மனிதனுடன் மல்லுக்கட்டும் மனித இயந்திரம்


கொரிய நாட்டைச் சேர்ந்தவர்கள் நுண்ணறிவுள்ள மல்லுக்கட்டும் மனித இயந்திரம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இந்த Robo Arm - Wrestler என்ற மனித இயந்திரத்தை பல்கலைகழகத்தின் இயந்திரவியல் மற்றும் அறிவுசார் அமைப்பு உருவாக்கியுள்ளது. இந்த இயந்திரம் மனிதருக்கு உண்மையான ஒருவருடன் மல்லுக்கட்டுவது போன்ற உணர்வைத் தருகிறது.

இதில் முகத்தில் எச்சில் துப்புதல் போன்றவை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. புத்திசாலித்தனமான இந்த இயந்திரம் ஒருவரின் நடத்தை, திறன் மற்றும் சுபாவம் போன்றவற்றைப் பொறுத்து வெற்றியை நிர்ணயிக்கிறது. சில நேரங்களில் இந்த மனித இயந்திரம் உங்களை வெல்லும் வாய்ப்புகளும் உண்டு. உங்களின் கைகளில் பாதிப்பையும் ஏற்படுத்தலாம். வயது ஆனவர்கள் உடற்பயிற்சி செய்ய இந்த இயந்திரம் மிகவும் உதவியாக இருக்கிறது. இந்த மனித இயந்திரம் நமக்காகத் தேநீர் தயாரிக்கவும் இடத்தை தானாக துப்புரவு செயவும் குடியாது. நம்ப முடிகிறதா ?