புலிப்பூனை

புலியும் பூனை இனத்தை சேர்ந்ததுதான் என்றாலும் எந்த பூனைக்கும் புலியின் குணாதிசயம் வந்துவிட வாய்ப்பில்லை. ஆனால் இத்தாலி நாட்டிலோ தோற்றத்தை பொறுத்தவரை புலியோடு போட்டிப் போடக் கூடிய பருமனான பூனை ஒன்று இருக்கிறதாம்.

அந்நாட்டை சேர்ந்த லாரா என்னும் அம்மணி வளர்த்து வரும் இந்த பூனை வழக்கமான பூனைகள் போல் இல்லாமல் சாப்பாடு விஷயத்தில் ஒரு கை பார்த்து விடுகிறதாம்.

எந்த உணவுப் பொருளையும் விடாமல் சாப்பிடும் பழக்கம் கொண்டிருப்பதால் இந்த பூனை கொழுகொழுவென்று வளர்ந்து விட்டதாம். இதன் காரணமாக இந்த பூனை மிகவும் பருமனாக காணப் படுகிறதாம்.

இந்த பூனையை ஆசையோடு தூக்கி கொஞ்ச வேண்டும் என்று நினைத்தாலும் அது சவாலான செயலாக இருக்குமாம்.

No comments: