வீடு தேடி வந்த முதலை

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ஒரு முதலை அங்குள்ள ஒரு வீட்டிற்கு அழையா விருந்தாளியாக வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டதாம்.

புளோரிடாவில் உள்ள வோல்டுஸ்மார் என்ற இடத்தில் சான்ட்ரா புரோஸ்டி என்ற மூதாட்டி வசித்து வருகிறாராம். எலி, கரப்பான் போன்ற பூச்சிகளை பார்த்தாலே பயந்து ஓடும் அந்த மூதாட்டியின் வீட்டிற்குள் 8 அடி நீளம் கொண்ட முதலை ஒன்று நேற்று முன்தினம் இரவு புகுந்து விட்டதாம்.

பின்பக்க வழியாக வீட்டிற்குள் வந்த அந்த முதலை ஒவ்வொரு அறைக்கும் விஜயம் செய்து விட்டு கடைசியில் சமையல் அறைக்குள் நுழைந்து விட்டதாம். பின்னர் வனவிலங்கு அதிகாரிகள் வந்து அந்த முதலையை மீட்டுச் சென்றார்களாம்.

No comments: