ஒளிப்படத்தை எழிலாக்க உதவும் தளங்கள்
நமது வாழ்க்கையின் பல நிகழ்வுகளை, மீண்டும் மீண்டும் நமக்கு நினைவு படுத்துவது நாம் எடுத்து வைத்திருக்கும் புகைப்படங்கள் தான். அத்தகைய புகைப்படங்கள் பொலிவுடன் மாற்ற போட்டோ ஸ்ரூடியோவிற்குக் கொண்டு சென்று சிலமாற்றங்கள் செய்தால் நிறைய செலவாகும். இத்தகைய சிக்கலைப்போக்கவும், நாம்விரும்பிய வண்ணம் புகைப்படத்தை இலவசமாக மாற்றவும் Flauntr என்னும் இணையத்தளம் பயன்படுகிறது.
இந்த இணையத்தளம் வழங்கும் வசதிகள் மூலம் நமது புகைப்படங்களுக்கு விதம் விதமான ஃப்ரேம்களை பொருத்தலாம். மேலும் குறைந்த ஒளி முதல் பளிச் என்னும் ஒளி வரை மாற்றி, நிறங்கள் பலவற்றை கொடுத்து நமது புகைப் படத்தை மேலும் மெருகூட்டலாம்.
இதேபோல் Reflection Maker என்ற இணையத்தளம் நமது புகைப்படத்தை புதுப்பொலிவுடன் மாற்றப் பயன்படுகிறது. இந்த வசதியைப்பயன்படுத்தி 200 KB புகைப்படத்தைப் பிரதிபலிக்கச் செய்யலாம். இந்த இணையத்தளத்தில் நாம் மாற்ற வேண்டிய புகைப்படத்தை அளித்து, அதில் மாற்ற வேண்டிய வண்ணங்களை மாற்றி OK கொடுத்தால் போதும் புகைப்படம் புதுப்பொலிவுடனும் மற்றும் அத்ன் நிழற்படமும் பிரதிபலிக்கும்