முடைய மற்ற உறுப்புகள் ஒத்துழைத்தால் தான் எல்லா வேலைகளும் சரியான முறையிலே நடை பெறும். ஒரு வேலை அப்படி அந்த கட்டளைகளை செயல் படுத்த கூடிய உறுப்புகள் செயல் இழந்து விட்டால்???

இந்த கேள்வி குறிக்கான விடை தான் இந்த அரிய அறிவியல் சாதனை - பன் தொடர்பு மூளை துளை. பக்கவாதம் வந்தோர், கழுத்துக்கு கீழே செயல் இழந்தவர்கள் இவர்களுக்கு உதவியாக இந்த சாதனம் கண்டுபிடிக்க பட்டுள்ளது. இது இன்னும் சோதனை நிலைமையில் தான் உள்ளது. என்னதான் பண்ணுவான் ஒரு மனுஷன் இந்த மாதிரி ஆயிடுச்சேன்னு புலம்ப தேவை இல்லை. இந்த கருவியின் உதவியுடன் அப்படி பாதிக்கப்பட்ட மக்கள் நம்மை போல எல்லவற்றையும் செய்ய முடியும் என்று நம்பிக்கை தெரிவித்து உள்ளார்கள் வல்லுனர்கள்.

ஏன், எப்படி இது சாத்தியம் என்று வந்து குவியும் கேள்விகளுக்கான பதில் இதோ!!!

உடல் உறுப்புகள் கழுத்துக்கு கீழே செயல் இழந்து விட்டாலும், மூளை உறுப்பகளுக்கு கட்டளைகளை அனுப்புவதை நிறுத்துவதில்லை. ஆனாலும் கை கால்கள் வேலை செய்வதில்லை. அப்படியே அந்த கட்டளைகள் நின்று விடும், அதனால் கை கால்கள் வேலை செய்வதில்லை. உலகத்தில் இருக்கின்ற பல சோதனை குழுக்கள் இந்த மூளை கட்டளைகளை வைத்து இப்படி கை கால் வேலை செய்யாதவர்களுக்கு உதவியாக ஏதாவது ஒரு சாதனத்தை உருவாக முயற்சி செய்து வருகின்ற வேலையில் தான் டாக்டர்.ஜான் ஸ்பார்ட்லீயின் கருவி உதவியாய் இருக்கும் என்று அனைவரும் கருத்து தெரிவித்து உள்ளனர்.

முனைவர் பட்டத்துக்கான ஆராய்ச்சியில் டாக்டர்.ஜான் ஸ்பார்ட்லீ ஈடுப்பட்டிருந்த தருணத்தில் தான் அவர் பன் தொடர்பு மூளை துளைக்கான அச்சு அசலான ஒரு கருவியை உருவாகி உள்ளார். இதை மூளையில் எந்த இடத்தில் கட்டளைகள் பிறக்கின்றனவோ அந்த இடத்தில் ஊசி மூலமாக செலுத்தலாம் என்று கண்டுப்பிடித்துள்ளார். இவர் இதை பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் கண்டுப்பிடித்துள்ளார்.

நரம்பு அமைப்பு வழியாக தண்டுவடத்துக்கு செல்லும் இந்த கட்டளைகளை மூளை திசுக்கள் வழி எடுத்து அதை வைத்து கொண்டு உடல் தசைகளை இயக்க எத்தனித்து உள்ளனர். இந்த உணர்வீ யை மூளையில் ஊசி வழி செலுத்தி விட்ட பிறகு அதன் 50 சிறிய கூர்முனை ஈட்டிகள் நரம்பணுக்களுடன் சேர்க்கப் பட்டு விடுகின்றன. அதற்குப் பிறகு 4 சிRஇய கம்பிகள் அந்த வழியே ஏதேனும் அலைகள் வருகின்றனவா என்று பார்த்து, அப்படி வந்தால், அவற்றை கம்பியில்லா முறையில், மூளையில் ஊசி வழி ஏற்படுத்திய தடய நிலையத்துக்கு அனுப்பி வைக்கின்றன.

பின்னர் அவை வெளியில் இருக்கின்ற நிலையத்துக்கு அனுப்பி வைக்க பட்டு பல இயந்திரங்களை இயக்க முடியும் என்பது ஜானின் எண்ணம்.

இந்த முயற்சியை அவர் மனிதர்கள் மீது இன்னமும் செய்து பார்க்க வில்லையாம். மூளை திசுக்களை மட்டும் வைத்து செய்து இருக்கின்றார்.

கூகுளிற்கு வயது பதினொன்று...!!!

செப்டம்பர் 7ல் கூகுள் தன் பதினோராவது ஆண்டை முடித்து 12 ஆவது ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளது. 1998ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 7ம் திகதி கூகுல் தனது முதலாவது பிறந்த நாளை கொண்டாடியது.

கூகுள் எர்த் மற்றும் மேப்ஸ் மூலம் ஆகாயத்தில் அடி எடுத்து வைத்து தகவல் தொழில் நுட்ப உலகில் இன்று இன்னும் உயர உயரச் செல்லும் இந்நிறுவனத்தின் வளர்ச்சி இளைய தலைமுறை எப்படி உழைக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக் காட்டாய் விளங்குகிறது. இதனுடைய வளர்ச்சியைக் காணலாம்.

1995

லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் (Larry Page and Sergey Brin) ஸ்டான் போர்டு பல்கலைக் கழகத்தில் சந்தித்து கலந்தாய்வு செய்கின்றனர்.

1996

பேஜ் மற்றும் பெரின் பேக்ரப் என்னும் சர்ச் இஞ்சினை வடிவமைக்கின் றனர். இணைய தள லிங்க்குகளை இது ஆய்வு செய்து தகவல்களைத் தெரிவிக் கிறது. இதன் பின் கூகுள் முதல் பதிப்பு ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தின் வெப்சைட்டில் வெளியிடப்படுகிறது.

1997

கூகுள். காம் பதிவு செய்யப்படுகிறது. சன் நிறுவனத்தை நிறுவியவர்களில் ஒருவரான ஆண்டி (Andy Bechtolsheim ) கூகுள் நிறுவனத்தில் ஒரு லட்சம் டாலர் முதலீடு செய்கிறார். கூகுள் கார் ஷெட் ஒன்றில் தன் முதல் பணி மையத்தை அமைக்கிறது. அடுத்த செப்டம்பர் 7ல், அதன் முதல் பிறந்த நாளில், கூகுள் அறிந்தேற்பு பெறுகிறது.

1999

கூகுள் நிறுவனம் தொழிலில் வர்த்தக ரீதியாக புது முயற்சி செய்பவர்களுக்கான முதலீடு 2 கோடியே 50 லட்சம் டாலர் பெறுகிறது. 8 ஊழியர்களுடன் முழுமையான ஓர் அலுவலகத்தினை மவுண்ட்டன் வியூ என்ற இடத்தில் அமைக்கிறது.

2000

குகூள் முதன் முதலாக அட் வேர்ட்ஸ் என்னும் விளம்பரப் பிரிவினை அமைக்கிறது. யாஹூ கூகுள் சர்ச் இஞ்சினைத் தன் தேடல் சாதனமாக அமைத்துக் கொள்கிறது. பத்து மொழிகளில் கூகுள் வெளிவருகிறது. உலகின் மிகப் பெரிய வேகமான தேடல் சாதனமாக கூகுள் இடம் பிடிக்கிறது.

2001

கூகுள் நிறுவனத்தின் தலைவராக எரிக் ஸ்மித் ஆகிறார். பேஜ் மற்றும் பிரின் தயாரிப்பு மற்றும் தொழில் நுட்பம் ஆகிய இருபிரிவுகளுக்கு ஒவ்வொருவரும் தலைவராகின்றனர். கூகுள் தேஜா. காம் நிறுவனத்திலிருந்து 1995 ஆண்டிலிருந்து வெளியான 50 கோடி தகவல்களைப் பெறுகிறது.

2002

கூகுள் லேப்ஸ், கூகுள் நியூஸ் (4000 செய்தி தொடர்பு களுடன்) மற்றும் ப்ரூகுள் (Froogle) தொடங்கப்பட்டன. அமெரிக்க இணைய தள நிறுவனமான ஏ.ஓ.எல். (AOL) குகூள் தேடு தளத்தைப் பயன் படுத்த ஒப்புக் கொள்கிறது.

2003

அமெரிக்காவில் இயங்கும் டயலக்ட் சொசைட்டி (வட்டார மொழி குறித்து ஆய்வு மேற்கொள்ளும் நிறுவனம்) 2002 ஆன் ஆண்டில் அதிகம் பயன் படுத்தப்பட்ட சொல் “கூகுள்” எனக் கண்டு அறிவிக்கிறது. பிளாக்குகளின் காரணகர்த்தாவான பைரா லேப்ஸ் (Blogger) நிறுவனத்தை கூகுள் பெறுகிறது.

2004

மூலதன நிதி திரட்ட பங்கு ஒன்று 85 டாலர் என்ற விலையில் பங்குகளை கூகுள் வெளியிட்டது. இமெயில் சேவை ஜிமெயில் என்ற பெயரில் தொடங்கப்பட்டது. இத்துடன் டெஸ்க் டாப் சர்ச் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டது. பைகாஸா நிறுவனம் வாங்கப்பட்டது. அதன் தேடல் தொகுப்பு அட்டவணையில் உள்ள 600 கோடி ஐட்டங்கள் கூகுள் சர்ச் இஞ்சினுக்கு இணைந்தன.

2005

கூகுள் எர்த், கூகுள் டாக், கூகுள் பேஸ் மற்றும் கூகுள் பிளாக் சர்ச் ஆகியவை தொடங்கப்பட்டன. கூகுள் ரீடர் என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ். ஃபீட் ரீடர் அறிமுகமானது. கூகுள் அனலிட்டிக்ஸ் என்ற இணைய தள ஆய்வு சாதனமும் அறிமுகப்படுத்தப்பட்டது.

2006

யு–ட்யூப் நிறுவனம் கையகப்படுத்தப் பட்டது. காலண்டர், ஜிமெயில் மொபைல் மற்றும் கூகுள் பைனான்ஸ் ஆகியவை உருவாகி வெளியாயின. கூகுள் செக்அவுட் வர்த்தக நோக்கில் தரப்பட்டது. ஒரு சில பயனாளி களுக்கென கூகுள் பேஜ் கிரியேட்டர் வடிவமைக் கப்பட்டு தரப்பட்டது. ஒரு சில பிரச்சினை களுக்குப் பின் சீனாவில் கூகுள் நுழைந்தது.

2007

டபுள் கிளிக் என்னும் விளம்பர நிறுவனத்தை கூகுள் வாங்கியது. ஜைக்கு என்னும் சோசியல் மொபைல் நிறுவனத்தினயும் பெற்றது.

2008

கூகுள் பிரவுசர் குரோம் வெளியானது. வெளியான ஒரே நாளில் உலகின் மொத்த பிரவுசர் பயன்பாட்டில் 1 % மக்களிடம் சென்றது. தொடர்ந்து இந்த எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. விக்கிபீடியாவிற்கு இணையாக கூகுள் நால் (Google Knol) வெளியானது.

2009

கூகிள் தனது ஆப்பரேட்டிங் சிஸ்டத்துக்கான ( Google Chrome OS ) அறிவிப்பை வெளியிட்டது. மைக்கரோ சாப்டின் பிங்க் தேடுபொறிக்கு போட்டியாக கூகிள் Google squared எனும் தேடுபொறியை அறிமுகப்படுத்தியது.

மைக்ரோசாப்ட் / கூகுள் யார் பெரியவர்?

தகவல் தொழில் நுட்ப உலகில் எதாவது நடந்தால் உடனே அது மைக்ரோசாப்ட் நிறுவனத்துடனான மோதலாகத்தான் இருக்கிறது. கூகுள் நிறுவனம் தொடங்கி 11 ஆண்டுகள் தான் முடிந்துள்ளது. ஆனால் மைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த 31 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. மனிதனின் சிந்தனைப் போக்கையே மாற்றி அமைத்த நிறுவனம் மைக்ரோசாப்ட். எம்.எஸ்.டாஸ், எம்.எஸ். ஆபீஸ், விண்டோஸ், ஹாட்மெயில், விசுவல் ஸ்டுடியோ, மைக்ரோ சாப்ட் டெவலப்பர் நெட்வொர்க், டாட் நெட் பிரேம் ஒர்க், விண்டோஸ் மொபைல், பலராலும் இன்று விளையாடப்படும் கேம்ஸ், (Age of Empires, Halo, Microsoft Flight Simulator) எம்.எஸ்.என். லைவ் மெசஞ்சர், விஸ்டா தொழில் நுட்பம் என கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் உலகை மனித வாழ்க்கையுடன் இரண்டறக் கலந்த நிலைக்குக் கொண்டு வந்தது மைக்ரோசாப்ட் தான்.

இருப்பினும் சர்ச் இஞ்சின் என்பதனைத் தன் கையில் எடுத்து அதில் எவரெஸ்ட்டைத் தொட் டது குகூள்தான். அதனையே கம்ப்யூட்டரின் அடிப்படையாக அமைக்கத் தொடர்ந்து பாடு படும் குகூளின் திட்டம் ஒரு நாள் வெல்லலாம். அன்று மைக்ரோசாப்ட் கம்ப்யூட்டரின் நிலையையே மாற்றலாம். பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஈ-மெயில் சேவையில் முதலிடத்தில் யாஹூ

இமெயில் சேவை வழங்குவதில் எந்த தளம் அதிக வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது என்பதில் சரியான போட்டி நிலவி வருகிறது. அண்மையில் காம் ஸ்கோர் என்ற நிறுவனம் எடுத்த கணக்கின்படி கூகுள் இந்த இமெயில் ஏணியில் நான்காவது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கு வந்துள்ளது. சென்ற மாதம் இதன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 3 கோடியே 70 லட்சம். ஏ.ஓ.எல். நிறுவனம் 10 லட்சம் குறைவாகக் கொண்டு நான்காவது இடத்திற்குச் சென்றது.

சரி, முதல் இடத்தில் உள்ளது யார்? சர்ச் இஞ்சின் பயன்பாட்டினைப் பொறுத்த வரை யாஹூவின் இடத்தைக் கூகுள் பெற்றிருக்கலாம். ஆனால் இமெயில் வாடிக்கையாளர் எண்ணிக்கையில் யாஹூ தொடர்ந்து ஏறத்தாழ 10 கோடியே 40 லட்சம் பேருடன் முதல் இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் விண்டோஸ் லைவ் ஹாட் மெயில் உள்ளது. இதனைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 4 கோடியே 70 லட்சம்.

இந்த விஷயத்தில் யாஹூ முதல் இடத்தைப் பெற்றிருந்தாலும், வேகமாகப் பெருகி வரும் இமெயில் தளம் என்ற வகையில் கூகுள் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. சென்ற ஆண்டு மட்டும் இதன் வாடிக்கையாளர் எண்ணிக்கை 46% உயர்ந்துள்ளது. இதனோடு ஒப்பிடுகையில் யாஹூவின் வளர்ச்சி 22% மட்டுமே.

புதிய வசதிகளைத் தொடர்ந்து தருவதில் கூகுள் நிறுவனமே முன்னணியில் உள்ளது. இப்படியே போனால் கூகுள் இந்த பிரிவில் முதல் இடத்தைப் பெறுவது மிக எளிதான ஒன்றாக மாறிவிடும். யாஹூ தன் இடத்தைத் தக்கவைக்க கூகுளைப் போல ஏதேனும் புதுமையான வசதிகளைத் தந்து கொண்டே இருக்க வேண்டும்.

வீடியோவைச் சுருக்கித் தரும் MPEG4

திரைப்படங்களைக் கூட சிறிய சிப்களில் சுருக்கி எடுத்துச் செல்லும் வசதியை எம்பி4 என்னும் தொழில் நுட்பத்தில் அமைந்த கோப்புக்கள் நமக்குத் தருகின்றன. பாடல்களை எங்கும் எதிலும் எடுத்துச் சென்று கேட்பதற்கு நமக்கு எம்பி3 கோப்புக்கள் உதவுகின்றன. நக அளவு சிப்பில் நம்மால் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பதிந்து எடுத்துச் சென்று கேட்க முடிகிறதென்றால் அதற்குக் காரணம் ஓடியோ கோப்புக்களை சுருக்கித் தரும் எம்பி3 என்ற தொழில் நுட்பம் தான் காரணம்.

ஆனால் வீடியோ கோப்புக்கள் எப்போதும் அளவு கூடியவையாகவே இருந்து வருகின்றன. இவற்றை எப்படி ஓடியோ கோப்புக்கள் போலவே சுருக்கிப் பதியலாம் என்ற ஆவலில் நமக்குக் கிடைத்த கோப்புக்களே எம்பி4 பைல்களாகும்.

எம்பி4 கோப்புக்கள் என்பவை சுருக்கப்பட்ட வீடியோ கோப்புக்களாகும். வீடியோ கோப்புக்கள் அளவில் பெரியவை. இதனால் எடுத்துச் செல்வதில் பிரச்னை மட்டுமின்றி அவற்றை இயக்குவதிலும் பிரச்னை ஏற்படு கிறது. ஆனால் எம்பி4 வடிவில் அவை சுருக்கப்பட்டு எளிதாக்கப்படுகின்றன.

எம்பி3 கோப்புக்கள(Files) போலவே எம்பி4 பைல்களும் சுருக்கப்பட்டவையாகும். இதனால் ஒளிக் காட்சி மற்றும் ஒலியின் தரத்திற்கு எந்தவித பாதிப்பும் இருக்காது.. எம்பி 4 என்பதனை ஆங்கிலத்தில் MPEG4 AVC என அழைக்கின்றனர். இதில் AVC என்பது Advanced Video Codingஎன்பதன் சுருக்கம்.

எம்பி 3 பிளேயர் இருப்பது போல எம்பி 4 பிளேயர் இருக்கிறதா? என்ற கேள்வி உங்களுக்கு வரலாம். ஆம், இருக்கிறது. மற்ற மீடியா பிளேயர்களைப் போலவே அதுவும் செயல்படுகிறது. மேலும் எம்பி4 பிளேயரில் பழைய எம்பி3 பைல்களையும் மற்ற வீடியோ பைல்களையும் இயக்கலாம்..

எம்பி4 தொழில் நுட்பம் பல சிறப்புகளையும் சில உறுத்தல்களையும் கொண்டுள்ளது. சிறப்பு என்று கூறுகையில் அதன் தன்மைதான் முதலில் வருகிறது. எம்பி4, 1Mbps வேகத்தில் சிறந்த டிவிடி தன்மையுடன் கூடிய எம்பி4 டிவிடிக்களை உருவாக்க முடியும். இணைய(இன்டர்நெட்) இணைப்பு இருந்தால் இந்த வேகத்தில் இவற்றை பதிவிறக்கம்(டவுண்லோட்) செய்திட முடியும். ஒரு சி.டி யில் 150 இற்கும் மேற்பட்ட வீடியோ பாடல்களை எம்பி4 வடிவில் சேமிக்கலாம் என்றால் நம்புவீர்களா?.

உறுத்தல்கள் என்று எடுத்துக் கொண்டால் எம்பி4 தொழில் நுட்பத்திலேயே பல காப்புரிமை பிரச்சனைகள் இருக்கின்றன. இப்போது இணையத்திலேயே திருட்டுத்தனமாகக் பிரதி செய்யப்பட்ட திரைப்படங்கள் கிடைக்கின்றன. எம்பி4 தொழில் நுட்பம் பரவலாகும்போது விரைவாக பதிவிறக்கம் செய்திட முடியும் என்பதால் இந்த வகை திருட்டுத்தனம் இன்னும் அதிகமாகும். பொறுத்திருந்துதான் இதனைப் பார்க்க வேண்டும்.

கையடக்க தொலைபேசிகளில் வைரஸ்

கையடக்க தொலைபேசிகளில் வைரஸ்கள் பரவத் தொடங்கி உள்ளன. NOKIA வகை செல்லிடப்பேசிகளில் Sympian 60 இயக்கத் தொகுப்பு உள்ள தொடர் வகை சாதனங்களில் இது ஏற்படத் தொடங்கி உள்ளது. இது "Curse of Silence," எனத் தன்னைத் தானே அழைத்துக் கொள்கிறது.

இது பெரும்பாலும் இந்த தொடரில் 2.6, 2.8, 3.0 அல்லது 3.1 ஆகிய பதிப்புகள் இயங்கும் கையடக்க தொலைபேசிகளையே பாதிக்கிறது. இது பாதித்த பின்னர் குறுஞ்செய்திகளை (SMS) பெறுவதும் அனுப்புவதும் தடைபடுகிறது. அதே போல குறுஞ்செய்திகளுக்கும் தடை ஏற்படுகிறது. இதுவரை கிடைத்த செய்திகளின் படி இந்த வைரஸ் கீழே குறித்தபடி செயல்படுகிறது. குறைந்தது 32 எழுத்துக்கள்(Characters) கொண்ட குறுஞ்செய்தி கிடைக்கப்பெறுகிறது. இதன் முடிவில் ஒரு இடைவெளி(Space) கொடுக் கப்பட்டு ஒரு மின்னஞ்சல் முகவரி(Email) இருக்கும். இது போல குறுஞ்செய்தி கிடைக்கப்பெற்று Phone lock ஆவதிலிருந்து தப்பிக்க அடிக்கடி உங்கள் கைத்தொலைபேசியின் தரவுகளை (Phone Data) Sync செய்திட வேண்டும். உங்கள் தரவுகளையும் பத்திரப்படுத்த ( BackUp )வேண்டும். இதனை எப்படி மேற்கொள்வது என்று தெரியாதவர்கள் விசைப்பலகை மூலம் *#7370# என தட்டச்சு செய்திடவும். அல்லது இன்னொரு வழியும் உள்ளது. பச்சை நிறத்தில் உள்ள Call Key ஐயும் நட்சத்திர குறியையும் மற்றும் 3 எண் விசையும்(Key) ஒரு சேர அழுத்தவும். கையடக்க தொலைபேசிகளில் மீண்டும் ஆரம்பிக்கும் (Restart) வரை அழுத்தவும்.

இது குறித்து குறிப்பாக சோதனை நடத்தியதில் இது போல தகவல்கள்(message) 11 முறை கிடைத்தவுடன் 2.8 மற்றும் 3.1 பதிப்புகளில் இயங்கும் தொலைபேசிகள் Lock ஆகிவிடுகின்றன. குறைந்த அளவே அழைப்புக்களை(Calls) பெறும் வசதி கொண்டதாக மாறுகின்றன. 2.6 மற்றும் 3.0 பதிப்பு கொண்டுள்ள கையடக்க தொலைபேசிகள் அடுத்ததாக ஒரு செய்தியை அனுப்பியவுடன் பூட்டு(lock) ஆகின்றன. இதனை எப்–செக் யூர் நிறுவனம் சோதனை செய்து பார்த்து உறுதி செய்துள்ளது.