மலைப்பாம்புகள் பிராணிகளை அப்படியே விழுங்கிவிடும் என்று கேள்விபட்டிருக்கிறோம். ஆனால் ஆஸ்திரேலியாவில் ஒரு மலைப் பாம்பு முட்டை என்று நினைத்து பந்துகளை விழுங்கிவிட்டதாம்.
பண்ணை வீடு ஒன்றில் பாம்பு ஒன்று முட்டை என்று நினைத்து கோல்ப் விளையாட பயன்படும் பந்துகளை விழுங்கிவிட்டதாம்.
சுமார் ஒரு அடி நீளம் கொண்ட அந்த பாம்பின் வயிற்றில் நான்கு இடங்களில் வீக்கம் ஏற்பட்டதை பார்த்த ஒரு தம்பதி உடனடியாக அந்த பாம்பை குவின்ஸ்லாந்தில் உள்ள பிராணிகள் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றார்களாம்.
அங்குள்ள மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து பாம்பின் வயிற்றில் இருந்த பந்துகளைஅகற்றினார்களாம். அறுவை சிகிச்சை செய்யாமல் இருந்திருந்தால், பந்துகளை விழுங்கிய பாம்பு பரலோகம் போயிருக்கும் என்கிறார்களாம் அதற்கு ஆபரேஷன் செய்த மருத்துவர்கள்.
No comments:
Post a Comment