2015 இல் நாசா நிறுவனம் சூரியனுக்கு விண்கலத்தை ஏவும்........
பால் வெளி மண்டலத்திலுள்ள சூரிய கிரகத்தை பற்றி ஆய்வு செய்வதற்காக விண்கலம் ஒன்றை அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா 2015ம் ஆண்டில் விண்ணுக்கு ஏவவுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.
இதேவேளை அமெரிக்காவும், ரஷியாவும் இதுவரை செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய கிரகங்களுக்கும், சந்திரனுக்கும் விண்கலங்களை அனுப்பி ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளபோதும். சூரியனுக்கு விண்கலங்களை இது வரை எந்த நாடும் அனுப்பியது கிடையாது. சூரியன் பூமியில் இருந்து வெகு தொலைவில் இருப்பதும், அதன் வெப்பநிலையும் சூரியனுக்கு விண்கலத்தை அனுப்புவது குறித்து நினைத்துபார்க்க முடியாத நிலையை விண்வெளி ஆய்வு விஞ்ஞானிகள் மத்தியில் ஏற்கனவே ஏற்படுத்தி இருந்தது. ஆனால் தற்போது அந்த எண்ண கருவுக்கு முரணான வகையில் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி கழகம் சூரியனுக்கு விண்கலத்தை அனுப்ப முடிவு செய்து உள்ளது. சூரியனுக்கு விண்கலத்தை அனுப்பி ஆராய்ச்சி செய்வது சூரியனை பற்றி நாம் அறிந்ததை விட அதிகமான தகவல்களை நமக்கு வழங்கும் என்றும் , இந்த கண்டுபிடிப்பு பெரும்புரட்சியை ஏற்படுத்தும் என்றும் அறிவியல் அறிஞர்கள் நம்புவதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது.
அத்துடன் ரூ.3 ஆயிரம் கோடி செலவில் 2600 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்தை தாங்கக்கூடிய அளவு வெப்பதடுப்பு தகடுகள் மூலம் பாதுகாக்கப்பட்ட விண்கலம்,நேர்த்தியான முறையில் சூரியனை அணுககூடிய விததில் வினாடிக்கு 125 மைல் வேகத்தில் சூரியனை சுற்றி வரகூடிய வாறும் , அமெரிக்க விஞ்ஞானிகளால் விண்கலம் தயார் படுத்தபட்டுள்ளதாகவும் நாசா அறிவித்துள்ளது.
சூரியன் பற்றிய ஆராய்ச்சிக்கான திட்ட மேலாளராக ஆன்ட்ரூ டான்ட்ஸ்லர் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த பெப்ரவரி மாதம் விண்கல வடிவமைப்பு வேலைகள் பூர்த்தி அடைந்துள்ளதும், சூரிய சக்தி மூலம் இயங்கும் இந்த விண்கலத்தின் எடை 453 கிலோ ஆகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment