ஒரு ஓவரில் 6 பந்துகளையும் 6 விதமாக வீசுவேனென்று இலங்கையின் சுழற்பந்து வீச் சாளர் அஜந்த மென்டிஸ் கூறியுள்ளார். இலங்கையில் நடை பெறவுள்ள இந்தியஇலங்கை கிரிக்கெட் தொடருக்கு முன்னணி சுற்றுலா நிறுவனமான "டிராவலார்க் ஹாலிடேஸ் ' நிறுவனத்தை அதிகாரபூர்வ சுற்றுலா முகவராக இலங்கை கிக்கெட் சபை நியமனம் செய்துள்ளது.இந்த நிறுவனம் 5 ஆயிரத்துக்கு மேற்பட்டோரை இலங்கைக்கு அழைத்துச்சென்று இந்திய அணிக்கு ஆதரவு தெரிவிக்கவும், பல்வேறு சிறப்பு சலுகைகளை அளிக்கவும் திட்டமிட்டுள்ளது.
இது பற்றிய தகவல் சென்னையில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில் தெரிவிக்கபட்டது. இதில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கப்டனும், இலங்கை கிரிக்கெட் சபைத்தலைவருமான அர்ஜூன ரணதுங்கவும் கலந்துகொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற இலங்கை அணியின் "புதிய ஹீரோ' வான சுழற்பந்து வீச் சாளர் அஜந்த மென்டிஸ் கூறியதாவது:
ஆசியக் கிண்ண கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியதால் என் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஒரு நாள் போட்டியிலிருந்து டெஸ்ட் கிரிக்கெட் முற்றிலும் மாறுபட்டது.டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு நான் புதுசு.
நான் ஒருஓவரில் 5 விதமாக பந்து வீசி வருகிறேன். இப்போது 6 ஆவது பந்திலும் வித்தியா சத்தை காட்டும் வகையில் முயற்சி மேற்கொண்டுள்ளேன். முரளிதரன் எனக்கு முன்னோடி மாதிரி. அவருடன் இணைந்து பந்து வீச விரும்புகிறேன். அவருடன் சேர்ந்து இந்திய முன்னணி வீரர்களான டெண்டுல்கர், ராவிட், கங்குலி,லட்சுமண் போன்றோருக்கு பந்து வீசுவது எனக்கு கிடைத்த கௌரவமாகும். டெண்டுல்கர்,விக்கெட்டை கைப்பற்ற வேண்டுமென்ற ஆசை உள்ளது. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment