இப்படித்தான் சிப் தயார் செய்யப்படுகிறது.


ஆயிரக்கணக்கான கோடுகளைக்கொண்ட மிக நுண்ணிய சுற்றுகள் எப்படி மெல்லிய சிலிக்கன் சில்லுகளில் வரையப்படுகின்றன. ௧00 வருடங்களுக்கு முன்னமே மேப் மற்றும் நிலம் வரைபடங்கள் வரைவதற்கும், அச்சுத்தொழிலில் பிரதி எடுப்பதற்கும் பயன்படுத்திய அதே போன்ற நுட்பத்தைத்தான் சிப்புக்கள் தயார் செய்யப் பயன்படுத்துகின்றனர். அக்காலத்தில் செப்புத்தகட்டில் மிக மெல்லிய மெழுகைத்தடவி அந்த மெழுகின் மேல் எந்த வரைபடம் தேவையோ அதனை வரைவார்கள். பின்பு வரைபடம் வரைந்த பகுதிகளில் உள்ள மெழுகை அகற்றுவார்கள். பிறகு அதன் மீது நைத்திரிக் அமிலத்தை ஊற்றுவார்கள். எங்கெல்லாம் மெழுகு நீக்கப்பட்டுள்ளதோ அங்கெல்லாம் அமிலம் சென்று செப்புப் பகுதியை அரித்துவிடும். இதனால் செப்புத்தகட்டில் கோடுகளும் பள்ளங்களும் வரைபடத்திற்கேற்ப உருவாகிவிடும். இதன் பிறகு மெழுகினை நீக்கிவிட்டு செப்புத்தட்டிலுள்ள கூடுகளிலும் பள்ளங்களிலும் மையை ஊற்றுவார்கள். பின்னர்
தாள்களை இந்த செப்புத்தகட்டின் மீது ஒற்றி எடுத்தால் பிரதிகள் கிடைக்கும்.

இதுபோன்ற சிப் தயார் செய்யும் போதும் சுற்றுக்களை சிலிக்கன் சில்லுகளில் வரைகின்றனர். முதலில் சிலிக்கன் வார்ப்பு ஒரு பெரிய சிலிண்டர் போன்று கிடைக்கும். இதனை மிக மெல்லிய சிலிக்கான் சில்லுகளாக வெட்டுவார்கள். இந்தச் சில்லுகளின் மேற்பகுதியை மிகுந்த வெப்பத்திற்கும், ஒட்சிசன் வாயு மண்டலத்திற்கும் உட்படுத்தி சிலிக்கன் டைஒட்சைட்டாக மாற்றுவார்கள். இவ்வாறு மாற்றப்பட்ட சிலிக்கன் சில்லுகளின் மீது பழைய காலத்தில் மேலுக்கு பயன்படுத்தினார்களே அதே போன்று போட்டோ பெசிஸ்ட் எனப்படும் ஒரு வேதிப் பொருளைத் தடவுவார். இந்தப் பொருள் ஒளி பட்டால் கரையும் தன்மையை அடையும். எந்த சுற்று வரையப்பட வேண்டுமோ அதனை மாஸ்க் தயார் செய்வர் . இது பிரதி எடுக்கும் போது ஸ்டென்சிலில் உள்ள துளை வழியாக எவ்வாறு மை நுழைகின்றதோ அது போல ஒளி மாஸ்க்கில் வரையப்பட்ட சுற்று வழியாகச் செல்லும்.

சிப் தயார் செய்ய புற ஊதாக்கதிர்கள் சுற்றிலிருந்து பெறப்பட்ட மாஸ்க் வழியாகச் செலுத்துகின்றனர். மாஸ்க் வழியாக வரும் ஒளியை போட்டோ ரெஸிஸ்ட் தடவப்பட்ட சிலிக்கன் சில்லு மீது படத்தின் அளவைக் குறைக்கக் கூடிய பல வில்லைகள் வழியாக செலுத்துகின்றனர். இது நாம் ஜெராக்ஸ் எடுக்கும் போது பக்கத்தின் அளவைக் குறைத்து சின்னதாக ஜெராக்ஸ் எடுப்பது அது போலத்தான். இப்படித்தான் பெரிய சுற்றின் விம்பத்தை மிகச்சிறிய சிலிக்கன் சில்லில் உருவாக்குகின்றார்கள்.

தற்போது புதுமாதிரியாக வில்லைகளுக்குப் பதிலாக எதிரொலிக்கும் கண்ணாடிகளைப் பயன்படுத்துகின்றனர். புற ஊதாக்கதிர்கள் பட்ட இடங்கள் மீதுள்ள போட்டோ டெசிஸ்ட் வேதிப்பொருள் துணை கொண்டு அகற்றிவிடலாம். இதனால் ஏற்படும் பல முகடுகள் பல்வேறு கோடுகளால் இணைக்கப்பட்டிருக்கும். இந்தக் கோடுகளில் உலோகத்தை அணுக்களாக படியச்செய்வார்கள். இவ்வாறு ஒரு அடிக்கு உருவாக்கப்படும்.ஒரு மைக்ரோ ப்ரொசெசர் சிப் இது போன்று 20 அடுக்குகளையாவது - அதாவது ஒவ்வொரு அடுக்கும் பல முறைகளில் இணைக்கப்பட்ட ஒரு பெரிய சுற்று ஆகும். இதில் கிடைக்கக்கூடிய விம்பம் மிகவும் தரமானதாக இருக்கும். தரமான ஒளி என்பது புற ஊதாக்கதிர்களே. வெறும் கண்ணால் காண இயலாத இந்த ஒளியானது மிகவும் குறைந்த அலைநீளமுடையது.

தற்போது புற ஊதாக் கதிர்களுக்குப் பதிலாக ஒளி வீசும் பிளாஸ்மாக்கதிர்களைப் பயன்படுத்தும் சிப் தயார்செய்யும் மையங்கள் உள்ளன. இதனால் 13 நனோ மீற்றர் அளவில் கோடுகளை சிலிக்கன் சில்லுகளில் உருவாக்க இயலும். இதனால் மிக அதிகமான பயன்பாடுகளைக் கொடுக்கக்கூடிய, மிகவும் பெரிய சுற்றுக்களை, எளிதாக செய்ய இயலும்.

சிப் தயார் செய்வதென்பது மிகவும் சிக்கலான வேலை. இந்த வேலையில் மேலே கூறப்பட்ட ஒவ்வொரு கட்டம் போன்று கிட்டத்தட்ட 300 கட்டங்களைக் கடந்த பின் தான் சிப் உருவாகின்றது. நூற்றுக்கணக்கான ஒரெ மாதிரியான சுற்றுக்களை ஒரு சிலிக்கான் சில்லில் ஒரெ முறையில் உருவாக்கி விடுவார்கள். பின்பு இந்தச் சில்லுகளில் உள்ள ஒவ்வொரு சுற்றையும் தனித்தனியாக தனித்தனியாக வெட்டி எடுத்து அதன்மேல் பாதுகாப்பான பிளாஸ்டிக் உறை மற்றும் இணைப்புப் பின்கள் கொடுத்து அவற்றை பரிசோதனை செய்கின்றனர். இதன் பின்னர் தான் சிப்கள் இலத்திரனியல் கருவிகளில் பயன்படுத்தத் தயார் நிலையை அடைகின்றது.