இசையை ரசிக்கும் டால்பின்

டால்பின் மீன்களுக்கு இசையை கேட்டு ரசிக்கும் ஆற்றல் இருப்பது தெரிந்த விஷயம்தான். அதனால் தானோ என்னவோ புதிய எம்.பி.3 இசைக் கருவிக்கு, டால்பின் பெயரை வைத்துள்ளனராம்.

தைவான் நாட்டில் சர்வதேச ஹைடெக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் பல ஹைடெக் சாதனங்கள் காட்சிக்கு வைக்கப்பட் டுள்ளன. அவற்றில் ஒன்று டால்பின் எனும் பெயரில் அறிமுகமாகி உள்ள எம்.பி.3 பிளேயர் ஆகும்.

இந்த எம்.பி.3 பிளேயரை மாடல் அழகி ஒருவர் மீன் வளர்க்கும் தொட்டியில் அறிமுகம் செய்தார். காரணம் அந்த எம்.பி.3 பிளேயர் தண்ணீரில் மூழ்கினாலும் செயல் பட கூடிய வகையில் வாட்டர் புரூப் தன்மை கொண்டதாக உருவாக்கப் பட்டு இருப்பதுதான்.

No comments: