இத்தாலியில் உள்ள புகழ் பெற்ற பைசா கோபுரம் கடந்த 800 ஆண்டு களில் முதல் முறையாக சாய்வதை நிறுத்தி கொண்டுள்ளதாம். இத்தாலியின் பைசா நகரில் உள்ள கோபுரம் நவீன உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
800 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட இந்த கோபுரம் லேசாக சாய தொடங்கியது. இதனால் இந்த கோபுரம் சாய்ந்த கோபுரம் என்றே அழைக்கப்பட்டு வந்தது. அதன் பிறகு இந்த கோபுரம் சாய்வதை தடுக்க பல விதமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த கோபுரம் சாய்வதை தடுக்க நவீன திட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இதன் விளைவாக இந்த கோபுரம் தற்போது சாய்வதை முழுவதும் நிறுத்தி விட்டதாக பொறியியல் வல்லுனர்கள் அறிவித்துள்ளனர்.
கடந்த 800 ஆண்டு காலத்தில் கோபுரம் தற்போதுதான் முதல் முறையாக சாய்வதை நிறுத்தி உள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இன்னமும் 200 ஆண்டுகளுக்கு இந்த கோபுரம் சாயாமல் நிலையாக நிற்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இதற்காக கோபுரத்தின் வடக்கு பகுதியில் இருந்து 70 டன் மண்ணை அகற்றியுள்ளனர்.
No comments:
Post a Comment