பேஸ்புக்குக்கும் டிவிட்டருக்கும் சவாலாக தற்போது கூகுள் வண்டு

தொட்ட இடங்களில் எல்ல்லாம் முதல்வனாக வரும் நம் கூகுளின் பெரிய சமூகவலைப்பின்னலாக வரும் கூகுள் வண்டு (இரை). பெயர் கொஞ்சம் புதிதாக தான் இருக்கிறது. வண்டு எனபது எல்லா பூக்களில் இருந்தும் இரையைத் தேடி எடுத்து அதை கூட்டில் சேமித்து வைக்கும் அதே தான் இந்த கூகுள் வண்டு (Buzz)
முதலில் இந்த கூகுள் பஸ் என்ன வேலை செய்கிறது என்று பார்ப்போம் கடந்த ஆறுமாதமாக மக்கள் தேடுபொறிகளை பயன்படுத்துவது குறைந்திருக்கிறது இதற்கு முக்கிய காரணமாக இருப்பது பேஸ்புக்கும் டிவிட்டரும் தான்.

மக்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்வது மட்டும் இல்லாமல் புகைப்படம் வீடியோ என அத்தனையையும் இதில் பகிர்ந்து கொள்கின்றனர் அதனால் மக்கள் தேடுபொறிகளை பயன்படுத்துவது கொஞ்சம் குறைந்துள்ளது இந்த பிரச்சினையை மையமாக வைத்துதான் கூகுள் லைவ் தேடுதல் வந்தது நமக்கு தெரியும் ஆனாலும் எதிர்பார்த்த அளவு பெரியதாக மக்கள் அதை பயன்படுத்துவதில்லை.

இதற்காக கூகுள் உலகிலே அதிகளவு பயன்படுத்தும் தன் ஜிமெயிலை வைத்து காய் நகர்த்தியிருக்கிறது, ஜிமெயிலில் புதிதாக வந்துள்ளது 'Buzz' என்ற வசதி இதன் மூலம் நாம் செய்தி,படம், வீடியோ மற்றும் ஃபீட்ரீடர் என்ற அனைத்து வசதியையும் ஜிமெயிலில் பயன்படுத்தலாம்.

உதாரணமாக நாம் விரும்பும் பிளிக்கர் புகைப்படத்தை நம் நண்பருடன் எளிதாக பகிர்ந்துகொள்ளலாம். அதே போல் வீடியோ,டிவிட்டர் மற்றும் ஃபீட்ரீடர் வசதியை கூட பயன்படுத்தலாம்.இதை எல்லாம் விட பெரிய சிறப்பு இந்த வசதியை மொபைலிலும் பயன்படுத்தலாம்.

இத்தனையையும் ஜிமெயிலிலே செய்யலாம் என்றால் கொஞ்சம் அல்ல அதிகமாகத்தான் ஆவல் இருக்கிறது ஆனால் இப்போது இந்த கூகுள் வண்டு பயன்படுத்த சிலருக்கு மட்டுமே அழைப்பு வழங்கப்பட்டுள்ளது.

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் திடீர் ஆபத்து

கூகுள் நிறுவனத்தின் சர்வர்களில் சில ஹேக்கர்கள் நுழைந்து மெயில்களை நாசம் செய்ததாக சில வாரங்களுக்கு முன் பெரிய அளவில் பிரச்னைகளும் அதன் பின்விளைவுகளும் நடந்தேறின. இதன் காரணமாக சீன அரசுக்கும் கூகுள் நிறுவனத்திற்கும் தகராறு முற்றி, சீனாவிலிருந்து கூகுள் வெளியேறும் எல்லை வரை இந்த பிரச்னை சென்றுவிட்டது.

கூகுள் மெயில் சர்வருக்குள் புகுந்து நாசம் செய்தவர்கள் சீனாவில் இயங்கும் ஹேக்கர்கள் தான் என்பது பலரின் வாதம். யார் என்பதைக் காட்டிலும், இந்த சர்வர் இயக்கத்தில் எங்கு பிழை ஏற்பட்டு ஹேக்கர்கள் நுழைந்தனர்? கூகுள் நிறுவனத்திற்கே இந்த கதி என்றால் நம் மெயில்கள் எல்லாம் என்ன ஆவது?

என்ற கவலை நம்மில் பலரைத் தொற்றிக் கொண்டது. இதற்கான மூலகாரணம் என்ன என்று பார்க்கும் போது, மைக்ரோசாப்ட் நிறுவனம், கூகுள் மீது ஏற்பட்ட பாய்ச்சலுக்குத் தன் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பில் உள்ள பிழைகளே காரணம் என்று ஒத்துக் கொண்டது.

அதனைச் சீர்செய்திடும் வழிகளையும் காட்டி உள்ளது. அந்த வழிகளை நாமும் பின்பற்றி நம் சர்வர்களையும், கம்ப்யூட்டர் களையும் பாதுகாத்துக் கொள்ளலாமே என்ற ஆவல் உங்களுக்கு உள்ளதா! ஆசை எழுவது இயல்பு தானே. மிக எளிதாக இந்த பாதுகாக்கும் வழியை மேற்கொள்ளலாம். அதனை இங்கு பார்க்கலாம்.

விண்டோஸ் 2000 சிஸ்டத்தில் இயங்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 5 வரை, இத்தகைய பிரச்னை எதுவுமில்லை. IE 6, IE 7, மற்றும் IE 8 ஆகிய பதிப்புகள் விண்டோஸ் 2000, எக்ஸ்பி, சர்வர் 2003, விஸ்டா, சர்வர் 2008, விண்டோஸ் 7 மற்றும் சர்வர் 2008 E2 ஆகியவற்றில் தான் இந்த பிழை உள்ளது தெரியவந்துள்ளது.

இந்த இயக்கங்கள் எல்லாமே இப்போது அபாயத்தினை எதிர்நோக்கியுள்ளன. இன்றைய நிலையில் இவற்றால் ஏற்படும் ஆபத்தினை முழுமையாகத் தவிர்க்க இயலவில்லை என்று மைக்ரோசாப்ட் ஒத்துக் கொண்டுள்ளது. இருந்தாலும் பிழை இருப்பதனை ஓரளவிற்கு மறைத்து வைக்க முடியும் என்று கூறி உள்ளது.

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பில் உள்ள Protected Mode என்பதனை இதற்குப் பயன்படுத் தலாம். இது விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் இயங்கும்போது கிடைக்கிறது. இத்துடன் Data Execution Protection என்பதனையும் இயக்கை வைக்க வேண்டும். மேலும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பில் உள்ள IE security zone I "High"என வைப்பதும் ஒரு வழியாகும்.


புரடக்டட் மோட் Protected Mode


இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பு 7ல் தரப்பட்டுள்ள புரடக்டட் மோட் (விண்டோஸ் விஸ்டா மற்றும் 7ல் கிடைக்கும்) ஹேக்கர் ஒருவர் உங்கள் கம்ப்யூட்டரில் தன்னுடைய டேட்டா அல்லது புரோகிராமினைத் திணிக்கும் வாய்ப்புகளைக் குறைக்கிறது. எனவே இந்த வழியை இயக்கி வைப்பது நல்லது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8ல் இது தானாக இயக்கிவைக்கப்படுகிறது.

ஆனால் முந்தைய பதிப்புகளில் நாம் தான் இதனை இயக்க வேண்டும். அடுத்ததாக, ஆக்டிவ் ஸ்கிரிப்டிங் இயங்குவதைத் தற்காலிகமாக நாம் நிறுத்தி வைக்க வேண்டும். இதனால் இதனை இயக்கும் முன் நமக்கு எச்சரிக்கை செய்தி கிடைக்கும். அப்போது இதனைத் தற்காலிகமாக இயக்க அனுமதிக்கலாம். ஆனால் அவ்வாறு அனுமதிக்கும் முன் இன்டர்நெட் செக்யூரிட்டி செட்டிங்ஸை "High" என செட் செய்திட வேண்டும்.

புரடக்டட் மோட் வழியை எப்படி செட் செய்வது எனப் பார்க்கலாம். IE 7 மற்றும் IE 8 பதிப்புகளில் இது மிகவும் எளிது. Tools —> Internet Options தேர்ந்தெடுத்து Security டேப்பில் கிளிக் செய்திடவும். அடுத்து Enable Protected Mode என்பதற்கு முன்பாக உள்ள பாக்ஸில் டிக் அடையாளம் ஒன்றை ஏற்படுத்தவும். இவ்வாறு அமைத்த பின் மாற்றங்களை இயக்குவதற்காக, இன்டர்நெட் எக்ஸ்புளோரரை ரீஸ்டார்ட் செய்திட வேண்டும்.

இதே போல் கம்ப்யூட்டரின் செக்யூரிட்டி ஸோனை "High" ஆக வைப்பதும் எளிது. Tools —> Internet Options தேர்ந்தெடுத்து Security டேப்பில் கிளிக் செய்திடவும். அடுத்து அங்கு காணப்படும் ஸ்லைடரை "High" என்பதை நோக்கித் தள்ளிவிடவும். இந்த செட்டிங்ஸ் இயக்கத்திற்கு வர, நீங்கள் இன்டர்நெட் எக்ஸ்புளோ ரரை மீண்டும் ரீஸ்டார்ட் செய்திட வேண்டியதில்லை.

டி.இ.பி. (DEP Data Execution Protection) இயக்க: இந்த பாதுகாப்பு வழி, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8ல் இயக்கப்பட்டே கிடைக்கிறது. அதை உறுதிப்படுத்தவும், பதிப்பு 7ல் இயக்கவும், கீழே தரப்பட்டுள்ளபடி செயல்பட வேண்டும். Tools —> Internet Options சென்று Advanced டேப்பினைக் கிளிக் செய்திடவும்.

பின் Security பிரிவுக்கு ஸ்குரோல் செய்து செல்லவும். அடுத்து "Enable memory protection to mitigate online attacks" என்று இருப்பதன் முன் உள்ள பாக்ஸில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இந்த மாற்றம் செயல்பட, இன்டர்நெட் எக்ஸ்புளோரரை மூடிப் பின் மீண்டும் இயக்கவும்.

இதனை எப்படி இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 6ல் இயக்குவது என்று பார்க்கலாம். மை கம்ப்யூட்டரில் ரைட் கிளிக் செய்து ப்ராப்பர்ட்டீஸ் தேர்ந்தெடுக்கவும். இதில் அட்வான்ஸ்டு டேப்பில் கிளிக் செய்திடவும்.

இனி Performance என்பதில் செட்டிங்ஸ் என்பதைத் தேர்ந்தெடுத்து, Data Execution Prevention என்ற டேப்பிற்குச் செல்லவும். அடுத்து "Turn on DEP for all programs and services except those I select" என்ப தனைத் தேர்ந்தெடுக்கவும். பின் Apply மற்றும் OK கிளிக் செய்து மூடவும்.

மைக்ரோசாப்ட் இணையமூடாக தானாக இயங்கும் Tool ஒன்றை தன் இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. இதனையும் டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம். இதனைப் பெற என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும். அதில் தரப்பட்டுள்ள குறிப்புகள் படி செயல்படவும்.

மேலே கண்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துவிட்டால், ஹேக்கர்களிடமிருந்து முழுமையான பாதுகாப்பு பெற முடியுமா? சந்தேகம்தான். இருப்பினும் ஓரளவிற்கு பாதுகாப்பினை இது தரும்.

மைக்ரோசாப்ட் விரைவில் இதற்கான பேட்ச் பைல் ஒன்றை வெளியிடும் என எதிர்பார்க்கலாம். இந்த செய்தியை எழுதும் நேரத்தில் இன்னும் இரண்டு நாட்களில் ஒரு ஸ்பெஷல் பேட்ச் பைல் ஒன்றை வெளியிட இருப்பதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.

ஆனால் ஜெர்மனியில் பயர்பாக்ஸ் பிரவுசர் டவுண்லோட் திடீரென அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் சீன கூகுள் ஹேக்கர் பிரச்னையால், ஜெர்மனியில் இயங்கும் இணைய பாதுகாப்பு மையம், Federal Office for Information Security, , இன்டர்நெட் எக்ஸ்புளோரரை நீக்கிவிட்டு, வேறு ஏதேனும் ஒரு பிரவுசரை இன்ஸ்டால் செய்து இயக்குமாறு அறிவித்துள்ளது.

இதனால் நான்கு நாட்களில் மட்டும் ஜெர்மனியில் 3 லட்சம் பேர் பயர்பாக்ஸ் தொகுப்பினை டவுண்லோட் செய்துள்ளனர். இதேபோல் பிரான்ஸ் நாட்டின் இன்டர்நெட் பாதுகாப்பு மையமான CERTA வெளியிட்ட அறிக்கையில், இன்டர்நெட் பிரவுசரை நிறுத்திவிட்டு வேறு பிரவுசரைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இதே போன்ற ஒரு எச்சரிக்கை ஆஸ்திரேலியாவிலும் வெளியாகியுள்ளது

உலகின் மிகச் சிறந்த பிரவுசர் - பயர்பாக்ஸ்

உலகின் மிகச் சிறந்த பிரவுசர் என்ற உரையுடன் மொஸில்லா நிறுவனம் தன் பயர்பாக்ஸ் தொகுப்பின் பதிப்பு 3.6 னை ஜனவரி 21ல் வெளியிட்டுள்ளது. இந்த பிரவுசரின் முதல் சோதனைத் தொகுப்பு வெளியான ஐந்தாவது மாதத்தில் இது வெளியாகியுள்ளது.

எப்படியும் ஒரு நல்ல பிரவுசரைத் தந்துவிட வேண்டும் என்ற வேட்கையுடன் மொஸில்லா உழைத்தது, இந்த பிரவுசரின் இயக்கத்தில் தெரிகிறது.

விண்டோஸ், மேக் மற்றும் லினக்ஸ் இயக்கங்களுக்கான பிரவுசர்கள் மொஸில்லாவின் தளத்தில் கிடைக்கின்றன. பன்னாட்டளவில் 65 மொழிகளில் இவை உருவாக்கப்பட்டுள்ளன என்பது மொஸில்லாவின் உலகளாவிய பார்வையினைக் காட்டுகிறது.

இந்த புதிய தொகுப்பினை என்ற முகவரியில் உள்ள மொஸில்லா தளத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம். ஏற்கனவே 3.5 பதிப்பு இயக்குபவர்கள், பைல் மெனு சென்று Check for Updates என்பதில் கிளிக் செய்து அப்டேட் செய்து கொள்ளலாம்.

இந்த புதிய பிரவுசரில் ஜாவா ஸ்கிரிப்ட் இயங்குவது துரிதப்படுத்தப்பட்டு, இணையதளங்கள் மிக வேகமாக இறங்குகின்றன. முந்தைய பதிப்பினைக் (3.5) காட்டிலும் 12 சதவீதம் வேகம் இருப்பதாக இதனைச் சோதனை செய்தவர்கள் கூறுகின்றனர். சோதித்துப் பார்த்ததில் 15 சதவீதம் கூடுதல் வேகம் தெரியவந்தது.

ஆப்பரா பிரவுசரைக் காட்டிலும், பயர்பாக்ஸ் 3.6 மூன்று மடங்கு அதிக வேகத்தில் இயங்குகிறது. இன்டர்நெட் எக்ஸ்புளோரருடன் ஒப்பிடுகையில், நான்கு மடங்கு அதிக வேகம் எனலாம். குரோம் பிரவுசரைக் காட்டிலும் 40 சதவீதம் பின் தங்கியே உள்ளது.

ஆனால் மெமரியைப் பயன்படுத்துவதில் குரோம் அதிக இடத்தை எடுத்துக் கொண்டு பின் தங்கியே உள்ளது. பயர்பாக்ஸ் 100.3 எம்பி இடம் எடுக்கும் தளத்திற்கு குரோம் 194.6 எம்பி எடுத்துக் கொள்கிறது.

இந்த பிரவுசரின் அடுத்த முக்கிய அம்சமாக பிளக் இன் சோதனையைக் கூறலாம். பிரவுசருக்கான ப்ளக் இன் புரோகிராம்களை பாதுகாப்பு அடிப்படையில் முற்றிலுமாகச் சோதனை செய்த பின்னரே இந்த பிரவுசர் ஏற்றுக்கொள்கிறது.

இதனால் தேர்ட் பார்ட்டி புரோகிராம்களால், பிரவுசரில் கிராஷ் ஏற்படாது. மேலும் ஏற்கனவே ஏதேனும் ப்ளக் இன் புரோகிராம் அமைக்கப்பட்டிருந்தால் (பிளாஷ், குயிக்டைம் போன்ற) அதற்கான புதிய பதிப்பு ஏதேனும், அதன் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளதா என்று பயர்பாக்ஸ் சோதனை செய்து அறிவித்து, புதிய பதிப்பினை இன்ஸ்டால் செய்து பயன்படுத்துகிறது.

ஏனென்றால் ஹேக்கர்கள் பழைய பதிப்புகள் மூலமே தங்கள் நாசவேலையை மேற்கொள்கின்றனர். புதிய பிரவுசர் வீடியோவினை முழுத் திரையில் காட்டுகிறது.

இதனைச் சோதனை செய்து பார்க்க வேண்டும் என்றால் என்ற முகவரியில் உள்ள தளம் சென்று இந்த பார்மட்டில் அமைந்துள்ள வீடியோ வினை டவுண்லோட் செய்து இயக்கிப் பார்க்கவும். இயங்கும் போது அதன் மீது ரைட் கிளிக் செய்து, முழுத்திரைக்கான பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும்.

இந்த பிரவுசரில் இணைய தளங்கள் வேகமாக இயங்குகின்றன. இந்த வேகம் நன்றாகவே தெரிகிறது. அடுத்ததாக புதிய ஸ்கின்களை (பெர்சனாஸ்) இந்த பிரவுசர் ஏற்றுக் கொண்டு அவற்றைச் சிறப்பாக வடிவமைக்கிறது.

பயர்பாக்ஸ் பிரவுசருக்கு ஏறத்தாழ 35,000 டிசைன்களில் பெர்சனாஸ் கிடைக்கிறது. இந்த பிரவுசரில் இவற்றை நிறுவுவதும் எளிது. பெர்சனாஸ் இணைப்பது இப்போது எளிதாக்கப்பட்டுள்ளது.

பெர்சனாஸ் காலரி சென்று, அதில் ஒரு பெர்சனாவின் மீது மவுஸின் கர்சரைக் கொண்டு சென்றால், அதற்கான ஸ்கின் அடிப்படையில், பயர்பாக்ஸ் தன் தோற்றத்தைத் தற்காலிகமாக மாற்றும். அது உங்களுக்குப் பிடித்திருந்தால் உடனே கிளிக் செய்திடலாம். அல்லது மற்றவற்றைச் சோதனை செய்து பார்க்கலாம்.

ஒன்றுக்கு மேற்பட்ட பெர்சனாஸ் பதியப்பட்டால், அவை மெனுவாகக் கிடைக்கின்றன. தேவைப் பட்டதனைத் தேர்ந்தெடுத்தால் அது உடனே அமைக்கப்படுகிறது. பயர்பாக்ஸ் முதலில் அறிமுகமானபோது யு–ட்யூப் வீடியோ தளம் இல்லை. குயிக் டைம், விண்டோஸ் மீடியா அல்லது ரியல் பிளேயரின் துணையை நாட வேண்டியதிருந்தது.

யு–ட்யூப் வீடியோ தளம் வந்த பின்னர் அதனை ஒருங்கிணைக்கும் வகையில் பிரவுசர்கள் மாற்றி அமைக்கப்பட்டன. மேலும் இதன் மூலம் இன்டர்நெட் பார்க்கும் ரசிகர்களே தங்கள் விருப்பத்திற்கேற்ப தளங்களை எளிதாக அமைக்கவும் மாற்றவும் முடிகிறது. பயர்பாக்ஸ் 3.6 பிரவுசரில் வீடியோ தளங்களை நேர்த்தியாகக் கையாள முடிகிறது.

பயர்பாக்ஸ் பிரவுசரைப் பொறுத்தவரை, அதன் ஆட் ஆன் புரோகிராம்கள் பிரசித்தி பெற்றவை. இதன் கட்டமைப்பு ஓப்பன் சோர்ஸ் என அனைவரும் அறியும் வகையில் அமைந்திருப்பதால், திறமை கொண்ட பல புரோகிராமர்கள் இதற்கான ஆட் ஆன் தொகுப்புகளை இலவசமாகத் தொடர்ந்து தந்து கொண்டிருக்கின்றனர். பயர்பாக்ஸ் பயன்படுத்தும் அனைவரும் ஏதாவது ஒரு ஆட் ஆன் தொகுப்பினை இன்ஸ்டால் செய்து பயன்படுத்தி வருகின்றனர்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் இன்டர்நெட் பிரவுசர்களின் கட்டமைப்பில் பெரிய அளவில் மாற்றங்கள் இருப்பதனை உணரலாம். பயர்பாக்ஸ், சபாரி, குரோம், ஆப்பரா மற்றும் முதல் இடத்தில் இயங்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் என அனைத்துமே, எதிர்காலத்தில் வெப் அப்ளிகேஷன்கள் எப்படி முன்னேற்றமடையும் என்பதைக் கவனத்தில் கொண்டே, தங்களின் பிரவுசரை வடிவமைத்துள்ளன.

இணைய தளங்களை வடிவமைப் பவர்களுக்கு இந்த புதிய வகை பிரவுசர்கள் அதிகம் துணை புரிகின்றன. சூப்பர் வேகத்தில் ஜாவா ஸ்கிரிப்டை இயக்குவது,புதிய சி.எஸ்.எஸ்., எச்.டி.எம்.எல். 5 தொழில் நுட்பம், டவுண்லோட் செய்யக் கூடிய எழுத்து வகைக்கு சப்போர்ட், ஆப் லைன் அப்ளிகேஷன் சப்போர்ட் நேடிவ் வீடியோ எனப் பல புதிய தொழில் நுட்ப வசதிகளைத் தரத் தொடங்கியுள்ளன.

இவை இணையத்தைப் பயன்படுத்துவோருக்கும், இணைய தளங்களை வடிவமைப்போருக்கும் மிகவும் பயனுள்ளதாய் அமைந்துள்ளன.