சனி கிரகத்தின் நிலவில் தண்ணீர்

சூரிய குடும்பத்தில் உள்ள 9 கிரகங்களில் 2-வது பெரிய கிரகம் சனி. சூரியனில் இருந்து 142 கோடி கி.மீ. தூரத்தில் சனி கிரகம் உள்ளது. சனி கிரகம் பற்றி ஆராய அமெரிக்காவின் நாசா நிறுவனம் `காசினி' என்ற விண்கலத்தை 1997-ம் ஆண்டு அனுப்பியது.

7 ஆண்டுகளுக்கு பிறகு 2004-ம் ஆண்டில் காசினி விண்கலம் சனி கிரகத்தின் அருகே சென்ற டைந்தது. அங்கு அது ஆய்வுகளை மேற்கொண்டது.

பூமிக்கு துணை கோளாக சந்திரன் இருப்பது போல சனி கிரகத்துக்கு துணை கோளாகவும் சனிக்கிரகத்தின் சந்திரனாகவும் டைட்டான் கிரகம் உள்ளது.சனி கிரகத்தின் நிலவில் (டைட்டான்) தண்ணீர் இருப் பதற்கான ஆதாரங்களை காசினி விண்கலம் அனுப்பி வைத்துள்ளது.

காசினி விண்கலம் அனுப்பிய படங்களில் நூற்றுக்கணக்கான ஏரிகள் போன்றும் பள்ளத்தாக்குகள் போன்றும் காணப்படுகின்றது. இதில் தண்ணீர் இருப்பதை நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர்.

டைட்டானில் மீத்தேன், ஈத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்பன்களும் இருக்கின்றன என்பதையும் நிபுணர்கள் உறுதி செய்துள்ளனர்.

1 comment:

ராஜ நடராஜன் said...

சனி கிரகம் புடிச்சதுன்னு திட்டித்தான் கேள்விப்பட்டிருக்கேன்.கிரகத்துல தண்ணியும் கிடைச்சதுன்னா கட்டாயம் கிரகம் பிடிக்கும்.