விண்வெளி கங்காரு

ஆஸ்திரேலியாவில் விழிப் புணர்வை ஏற்படுத்தும் வகையில் விண்வெளி கங்காருவை உருவாக்கி காட்டியுள்ளனராம்.

அந்நாட்டில் உள்ள மெல்பர்ன் நகரில் 32 மீட்டர் நீளம் உள்ள ராட்சத கங்காருவை மாணவர்களை கொண்டு உருவாக்கியுள்ளனராம். இந்த கங்காருவை உருவாக்கிகொண்டிருக்கும் போது 2 செயற்கை கோள்கள் அதன் மீது பட்டு விண்வெளிக்கு செல்லும் சூரிய ஒளியை மதிப்பிடுமாம்.

இவ்வாறு பூமியிலிருந்து எந்த அளவுக்கு சூரிய ஒளி பிரதிபலிக்கப்படுகிறது என்பதை மாணவர்களுக்கு உணர்த்தும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாம். புவிவெப்பமாதல் உள்ளிட்ட பல்வேறு சுற்றுச்சூழல் பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கங்காருவை, விண்வெளி கங்காரு என்று அழைக்கின்றனராம்.

No comments: