மகளிருக்கும் 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை அறிமுகப்படுத்துகிறது சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி) அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ஆடவருக்கான உலகக் கிண்ணப் போட்டியுடன் இதுவும் நடைபெறுமென ஐ.சி.சி. அறிவித்துள்ளது.
இலங்கை உட்பட 8 நாடுகள் மகளிருக்கான போட்டியில் விளையாடும். இந்தியா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள் ஆகியன மற்றைய நாடுகளாகும்.
ஆடவருக்கான போட்டிகள் லோர்ட்ஸ், ஓவல் மற்றும் டிரென்ட்பிரிட்ஜ் மைதானங்களில் நடத்தப்படவுள்ளது. தற்போது டான்டனும் அப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. அங்கு மகளிருக்கான போட்டிகள் நடைபெறும்.
No comments:
Post a Comment