பீனிக்ஸ் (விண்ணூர்தி)


பீனிக்ஸ் (Phoenix) என்பது செவ்வாய் கோளில் ஆய்வுகள் மேற்கொள்ளுவதற்காக விண்ணுக்கு ஏவப்பட்ட ஆளில்லா தானியங்கி தளவுளவி ஆகும். செவ்வாய்க் கிரகத்தில் ஆய்வுகள் நடத்த தேவையான பல கருவிகள் இக்கலத்தில் உள்ளன. இவற்றைக் கொண்டு செவ்வாயில் உயிரினங்கள் மற்றும் நீர் போன்றவற்றின் வரலாறுகள் பற்றியும் இவற்றைக் கொண்டு ஆய்வுகள் நடத்த அறிவியலாளர்கள் திட்டமிட்டிருக்கின்றனர்.

நாசா ஆய்வு மையத்தின் அநுசரனையுடன் அரிசோனா பல்கலைக்கழகத்தினால் ஆகஸ்ட் 4, 2007 05:26:34 நேரத்திற்கு டெல்டா II ராக்கெட் மூலம் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் கேப்கெனரவல் விமானப்படைத் தளத்தில் இருந்து விண்ணுக்கு வெற்றிகரமாக ஏவப்பட்ட பீனிக்ஸ் தளவுளவி மே 25, 2008இல் செவ்வாயில் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஐக்கிய அமெரிக்கா, கனடா, சுவிட்சர்லாந்து மற்றும் ஜேர்மனி பல்கலைக்கழகங்கள், நாசா, கனடா விண்வெளி ஆய்வு மையம் ஆகியவற்றின் ஒரு கூட்டுத் திட்டமாகும். செவ்வாய்க் கிரகத்தின் உறைபனி அதிகம் உள்ள வடமுனையில் இக்கலம் தரையிறங்கி தானியங்கி (ரோபோ) கரங்கள் மூலம் மண்ணைத் துளைத்து மண்மாதிரிகளை எடுத்து வரும்.

பீனிக்ஸ் விண்கலம் 18 அடி நீளமும் 5 அடி அகலமும் கொண்டது.

பீனிக்ஸ் இருவகையான நோக்கங்களைக் கொண்டு ஆய்வுகளை மேற்கொள்ளும். முதலில் செவ்வாய்க் கோளின் மண் மாதிரிகளை ஆய்வு செய்து அவற்றைக் கொண்டு செவ்வாயில் நீரின் வரலாறு மற்றும் காலநிலை மாற்றம் போன்றவற்றை ஆய்வு செய்யும். மற்றையது நிலத்தின் அடியில் பனி-மண் எல்லையில் உயிரினங்கள் வாழ்வதற்கேற்ற பகுதியைக் கண்டறிவதும் ஒரு நோக்கம் ஆகும்.

No comments: