முழுக்க முழுக்க பெண் விமானிகள் மற்றும் பெண் ஊழியர்களை கொண்டு, சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட்டு சென்றது. விமானத்தை புதிய தலைமை விமானியான சமிலி கொரட்டபள்ளி இயக்கினார். இதில் 188 பயணிகள் பயணம் செய்தனர்.
எயர் இந்தியா எக்ஸ்பிரஸ்Õ நிறுவனத்தில் 76 விமானிகள் உள்ளனர். அவர்களில் 6 பேர் பெண்கள். இவர்களில் சமிலி கொரட்டபள்ளி என்ற பெண் விமானி, ஏர் இந்தியா எக்ஸ்பிரசில் முதல் பெண் கமாண்டராக (தலைமை விமானி) பதவி உயர்வு பெற்றுள்ளார்.
அவரை பாராட்டும் வகையில், முழுக்க முழுக்க பெண்களைக் கொண்டே சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு விமானத்தை இயக்க ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவ னம் முடிவு செய்திருந்தது.
அதன்படி, நேற்று பிற்பகல் 2.25 மணிக்கு சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தை (ஐஎக்ஸ் 662) ஷமிலி தலைமை விமானியாக இருந்து இயக்கினார். துணை விமானி, பணிப் பெண்கள் என முழுவதும் பெண்களைக் கொண்டே இயக்கப்பட்ட இந்த விமானத்தில் 188 பயணிகள் பயணம் செய்தனர்.
முன்னதாக, சமிலி சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறுகையில், ÔÔநமது நாட்டில் பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம்.
பெண்களால் முடியாதது எதுவுமில்லை என்பதை நிரூபிக்கும் விதத்தில் நாங்களே தனியாக விமானத்தை இயக்கி சிங்கப்பூர் சென்றுவிட்டு மீண்டும் சென்னைக்கு இன்று இரவு திரும்ப உள்ளோம். ஆண்கள் துணை இல்லாமல் விமானத்தை இயக்குகிறோமே என்ற அச்சம் சிறிது கூட எங்களிடம் இல்லைÕÕ என்றார்.
இதுபோல, கடந்த மார்ச் மாதம் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, சென்னையில் இருந்து கொழும்பு சென்ற இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை முழுக்க முழுக்க பெண்களே இயக்கினர். அதன்பின்னர், இப்போது 2வது முறையாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தை பெண்களே இயக்குகின்றனர்.
No comments:
Post a Comment