எனக்கு நான்தான் போட்டி

"எனது மனதைக் கவர்ந்தது மைக்கேல் ஜாக்ஸனின் இசையும் ஸ்டைலும்தான்" என்றார் ஏ.ஆர்.ரஹ்மான்.

இதுபற்றி அவர் கூறியதாவது:

ஒவ்வொரு படத்திலும் முத்திரை பதிக்க வேண்டும் என்று எண்ணுவேன். யாருடனும் நான் போட்டிப் போடவில்லை. எனக்கு நான்தான் போட்டி. ஒவ்வொரு முறையும் என் இசையில் முன்னேற்றம் செய்கிறேன்.

பொதுவாக சொந்த குரலில் பாட வேண்டும் என்று எண்ணுவதில்லை. பாட வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அதிர்ஷ்டவசமாக அது ஹிட்டாகி விடுகிறது. பாடுவதற்கு என்னதான் சுதந்திரம் இருந்தாலும் அதற்காக எனது உழைப்பை குறைத்துக் கொள்வதில்லை.

சர்வதேச அளவில் புகழ்பெறுவதற்கு எந்த அக்கறையும் எடுத்துக் கொள்வதில்லையே என்கிறார்கள். எதற்காக அக்கறை எடுக்க வேண்டும்?. நான் அமைக்கும் இசை சில நேரம் உலகதரத்துக்கு அமைகிறது. அதற்காக பிரத்யேகமாக கவனம் எடுப்பதில்லை. இந்தியாவில் பாப்புலராக இருப்பதில் சந்தோஷம்.

இங்கு சில மாற்றங்களுக்கு நானும் காரணமாக இருக்கிறேன். நமது துறை பெரிய அளவில் சிறப்பான முன்னேற்றம் கண்டிருக்கிறது. இசை அமைப்பதில் ஆர்வம் அதிகரித்திருக்கிறது. படைப்பாளிகளும் வித்தியாசமான முயற்சியில் ஈடுபடுகின்றனர். இங்கு வாழ்வதும், பணிசெய்வதும் வரப்பிரசாதம். மைக்கேல் ஜாக்ஸனின் இசையும், ஸ்டைலும் என்னை பெரிதும் கவரும். அவருடைய இசையை ரசிப்பதை மிகவும் விரும்புகிறேன்.

இவ்வாறு ஏ.ஆர்.ரகுமான் கூறினார்.

No comments: