அரிசி உமியில் மின்சாரம்.....

அரிசி உமியில், மின்சாரம் தயாரிக்க முடியும்; இலகு ரக விமானம் தயாரிக்க முடியும்; குண்டு துளைக்க முடியாத கட்டடத்தை கட்ட முடியும்!ஆம், மலேசிய பெண் விஞ்ஞானி ஹாமில்டன் ஹாம்டான் கண்டுபிடிப்பு, வியாபார ரீதியாக கிடைக்கும் போது, இதெல்லாம் சாத்தியப்படும்!மலேசிய விஞ்ஞானி ஹாமில்டன்; மலேசிய பல்கலைக்கழகத்தில் இப்போது, வேதியியல் பேராசிரியை. அமெரிக்காவில் இருந்து மலேசியா திரும்பியபோது, ஒரு வித்தியாசமான செய்தியை படித்தார்.

"ஏரோஜெல்' என்ற ரசாயன விந்தைப்பொருள் பற்றிய கட்டுரை அது. "சிலிகா' என்ற ரசாயனத்தில் இருந்து தயாரிக்கப்படும் "ஏரோஜெல்' மூலம், மின்சாரம் தயாரிக்கலாம்; இலகு ரக விமானம் வரை கூட, எந்த பொருட்களையும் தயாரிக்கலாம்' என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக ஆராய்ச்சியை துவங்கினார் ஹாமில்டன். எட்டாண்டுக்குப் பின், சமீபத்தில் தன் ஆராய்ச்சியில் வெற்றி கண்டுள்ளார். அரிசி உமியில் இருந்து, "சிலிகா'வை தயாரிக்கலாம். அதை வைத்து "ஏரோஜெல்' தயாரித்து, புது வித ரசாயன பொருளை உருவாக்கலாம். அதைக்கொண்டு மின்சாரம் தயாரிக்கலாம்; குண்டு துளைக்காத கட்டடங்களை கட்டலாம்; விமானம் தயாரிக்கலாம் என்று கண்டுபிடித்தார்.

"ஏரோஜெல்' புதிதல்ல; 1931ம் ஆண்டில் அமெரிக்கா உட்பட சில நாட்டு விஞ்ஞானிகள், இதை கண்டுபிடித்து, பயன்படுத்தியுள்ளனர். 1999ம் ஆண்டு, அமெரிக்க "நாசா' விண்வெளி விஞ்ஞானிகளும், தங்கள் செயற்கைக்கோளில் பயன்படுத்தியுள்ளனர்.மணலில் இருந்து "சிலிகா' கிடைக்கிறது. அதை, "ஏரோஜெல்'லாக உருவாக்க ஏகப்பட்ட செலவு பிடித்தது. அதனால் அதை பயன்படுத்துவதை விஞ்ஞானிகள் கைவிட்டனர்.மணலுக்கு பதிலாக அரிசி உமியில் இருந்து "சிலிகா' தயாரிக்கலாம் என்று ஹாமில்டன் கண்டுபிடித்துள்ளார்.

இதுகுறித்து ஹாமில்டன் கூறுகையில், "நான் கண்டுபிடித்துள்ளதில், உமியில் இருந்து கிடைப்பது 99 சதவீதம் காற்று தான். அதன் மூலம் மின்சாரம் தயாரிக்கலாம்; பின் வெளிப்படும் வெள்ளை பவுடரில் இருந்து பிளாஸ்டிக் போல, பல்வேறு இலகுரக சாதனங்களை செய்யலாம்; குண்டு தகர்க்க முடியாத வகையில் கட்டடங்களில் சாதனங்களாக பயன்
படுத்தலாம். இன்னும் சில ஆண்டுகள் இதுகுறித்து முழு ஆய்வு செய்த பின், வர்த்தக ரீதியாக தெருக்கு தெரு கிடைக்கும் பொருளாக இது ஆகி விட வேண்டும் என்பது தான் என் கனவு' என்கிறார்.

No comments: